பகுத்தறிவு பிறந்தது..!! பேஸ்புக் நிலைத்தகவல் பதிவிற்காக பிளாக்கரில்...

பகுத்தறிவு என்ற பெயரில் எந்த ஒரு மதத்தின் சமயநெறிகளையும் முற்றிலுமாக உடைத்தெறிய வைப்பதில் எந்த ஒரு "வெங்காயமும்" விளையப்போவது இல்லை.. மாறாக அனைத்து மதத்தையும் இணைத்திட மானூட கட்டமைப்பை வலிமைப்படுத்த முயற்சியுங்கள் " பகுத்தறிவு சிங்கங்களே!!" 

இந்து சமயமோ அல்லது மற்ற இதற மத நல்லிணக்கங்களோ மனிதர்களது வாழ்வியலை நெறிபடுத்த தோன்றிய மகத்தான விசயங்களே என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.. 

கடவுள் மறுப்புக் கொள்கைகளில் நீங்கள் வேறூன்றி இருப்பதால் மட்டும் பகுத்தறிவு பயன்தந்துவிடாது.. அனைத்து விழாக்களையும் கொண்டாட பழகுங்கள்.. வேண்டுமானால் அதில் கட்டுப்பாடுகளை நவீனம் கருதி புகுத்திக்கொள்ளுங்கள்...

விழாக்கள் கொண்டாடுவதற்கே!!!

என்ற, எனது நிலைத்தகவலை தொடர்ந்து நண்பர் ஒருவருடனான விவாதமானது பின்வறுமாறு தொடர்ந்தது.,

//எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்பதை ஏற்பதற்க்கில்லை எனினும், விழா கொண்டாடுங்கள் விழா கொண்டாடுங்கள் என்று தோழர் குறிப்பிடுகிறார் ஊர்கூடி இழுக்கும் தேரைக்கூட சாதி பார்த்து இழுக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் சமூகத்தில் கொண்டாடுங்கள் விழாக்களை, 

ஊருக்குள் ஒரு அய்யனார் சேரிக்கு ஒரு அய்யனார் என்று தனித்தனி விழாக் கொண்டாடுங்கள்,

குலத்துக்கு ஒரு சாமி, சாதிக்கு ஒரு கோவில் எல்லோரும் விழா கொண்டாடுங்கள்,

ஊரும் சேரியும் தனித்தனியாய் இருக்கட்டும் என்ற ஒப்பற்ற நெறியை சொல்லியதை விழாவா கொண்டாடுங்கள்,

பகுத்தறிவாளர்களே கண்ணை மூடிக்கொள்ளுங்கள் நாங்கள் விழாக்கொண்டாட வேண்டும்.

நிச்சயம் என் குல தெய்வத்தை எல்லோரும் வணங்கி அருள் பெறட்டும் என்கிற என்னம் இருப்பின் அது தவறில்லை, அது சாதியின் அடையாளம் இருப்பின் அது தவறில்லையா??, நீங்கள் தென்மாவட்டங்களில் பார்த்தீர்களேயானால் சுடலை மாடன் மேல் சாதியினருக்கு என்று ஒருவர் தலித்துகளுக்கு என்று ஒருவர் இது முரண்பாடில்லையா? இது ஓட்டுமொத்த கொண்டாட்டங்களுக்கும் ஒற்றுமைக்கும் வழிகோலுமா??, தேர் பிரச்சனை இல்லவே இல்லை என்கிறீர்களா? ///Thozhirkalam Arunesh   : சாதியை ஒழிக்க சொல்வதில் தவறில்லை தோழரே,,, சரி விடுங்க உங்க பேச்சுக்கே வைச்சுப்போம்... ஜாதி இருக்கறதால தான் ஒரு சில மாவட்டங்களில் சண்ட நடக்குதுன்னு சொல்றீங்க..

சரி ஜாதிய அழிச்சிடலாம். ஆமா பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அப்டி என்ன சாதி ப்பிரச்சனை காரணமா அமைஞ்சு போச்சு,, அவிக என்ன சாதி,, நாம என்ன சாதி...? எதுக்கு சண்ட வளக்கனும்..?

உங்கள் பகுத்தறிவு கொள்கைகளில் சில, கண்மூடித்தனமான மூடப்பழக்கவழக்கங்களுக்கு ஒத்ததாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள்...

சாதியால் எந்த ஒரு தீங்கும் இல்லை,,,, அது அவர் அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப தானக உருவாக்கப்பட்ட ஒரு சாதாரணமான வார்த்தை அவ்வலவு தான்... சிறூபான்மையினர் ஒடுக்கப்படவில்லை,, அவர்களாகவே ஒடுங்கி இருக்கிறார்கள்,,. உங்கள் பகுத்தறிவால் அவர்களுடைய அறியாமையை போக்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்து சிந்திக்க வேண்டுமே தவிர சாதி அழிப்பு நோக்கி மட்டுமே சிந்திக்க கூடாது... 

கருவை விடுத்து உருவை அழிக்க விரும்பினால் கரப்பான் பூச்சியை கூட சீக்கிரமா கொல்ல முடியாது... என்பதை வழியுறுத்த விருப்பியே சாதிய மறுப்பு கொள்கைகளில் நிலைப்பாட்டை எடுத்தேன்...

///நண்பர் அவர்கள் இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் என்ன சாதி என்று கேள்வி எழுப்புகிறார், எந்த பிரச்சனையும் இல்லாமலா வருகிற வருமானத்தில் பாதியை ராணுவத்துக்கு ஒதுக்கி விட்டு மக்களை வாழ்வற்ற ஏழைகளாய் அலைவிட்டிருக்கிறார்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான மதப்பிரச்சனை இதனை உலகம் அறியும் நீங்களும் அறிவீர்கள், 

சாதியால் எந்த தீங்கும் இல்லை என்று எப்படி சொல்ல முடிகிறது உங்களால் தொழிலுக்கு ஏற்ப சாதி வகுத்தார் என்கிறீர்கள், இன்றைய சூழலில் சொல்லுங்கள் எல்லாத்தரப்பு மக்களும் ஓட்டுனாராக பணிபுரிகிறார்கள், தொழில் நுட்ப பிரிவில், ஆசிரியராக,இன்னமும் பல்வேறு பணிகளில் பணிபுரிகிறார்கள் இப்போது அவரவர் பணிபுரியும் வேலைக்கு ஏற்ப சாதி மாறிவிட்டதா அந்த சாதாராண சொல் எப்படி ஒரு மனிதனின் அடையாளமாய் மாறிப்போய்விட்டதே? ஏன் இன்னமும் மாறவில்லை அவரவர் தொழில்படி.

அறியாமையை போக்க வேண்டும் என்கிறீர்கள் எது அறியாமை அதைப்போக்கும் வழிதான் என்ன என்று தான் கூறுங்களேன்

கருவை விடுத்து உருவை ‍ எதுதான் கரு உங்கள் பார்வையில் விளக்குங்கள் நண்பரே.///

Thozhirkalam Arunesh // இரு நாடுகளுக்கும் இடையேயான மதப்பிரச்சனை இதனை உலகம் /// நிச்சயாம இல்லை,, மதம் காரணமல்ல... காரணம் தான் கரணம்... புரியவில்லையா..?

சில தலைவர்களின் ஆட்டுவிக்கும் சக்திக்கு கேடயாமாக இருப்பது தான் மதமும், சாதியும். மக்களின் ஒற்றுமையை தவறாக பயன்படுத்துகிற
ார்கள். அவர்களுக்கு தேவையான காரணம் அது மதமோ, சாதியாவோ இருந்துவிடுகிறது.

மதம் தான் காரணம் சண்டைக்கு என்றால் மற்ற இதர நாடுகள் நட்பு பாராட்டாமயா நம்முடன் இருக்கிறது? 

ஒன்றுபடாத கருத்துக்களை கொண்ட இரு தலைமைகளின் தனிப்பட்ட விரோதப்போக்கே, நாளடைவில் பெரிய அளவில் ஒரு புற்றுநோயைப்போல இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் பரவி விடுகிறது. 

இங்கே கருவாக நான் பாவித்தது, அந்த ஆதரவாளர்கள் உண்மையை புரிந்துகொண்டு ஏன்? எதற்கு? என்ற எந்தை எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். துரோகிகளை புறந்தள்ள வேண்டும்.. அதைவிடுத்து மக்கள் ஒன்றுபடவே கூடாது.. ஒன்றாக இருந்தால் தானே அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று ஒற்றுமையை குழைக்க "பகுத்தறிவையும்" பயன்படுத்தாதீர்கள்!!!!

மது ஒழிப்புக்கு தீர்வு மரத்தை வெட்டுவது இல்லை. அதன் தவறை புரிந்துகொள்ள வைப்பதே!!!

( மன்னிக்கவும்.. இங்கே சாதாரண மக்களுக்கு சான்டல்யனின் சிந்தனைகள் புரியாது என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் கடவுளை படைத்திருக்கிரார்கள். பெருந்தலைவரின் நல்ல அறிவுரைகளை ஏற்காத பாமரன் கூட விரத நாட்களில் "சாமி"க்கு பயந்து மது, மாமிசத்தை தொடாமல் இருப்பான். இதை ஆரோக்கியமான சிந்தனையில் புகுத்துவதை ஆதரியுங்கள்... நமது இலக்கியங்களும், இதிகாசங்களும் பொக்கிசங்கள்.. நீங்கள் சாதி சமய மறுப்புகளின் பேரில் அதையும் இழக்க போராடுகிறீர்கள் ? )

இன்னும் பேசலாம்.. என்னை அழைத்தமைக்கு நன்றி!! ஆரோக்கியான நம் நட்புடன் தொடர்வோம்.
Read more ...

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?

      வலைப்பதிவு தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் அல்லது புதிதாக துவங்கி இருந்தாலும் உங்கள் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் தரும் பின்னூட்டங்களை கொண்டே அவர்களை தொடர்பில் வைத்திருக்க முடியும்.

       உங்கள் வாசகர்கள் உங்களிடம் தகவல்கள் பெற விரும்பினால் அல்லது உங்களை எளிதில் தொடர்பு கொள்ள உங்கள் வலைப்பக்கத்தில்,   இணையத்தளங்களை போல ( Contact US ) கான்டக்ட் அஸ் பக்கம் தனியாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா..?

குறிப்பு : பிளாக்கர் தளங்களை பயன்படுத்துவர்களுக்கு இப்பொழுது கான்டாக் அஸ் - கெட்ஜெட் தனியாகவே கிடைக்கிறது, இருப்பினும் இந்த முறையின் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் தள வாசகர்களின் கருத்துகளை பராமரிக்கவும் பயன்படுத்தவும் முடியும்.


www.drive.google.com மூலம் முதலில் உங்களுடைய கூகுள் மெயில் கணக்கை பயன்படுத்தி உள்நுழைந்து கொள்ளுங்கள். ( படம் 1.0 )


 முதன் முதலாக உங்கள் டிரைவ் கணக்கில் நுழைந்ததும் கீழ்கண்டவாறு தோற்றமளிக்கும்.

     கவனிக்க, : இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் தற்போதைய 2013 அப்டேட் ஆகும்.

படம் 1.0
2. இடது புறம் காணப்படும்  மெனுவை சொடுக்கி அதில் ஃபார்ம் என்பதை தேர்ந்தெடுங்கள் ( படம் 1.1 )
படம் 1.1
3. இப்பொழுது உங்கள் பெயரிடப்படாத ஃபார்ம் தயாரிக்கும் பக்கம் தோன்றும். கூகுள் டிரைவ் சில வடிவமைப்புகளை உங்களுக்கு காண்பிக்கும். ( படம் 1.2 ) அவைகள் உங்கள் பக்கத்திற்கு பொருத்தமாக இருப்பின் அதில் ஒரு வடிவமைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், இல்லை என்றால் அதை புறக்கனித்துவிட்டு ஃபார்ம் கிரியேசன் பக்கத்திற்கு  வாருங்கள்

படம் 1.2
பிறகு உங்களுக்கு தெரியும் பக்கத்தில் கீழ் கண்டவாறு தேவையான தகவல்களை உள்ளிடுங்கள். ( படம் 1.3 )
Question Type :  அம்புக்குறி மூலம்  பல வகை தேர்வுகள் உங்களுக்கு கிடைக்கும், அதில் 
டெக்ஸ்ட் என்பதை சொடுக்கிக் கொள்ளவும். ( பார்க்க படம் 1.4 ). பிறகு வரும் 


படம் 1.3


 குறிப்பு :  Required question என்பதில் உள்ள டிக் மார்க் கண்டிப்பாக இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தும்

4. பிறகு " Done " என்பதை சொடுக்கி அந்த கேள்வியை முடித்திவிட்டு  மேலும் அடுத்த கேள்வி உருவாக்க கீழே உள்ள செலக்டேட் பாக்ஸ் மூலம் அடுத்த கேள்வியை உண்டாக்குங்கள். அதிலும் டெக்ஸ்ட் என்பதை தேர்ந்தெடுத்து, 

கவனிக்க,  நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு  தேர்வும் ஒவ்வொரு விதமான வேலையை உண்டாக்கிறது. உதாரணமாக ஒரு வார்த்தையில்  பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு  டெக்ஸ்ட் என்பதையும் , ஒரு பத்தியில் தேவைப்படும் பதிலுக்கு பாராகிராப் என்பதையும் தேர்வு செய்யுங்கள். மேலும் காணப்படும்  சில ஆப்சன்களை சொடுக்கி  அவைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக மூன்று டெக்ஸ் பாக்ஸ்களை உருவாக்கி முறையே 1. பெயர், 2.மின்னஞ்சல், 3.பொருள் என்றவாறு உள்ளீடு செய்துகொள்ளுங்கள். 

படம் 1.4


5. அடுத்ததாக செலக்சன் பாக்சில் ( படம் 1.4 ) பாராகிராப் என்றும்  தலைப்பில் "விபரம்" என்று கொடுத்து நான்காவது கேள்வியையும்   கொடுத்து நிறைவு செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளும் சரியாக உள்ளதா என சோதித்து கொள்ளுங்கள். மாற்றம் இருப்பின், ஒவ்வொரு கேள்விக்கும் வலது  புறம் அதை திருத்த, பிரதி செய்ய அல்லது நீக்கி விட இருக்கும்  பட்டைகளை ( படம் 1.5 ) பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

படம் 1.5படம்  1.6

6. இறுதியாக கீழே உள்ள send form என்பதை சொடுக்கி ( படம் 1.6 ) விரும்பினால் சமூக தளங்களில் சேர் செய்துகொள்ளுங்கள் அதற்கு முன்பாக நமக்கு முக்கியாக இதை வலைப்பூவில் பயன்படுத்த தேவையான HTML கோடை பெற Embed என்பதை சொடுக்கி வரும் குறும்பெட்டியில் உள்ள  HTML  நிரலியை பிரதியெடுத்துக்கொள்ளுங்கள். ( படம் 1.7 )

படம் 1.7


படம் 1.8

7. பிரதி எடுத்த HTML நிரலியை ( படம் 1.8 ), வலைப்பூவில்  தேவையான இடுகையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாம் இப்பொழுது கான்டக் அஸ் ஃபார்ம் தயார் செய்துகொண்டிருப்பதால் அதை இடுகையில் பகிராமல், உங்கள் வலைப்பூ கணக்கில் நுழைந்து பக்க மெனு வழியாக புதிய பக்கத்தை துவங்கி அதில் HTML ஆப்சன் ( பார்க்க படம் 2.0 ) மூலமாக பிரதி எடுத்த கோடை இங்கே பதிந்துகொள்ளுங்கள்.  பிறகு வழக்கம் போல பப்ளிஸ் செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கிய பட்டியலில் உள்ள  கேள்விகள் அனைத்தும் உங்கள் வலைப்பூவில் வெளியாகி இருக்கும். இனி உங்கள் வலை தளத்திற்கு  தேவையான கான்டக் அஸ் ஃபார்ம் தயார்.


படம் 2.0  ( பிளாக்கர் டேஸ்போர்டு வழியே உள்நுழைக )
கீழ்கண்டவாறான பக்கம் உங்கள் வலைப்பூவில் உருவாகி இருக்கும் சோதித்துக்கொள்ளுங்கள் ( படம் 2.1 )
படம் 2.1 
     சரி, எல்லாமே சரியாக செய்துவிட்டோம் அல்லவா,,,,? நாம் உருவாக்கிய பக்கத்தில் யாராவது உள்ளீடு செய்தால் அதை எப்படி பார்ப்பது?  கவலையே வேண்டாம்   அவ்வாறு யாரெல்லாம் உள்ளீடு செஞ்சாலும் உங்கள் டிரைவ் பக்கத்தில் எக்செல் பார்மெட்டில் எளிதா பார்த்துக்கலாம். அதற்கு திரும்பவும் உங்கள் டிரைவில் உள்ள ஃபார்ம் அப்ளிகேசனை திறந்துகொள்ளுங்கள்.  ( படம்  3.0 )

படம் 3.0

படம் 3.1
படம் ல் உள்ளது போல மெனு பாரில் உள்ள Responses  மெனுவை சொடுக்கி கீழ் வரும் பட்டியலில் Choose Response Destination ஐ தேர்வு செய்து அதில் New Spead Sheet என்பதை சொடுக்கி கிரியேட் பொத்தானை அழுத்தவும் ( படம் 3.1 ).  இப்பொழுது கடைசி வேலையும் முடிந்து விட்டது. 


     இனி வழக்கம் போல உங்கள் வலைத்தளம் மூலம் உங்களை அனுகும் அனைத்து கேட்புகளையும், கூகுள் டிரைவில் ( படம் 4.0 )உருவாகி இருக்கும் Spread Sheet ஃபைல் மூலம்  அறிந்துகொள்ளுங்கள் ( படம் 4.1 ).

படம் 4.0படம் 4.1

பொதுவாக டெக்னிக்கல் பதிவுகளை எழுத தனி திறமை வேண்டும் என்பார்கள். 
இப்பொழுது நானும் உணர்கிறேன். இனி வரும் பதிவுகளில் இன்னும் எளிய முறையில் உங்களுக்கு புரியும்படி எழுத முயற்சிக்கின்றேன்.  தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்


Read more ...

திருப்பூரில் டாலர் நகரம் - வாருங்கள் சகாக்களே!!

      மிகச்சிறந்த படைப்புகளை நாள்தோறும் நாம் வலைத்தளங்களில் படித்து வருகிறோம். அந்த வகையில் எனக்கு நல்ல குருவாகவும் அண்ணனாகவ்வும் இருந்து அவ்வப்போது தலையில் குட்டு வைத்து ஆலோசனைகளை இலவசமாக கொடுத்து வரும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்களின் முதலாவது மற்றும் திருப்பூரின் உண்மை முகத்தை எடுத்துச் சொல்லும்

" டாலர் நகர்" நூல் வெளியீட்டு விழா, 

ஜனவரி மாதம் 27 ஆம் தேதி, திருப்பூர், பல்லடம் ரோடு, டி.ஆர்.ஜி. ஹோட்டலில் நடக்க இருக்கிறது. (அன்று எனது பிறந்த நாளும் கூட,, அண்ணன் கிட்டே யாரும் சொல்லிடாதிங்க் அவருக்கும் தெரியாது : D)


      4தமிழ்மீடியாவில் அவர் எழுது வந்த  டாலர் நகரம் படைப்பை அவர்களே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.. 

காரணம் ஜோதிஜியின் எழுத்தாற்றல். 
    
   அவரிடம் பேசும் பொழுதே அவரின் ஆற்றலை கண்டு நிறைய வியந்திருக்கிறேன்.

நேரம் தவறாமை, துல்லியமான கணக்கீடு என்று மனுசர் எப்பப் பாரு கோடு போட்டு என்னை பெண்டு  எடுக்கிறார். ஆனால் அவரின் இந்த பண்பே என்னை மேலும் அவருடன் ஒட்ட வைத்து வருகிறது.

     டாலர் நகர் கைக்கு வந்ததுமே மூன்று நாள் லீவு போட்டு படித்துவிட முன்பதிவும் செய்துவிட்டேன். திருப்பூர்காரன் என்பதால் மட்டும் அல்ல, இந்த புத்தகத்தில் முதலாளிகள்,  தொழிலாளர்கள், வியாபார மாற்றங்கள் என்று பல்வேறு நிலைகளில் உள்ளவர்களின் மனநிலை பற்றியும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் தனது பார்வையில் ஒரு சேர்த்து வைக்க வேண்டிய பொக்கிசமாக தொகுத்து தந்திருக்கிறார். ஒரிரு பக்கங்களை புரட்ட தந்திருந்தார் அதில் கிடைத்த தகவல்களிலே இன்னும் எனது ஆச்சரியங்கள் அகலாமல் இருக்கிறது.

    அன்பு அண்ணனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் அனைவரையும்  வரவேற்கிறேன்.


Read more ...

இவ்வளவு தானா உங்கள் நோக்கம்?

        தொழிற்களத்தின் கட்டமைப்பை துவங்கியதில் இருந்தே எனது இந்த வலைப்பூவை தொடாமல் இருந்தேன். மிதமிஞ்சிய, எனது  மனதிற்குள் பாதித்திருக்கும் சில விசயங்களை உங்கள் அனைவருடனும் நேரடியாக பகிர்ந்திடவே இந்த பதிவு.

        எரிமலையும், கடலும் அமைதியாக இருப்பதற்காக அதனிடம் நாம் எப்படி அஜாக்கிரதை கொள்ளாமல் அதன் வீரியத்தை அறிந்து வியந்து நிற்கிறோமோ? அதே போலவே தான் இந்த இணைய உலகமும். இதன் பலனை, பலத்தை  முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் நாம் நம்மின் இன்றைய நேரங்களை வீணடித்தோமேயானால், வரலாற்றில் நமது தலைமுறையினர்களின் பெயர்களும் தவறிழைத்தவர்களின் பட்டியலில் சென்று சேரும்.  

    தமிழும் இணையமும், சமுதாயமும் இணையமும், தொழிலும் இணையமும்  என்ற  மூன்று தலைப்புகளின் கீழும் இந்த பதிவை நீங்கள் வாசிக்க முடியும். ஆனால் நான் இந்த பகிர்வுக்கு இவ்வளவு தானா உங்கள் நோக்கம்? என்று கேட்டதற்கான காரணத்தையும் பதிவின் இறுதியில் சொல்கிறேன்.


"பிறம்மகற்பம் என்பது, ஒன்றை தொடர்ந்து கிட்டதட்ட இருபத்தி ஒரு சுழியங்கள்   வரும் கோடிக்கோடி என்ற எண்ணிக்கையை குறிக்கும் தமிழ்ச் சொல்" உலக  மொழிகளில் எதிலும் இந்த எண்ணிக்கையை குறிக்கும் சொல் இல்லை என்று கூகுள் தேடுபொறி தேடல் கூட சொல்லி தமிழன் தம் நுட்பத்தையும், பெருமையையும் பீற்றிக்கொள்கிறது.

ஆம், திரை கடல் ஓடியும்  திரவியம் தேடு என்ற எம் பாட்டனின் பாட்டன்கள் உலகம் முழுவதும் எம் தமிழன் கால் தடத்தை  பதித்து வெற்றி அரசாண்ட வரலாற்று காலங்களை நினைவில் கூற விரும்புகிறேன்.

     சங்கம் வளர்த்த தமிழ் இன்று வருமானத்திற்காகவும், வாய்ப்புக்காகவும் மட்டுமே எக்கி நிற்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது. 

முத்தமிழின் சுவை உணர்ந்த வெள்ளையனும் இங்கே வீரமாமுனிவனாகி உள்ளான். எம் தலை உணரா உறவுகளோ தன் பலம் அறியாது அரியனைக்கு அடுத்தவனை தேடுகிறது.


     தமிழில் கோடிக்கணக்கான இலக்கியங்கியங்களை நாம் படைத்திருக்கிறோம். ஏன்? "உலகிலேயே அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே படைப்பு திருக்குறள் மட்டுமே!!" உலகின் பத்துகோடி தமிழர்களில் பத்து தலைமுறைக்கு பின்னரும் ஒற்றை வள்ளுவனை மிஞ்சவில்லையோ?


எப்படி அய்யா தமிழ் வாழும்? நீர் சொன்ன முயலும் ஆமையும் இங்கே முயலாமை என்றெல்லவா பதியப்பட்டிருக்கிறது? நாங்கள் ஏன் எங்கள் சிந்தனையை தமிழில் பதிக்க வேண்டும்.

தமிங்கிழம் படைப்போம் தடைகளை உடைப்போம் என்பதல்லவா எங்களின் தாரக மந்திரம்?

ஒன்றுக்கும் உதவாத ஊறுகாயல்லவா உங்கள் தமிழ் என்று பிரித்து பேசும் புதிய தலைமுறை நாங்கள்(?)!

இந்த எண்ணக்கள் தானே எங்கள் பதிவில் இருக்கும்.

      முகநூல் இருந்தும்  வீண் அரட்டைக்கு எங்கள் வலைப்பூவைத் தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்று அடம்பிடிக்கும் குழந்தையல்லவா நாங்கள்?

     உலகம் முழுவதும் ஐம்பதனாயிரத்திற்கும் மேலான தமிழ் வலைப்பதிவர்கள் உருவாகி இருந்தாலும் எங்களுக்குள் கூட்டல், கழித்தல்,  வகுத்தல்  கணக்குகளை பகிர நூறு அல்லது ஐநூறு பதிவர்களை மட்டும் தான் தெரிந்து வைத்து தொடர்ந்து தொடர்பில் வைத்து எங்களுக்குள் ஒற்றுமையுடன் செயல்பட்டு(?) நீயா  நானா என்ற ஏற்ற தாழ்வு பாராது ஒருவருக்குக்கொருவர் உற்சாக(பான)ம் கொடுத்துக் கொள்வோம். 

எந்த உரிமையை கேட்டுப் பெறவும் ஒரு கூட்டம் வேண்டும். 
66-ஆ னாலும் இ-- னாலும் ஒரு வார்த்தை ஏதிர்த்து பேச எனக்கு எப்படி தன்னந்தனியாளாய் தைரியம் வரும்?

       ஆங்கிலத்தைச் சாடி எனக்கு பிழைப்பு நடத்த தெரியும், ஆம், விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தின் 264 உலக மொழிகளில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் கட்டுரை ஆங்கிலத்திலும் பிற நாட்டு மொழிகாளிலும் இருந்தாலும் சங்கம் வளர்த்த தமிழன் விக்கிப்பீடியா தகவல்  களஞ்சியத்தில் உலக மொழிகளில், ....இல்லை ....இல்லை வேண்டாம் இந்திய மொழிகளில் மூன்றாவது இடத்தில்.

 பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். ஆம், எமது நாற்பத்தி ஒன்பதனாயிரம் கட்டுரைகளை தாண்டி, பங்காளிக்காரன் தெலுங்கில் எம்மை முந்தி இரண்டாவது இடத்தில் இருந்தால் பரவாயில்லை தானே??? 

அப்பப்பா மூன்றாவது இடம்...! கை தட்டுங்கள். ஆங்கிலத்துடன் போட்டி போட வேண்டியது இல்லையே??
தைரியமும், தன்னம்பிக்கையும், தெளிவையும் கொடுக்கும் வலைப்பதிவதால். ஆனாலும் இன்னும் தற்கொலைகளையும், கற்பழிப்பையும் தடுக்க நல்ல பதிவுகளுக்கு கருத்திட மட்டும் நேரம் இல்லை எமக்கு.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஓரு பிரபல பதிவரின் பதிவு சொன்னது, ஆங்கில பதிவுகளுக்கு மட்டும் ஆட்சென்சை நிப்பாட்டினால் அப்புறம் பாருங்கள் அவர்களில் எத்தனை பேர் கடையை மூடப்போகின்றார்கள் என்றார். 

உண்மைதானே? ஒரு  மணி நேரம் வலைபதிய  எமக்கு இருபது ரூபாய் செலவாகிறது, நான் ஏன் பதிய வேண்டும்.? எனக்கு சொந்தமாக தொழில்நுட்பமோ, அறிவியலோ, ஆன்மீகமோ, மருத்துவமோ தெரியாது, தெரிந்தாலும் தமிழ்  தட்டச்சு என் விசைப்பலகை உள்வாங்க மாட்டேன் என்கிறதே?

இணையம் தொழிலும் செய்யுமாம்? எங்கே செய்துதர சொல்லுங்கள் பார்ப்போம்.


     நான் கடந்த ஆறு வருடங்களாக பதிந்து வருகிறேன். நான் எதற்காகவும் புதிதாக எவரையும் வலைபதிய வற்புறுத்தாத தனிமை விரும்பி(?)

     ஒற்றுப்பிழையும் தொற்றுப்பிழையும் முதலில் கண்டு பிடித்து குற்றம் சொல்லி வளரும் நக்கீரனாய் பிழையை சொல்வது திருந்தத்தானே தவிர, தனி மனிதனை சாடுவதெல்லாம் எமக்கு தெரியாது(?).

      மன்னிக்க, இவ்வளவ்வு வரிகளும் யாரையும் புண் படுத்தவோ அல்லது புலமையை வெளிப்படுத்தவோ இங்கே நான் பதியவில்லை. மனதில் சில ஆதங்கம், உங்களிடம் பகிரவே எனது தனி வலைப்பூவில் சந்தித்திருக்கிறேன்.

    ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை முடித்து சமூகத்தில் நுழைகிறார்கள். என்னிடம் அலைபேசிய எத்தனையோ மாணவர்களில் பெரும்பாலும் வேலை கேட்டு பேசியவர்கள் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலை மாணவர்களே!! 

இன்று வழிகாட்ட ஆளில்லாமல் இந்த இளைஞர்கள் அனைவரும் மோசடி வலைகளில் எளிதாக சிக்கிக்கொள்கிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள். 

    கி.மு வில் இருந்தே ஈமூ போன்ற மோசடிகள் தொடர்ந்தாலும் சமீபத்திய நாளிதழ்கள் தான் தினந்த்தோறும் புதியவகை மோசடிகளை அம்பலப்படுத்துகின்றன.

    பல்துறையை சார்ந்த நண்பர்களும் உங்கள் அனுபங்களை, ஆலோசனைகளை உங்கள் தளத்தில் கட்டாயம் பதியுங்கள். நல்ல பல கருத்துக்கள் பலரையும் காலம் காலமாக சென்றடையும். முன்னோர்களின் படைப்புகளை பாதுகாக்க தவறிவிட்டோம். இருக்கும் காலத்திலாவது நம் சிந்தனைகளை பதிவாக பதிந்து வைப்போம்.

மேலும், உங்களின் தேடல்கள் விரிவடைந்து உங்கள் சுய மரியாதையையும் இந்த பதிவுலகம் மேம்படுத்திக் கொடுக்கும். 


     நாளைய எதிர்காலத்தில் இணையத்தால் மட்டுமே ஒரு மாபெரும் புரட்சியும், மாற்றமும் ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இணைந்து பணியாற்றுவோம்!! இணையத்தால் செயலாற்றுவோம்!!

- தொழிற்களம் அருணேஸ்
Read more ...

அட!! இது நானே தானா..? பகுதி -1

 • நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?
    ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை சமுதாயத்தில் சிறந்த நிலைகளில் வரவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்க்கின்றனர். இருப்பினும், பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கிய வழிமுறைகளையே பெரும்பாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் தொடர்கின்றனர்.  அப்படிப்பட்ட தருணங்களில் சிலர் கண்டிப்பானவர்களாகவும், சிலர் அப்பாவிகளாகவும், சிலர் பேராசைக்காரர்களாகவும் தங்களது குழந்தைகளுக்கு தெரிகின்றனர்

ஒரு நல்ல பெற்றோர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?

இதோ உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.கேள்வி 1.
        உங்கள் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 10 வரையிலான கல்வியை கொடுத்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        பிள்ளைகளுக்கு பிடித்த உணவு வகைகளை பற்றி அறிந்து வைத்திருக்கின்றீகளா.?
 ஆமாம்

        உங்கள் பிள்ளைகளின் உணவில் வாரத்தில் ஒரு முறையாவது கீரைகள், பழங்கள் அல்லது சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றனவா ?
 ஆமாம்

        பாஸ்ட் புட் உணவினை நீங்கள் பரிந்துரைக்க மறுத்துள்ளீர்களா..?
 ஆமாம்

        அவர்களின் மதிய உணவில் சிறப்பு விருந்து செய்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        திண்பன்டங்களை அவர்களே மற்றவர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கும்படி பழக்கப் படுத்தியிருக்கிறீர்களா..?
 ஆமாம்

        வீட்டில் விருந்தினர்கள் இருக்கும் சமயத்தில் குழந்தைகளையும் உடன் அமர்த்தி அறிமுகப்படுத்திவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் புதியவர்கள் முன்னிலையில் சகஜமாக பழகுகின்றனரா..?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் அவர்களின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர அனுமதித்தது உண்டா.?
 ஆமாம்

        அதேபோல், நண்பர்களின் இல்லங்களுக்கு தனியே செல்ல விடுவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியர், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் பெற்றோர்களுடைய தொலைப்பேசி எண்கள் உங்களிடம் இருக்கின்றதா..?
 ஆமாம்


        குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்ய அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

        இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது புதிய துணி வாங்கி தருவீர்களா.?
 ஆமாம்

        பள்ளி சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்கள் சுத்தமாக இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்வீர்களா.?
 ஆமாம்


        அவர்களின் புத்தகப் பையில் என்ன என்ன இருக்கிறது என்பதை அறிவீர்களா.?
 ஆமாம்

        குறைந்த பட்சம் 10 வயது வரையிலாவது அவர்களது பிறந்த தினத்தன்று பரிசுகள் ஏதும் வழங்கியது உண்டா.?
 ஆமாம்


        அவர்களின் வகுப்பு ஆசிரியரை மாதம் ஒரு முறை தொடர்புகொண்டு விவரங்களை கேட்பீர்களா.?
 ஆமாம்

        பள்ளி / பரிச்சை / பேருந்து மற்றும் இதர கட்டணங்களை குறித்து வைத்து சரியான தேதியில் செலுத்திவிடுவீர்களா.?
 ஆமாம்

        .தேர்வு நேரங்களில் விளையாட அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

      ஆவர்களின் மதிப்பெண் விழுக்காடு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களா .?
 ஆமாம்

        குழந்தைகளின் படிப்பு தவிர அவர்களுக்கு வேறு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுப்புவீர்களா.?
 ஆமாம்

        அவர்களின் மேல் படிப்பிற்காக அல்லது அவர்களது உபயோகத்திற்கென்றே சிறு தொகையையேனும் சேமிக்கின்றீர்களா.?
 ஆமாம்

      உங்கள் குழந்தை, பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் இதர விழாக்களில் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பு / பரிசுகள் வாங்கியது உண்டா.?
 ஆமாம்

        இதர கதை புத்தகங்கள் / விரும்பிய தொலைக்காட்சி நிகழ்சி / வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளோடு வெளியே விளையாட அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        குழந்தைகள், வீட்டில் பூந்தொட்டி / மீன் தொட்டி / செல்ல பிராணிகளை வளர்க்க அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        வருடம் ஒரு முறை கோடை சுற்றுலா குழந்தைகளோடு செல்வீர்களா.?
 ஆமாம்

        அவர்கள் விரும்பிய பொருளை அவர்களே சேமித்து வாங்க கொள்ள வலியுறுத்துவீர்களா.?
 ஆமாம்

        தினமும் அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்களுடன் கலந்துரையாடுகிறீர்களா.?
 ஆமாம்

        கோவில்கள் மற்றும் இறை வழிபாடுகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுத்துகிறீர்களா.?
 ஆமாம்

        தாத்தா, பாட்டி மற்றும் பெரியவர்களின் அன்பும், ஆலோசனைகளும் உங்கள் குழந்தைக்கு கிடைக்க செய்கிறீர்களா.?
 ஆமாம்


      இப்படியாக இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை உங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள முடியும். மேற்கண்ட கேள்விகளில் குறைந்த பட்சம் 10 கேள்விகளுக்காவது உங்களது பதில் "ஆமாம்" என்று இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிறந்த நல்ல பெற்றோராக இருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ":சபாஸ" சொல்லிக்கொள்ளுங்கள். 

இந்த கேள்விகளிலேயே உங்கள் செல்ல குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திர்கான உங்கள் வழிகாட்டும் திறன் வெளிப்பட்டிருக்கும். மேலும் இந்த தொடரில் இதனை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறேன்.

தொடர்ந்து வாசியுங்கள் :-

தட்டப்படாத கதவுகளே அதிர்ஷ்டத்தை அடைத்து வைத்திருக்கின்றன..!

மேலும் வாசிக்கும் முன் ஒரு கப் தேனீருக்கு ஆர்டர் செய்திடுங்கள்....
Read more ...

அட!! இது நானே தானா..? முன்னுரை

பெற்றோர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கான பொக்கிஷம்.

     தேடல்கள் இல்லாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை.. அப்படி தேடி தேடி இன்னும் மன நிறைவு கொள்ளாமல், மேலும் தேடுவதையே குறிக்கோளாய் கொண்ட உயிர்கள் மனித இனம் மட்டுமே ஆகும். இப்படிப் பட்ட தேடல்களின் விளைவால் நாம் பெற்றது என்ன? மற்றும் நாம் இழந்தது என்ன என்பதை தன்னுணர்வின்பால் உணர்ந்தவர்களின் அனுபவ வார்தைகளால் இந்த பகுதியானது தொடங்கப்படுகிறது. 

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். இன்றைய சூழ்நிலைகளில் தனிக்குடும்பங்களாக வாழும் பல கோடி குடும்பங்களில் நிகழும் பெற்றோர், பிள்ளைகளின் உறவுச் சங்கிலிக்கிடையே ஏற்படும் விரிசல்களுக்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம் இந்த தொடர் பதிவு பகுதியானது அமையும்.

   மனஅழுத்தம், மனசோர்வு என்பது எதனால் ஏற்படுகிறது என்பதையும், அதனை அழிக்கும் அருமையான உற்சாக மருந்து என்ன என்பதையும் இத்தொடரில் விவரிக்கப்படும்.

  வளர் இளம் பருவத்தினர் சந்திக்கும் சிக்கல்களையும், தீர்வுகளையும் எடுத்துணர்த்தும். மேலும் மாணவர்களுக்கான தேர்வுகால பயத்தை போக்கவும், ஞாபக மறதி போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடவும் அறிய வாய்ப்பை தெரியப்படுத்தவும் இந்த தொடர் உங்களுக்கு பயன்படும்.


இந்த தொடர் பதிவின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்த ஓவ்வொருவரும் தங்களது வாழ்வில் தவறவிட்ட தருணங்களை திரும்பி கொன்டுவர ஆசைப்டுவார்கள், மேலும் கிடைத்திருக்கும் நாட்களில் தங்களை தாங்களே புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இப்படி ஓவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே அட!! இது நானே தானா..? என்று ஆச்சரியப்பட்டு போவார்கள் என உறுதியளிக்கிறேன்.

    மொத்ததில் பிள்ளைகளின் மன இருக்கத்தை பெற்றோரும், பெற்றோர்களின் மன நிலைகளை பிள்ளைகளும் புரிந்துகொண்டு பரஸ்பரம் அன்பு பாராட்டும் ஒரு இன்பமான் குடும்ப சூல்நிலைகளை உருவாக்க இந்த தொடர் பதிவானது பணியாற்றும் என நம்புகிறேன்.

உங்களின் கருத்துக்களையும், ஆதரவினையும் பின்னூட்டம் இடுவதன் மூலமாக இன்னும் சிறப்பாக இந்த தொடர் பதிவினை அமைக்க எனக்குதவும் என எதிர்பார்கிறேன்.


நன்றி!!

உற்சாக கருத்துகளோடு

செள. அருணேஸ்வரன்.
25.05.2012 வெள்ளி

Read more ...

உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?

வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்பொம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும்.  வருகை விகதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு தனது பயணத்தை முற்றுப்புள்ளி வைத்து சென்றவர்கள் ஏராளம். 

இப்படி ஆரம்பத்தில் பிரபலமாக பேசப்பட்டு, நாளடைவில் பதிவே இல்லாமல் திரும்பியவர்கள் தங்களை முழுமையாக சோதித்துகொள்ளுங்கள்

உங்கள் வலைத் தளத்தில் வருகையாளர்கள் குறையவே மாட்டார்கள் 

தினம் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள் :

    உங்கள் வலைப் பதிவில் கருத்துக்களை பதிய போதுமான வார்த்தைகள் கிடைப்பதில்லையா..? கவலையைவிடுங்கள். தினம் நீங்கள் ஒரு பதிவை எழுதுகிறீர்களோ இல்லையோ வேறு, பத்து பதிவுகளையாவது முழுமையாக படியுங்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக வேண்டும். உங்களால் மற்றவர்கள் பதிவை படிக்க முடிந்தால் தான் உங்களது பதிவுகளுக்கான வார்த்தைகளை தேடாமல், தட்டச்சில் கை வைத்த உடனே உங்கள் பதிவிற்கான வார்த்தைகள் உங்கள் கரங்களில் தவழும்.

உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மற்றவர்களுக்கு படிக்க எளிதாகவும், புரியும்படியும் இருக்க வார்த்தைகளே வாய்ப்பாக அமையும் என்பதை உணருங்கள்.

பார்வையாளர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தல் :

       உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் கருத்தையோ அல்லது எழுதும் தன்மையையோ பிடித்துப்போய் தான் வருவார்கள். அவர்களின் விருப்பம் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். 

உதாரனமாக, 
       நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் பட்சத்தில் உங்கள் தள வருகையாளர்கள் அதை மட்டுமே விரும்பி வருகிறார்காள் என்று உணருங்கள். உங்கள் தள கருத்துக்கள் யாவுமே சிரிப்பை சிதறும் படியே அமைத்துக்கொள்ளுங்கள். யோசனையே வேண்டாம் முழுமையாக நீங்கள் ஒரு பகுதியை நோக்கியே உங்கள் கவனத்தை செலுத்துங்கள், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொழில்நுட்ப பதிவை எழுதும் எண்ணம் இருந்தால் அதற்காக தனியாக வேறு பக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒரே இடத்தில் பதிவதன் மூலமாக பார்வையாளர்கள் மனம் மாறுபட்டு புரிதல் தவறிவிட வாய்ப்புள்ளது.

Read more ...

முற்றிலும் இலவசமாக சொந்த டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சேவை வேண்டுமா..?

     இணையத்தை பொறுத்த வரையில் நமக்கென்றே ஒரு இணையதளம் வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது செலவு செய்தால் மட்டுமே நமக்கென்றே ஒரு தளத்தை நமக்கு விருப்பமான பெயரில் தொடங்க முடியும்.
பிளாக் அல்லது வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்கள் வலைப்பூ துவங்க உதவினாலும். அவைகளின் சப் டொமைனையே பயன்படுத்த வேண்டி இருக்கும். 

ஆனால் கூகிள் நிறுவனம் தற்போது இந்த குறையை போக்கியுள்ளது.     கூகிள் நிறுவனம் ஆனது ஹோஸ்ட் கேடர், ஐசிஐசிஐ மற்றும் பெடரேசன் ஆப் மைக்ரோ ஸ்மால் அன் மீடியம் என்டெர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து http://www.indiagetonline.in என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த வசதியானது இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

   இந்த தளத்தில் இலவசமாக நமக்கென்ற டொமைனை நாம் தேடிப்பெற்று அதை முற்றிலும் இலவசமாகவே ஹோஸ்ட்டும் செய்துகொள்ளலாம்.

   வியாபார நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திடவே இலவச இணையத்தள சேவையை இந்த தளம் வழங்குகிறது.

இந்த தளத்தின் சிறப்பம்சங்களாவன :

 • டொமைன் மற்றும் ஹோஸ்டிங் முற்றிலும் இலவசம்
 • ஒரு வருடத்திற்கு இந்த சேவை இலவசம்
 • டொமைன் பெயரிலேயே மின்னஞ்சல் கணக்கையும் உருவாக்கி கொள்ளலாம் (www.yourname@yourdomain.com )
 • ஒரு வருடத்திற்கு பிறகு மேலும் தொடர்ந்து வேண்டுமானால் சந்தாதாரராக இணைந்துகொள்ளலாம்
 • தளத்தை வடிவமைக்க இலவச வடிவமைப்பு சேவையையும் வழங்குகிறது
 • டொமைன் ஆனது முடிவில் .in ல் அமைகிறது (www.yourname.in)
 • இலவச தொலைப்பேசி எண்ணில் நமக்கான வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்
 • டொமைன் ரிஜிஸ்டர் செட்ய்தவுடனாகவே நமக்கான கன்ட்ரோல் பேனல் அமைப்பு கிடைத்துவிடும்
 • மிக விரைவாக இணையதளத்தை நிறுவிடலாம்.
    கூகிள் மின்னஞ்சல் கணக்கும் உங்களது பான் கார்டும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக நீங்கள் இந்த சேவையை பெற முடியும்.

   இந்த சேவையை பயன்படுத்தி தொடங்கிய எனது வலைப்பக்கத்தை காண டொடுக்குங்கள் : 


  உங்களுக்கும் இலவசமாக ஒரு தளத்தை உறுவாக்க வேண்டுமா..? மேற்கண்ட indiagateonline தளத்திற்கு சென்று துவங்குங்கள் உங்களுக்கான இலவச இணையதளத்தை.

வாழ்த்துக்கள்..!
Read more ...

உங்கள் வலைத்தளம் தரமானதா..?

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Read more ...

இணைவதால் வரும் இணையத்தில் வருமானம்

நமது தமிழில் மொழில் முதன் முறையாக ஒரு புதிய முயற்சியாக இணையத்தில் ஒரு புது எழுச்சியை கொண்டு வருவதற்காகவும், வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் வருமானத்தையும் தேடி தரும் விதமாக புதுமையான ஒரு இணைய வலைத்தளமானது தனது முதல் சேவையை தொடங்கியுள்ளது.இந்த தளத்தில் இலவசமாக உறுப்பினராக இணையும் அனைவருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக தள வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

தளத்தின் தோற்றமும், முறைமையும் மிக எளிதாகவும் கவரும்படியும் அமைந்திருப்பதுடன் வருமானத்தையும் ஈட்டித்தரும் என்பதை உணரமுடிகிறது.


இந்த தளமானது எப்படி இயங்குகிறது என்பதை காத்திருந்து தான் தெரிந்துகொள்ள முடியும்.  ஏனென்றால் தளத்தின் வருமானத்திற்கான முழு செயல்பாடும் நவம்பர் மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்க இருக்கிறது.

இப்போதே தங்கள் தளத்திற்காக பயனாளர்களை சேர்க்க தொடங்கிவிட்டது.

உறுப்பினராவதற்கு அப்படி ஒன்றும் சிறமப் பட தேவை இல்லை.

என்னங்க சேர்ந்துதான் பார்ப்போமே...

தள முகவரி

http://cpedelive.blogspot.com


( கொசுறு தகவல் : நிச்சயமாக இந்த தளத்தில் வருமான வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம், சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுத்தலாம். காரணம் இந்த தளத்தின் தொழி வாய்ப்பு பிரிவில் எனக்கும் ஒரு சிறிய பங்கு உள்ளது )

நவம்பர் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்றே உறுப்பினராக இணைந்துவிடுவோம்.

Read more ...

வலை போட்டு பணம் பிடிக்கலாம்..

    வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை கொண்டே வலைப்பதிவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை உணரமுடிகிறது. எதற்காக இவர்கள் வேலை மெனக்கெட்டு எழுத வேண்டி இருக்கிறது..? என்று பல வித சிந்தனைகள் இருந்தாலும் கூட, சுவாரசியம் கொஞ்சும் வார்த்தைகளின் மூலமாக நம்மை கட்டி இழுக்கும் வல்லமை கொண்ட பதிவர்கள் பலர் இருக்கின்றனர் என்பதே உண்மை. 
   
  ஆரம்பத்தில் வலைப் பதிவின்பால் ஆர்வம் கொண்டு ஏதேனும் கிறுக்க தொடங்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது எழுத்தின் தரத்தினை கூட்டி நாங்களும் நல்ல பதிவர்கள் தான் என்பதை பலரும் நிருபித்து காட்டி வருகின்றனர். வலைப் பதிவுகளின் தலைப்புகளை வைத்தே பதிவர்களின் எண்ணத்தையும் தரத்தினையும் அறிய முடிகிறதல்லவா..?


    வலைப்பதிவை தொடங்கிய உடன் முதன் முதலாக ஒரு பதிவை போட்டிருப்போம்.. அதற்கு பார்வையாளர்கள் வர வைக்க என்ன செய்வோம்..? நமக்கு பொதுவாக தெரிந்த மட்டும் ஆர்க்குட், பேஸ்புக் நண்பர்கள் மூலமாக கொஞ்சமாக பார்வையாளர்களை திரட்டுவோம்..  ஒரு நாளைக்கு 4 முதல் 5 ஹிட் வருவதற்கே அரும்பாடு பட வேண்டியிருக்கிறது.. எப்படித்தான் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை நமது வலை பளத்திற்கு வர வைப்பது என்பதனை நினைக்கும் போதே...., அட.., ஒழுக்கம பொழப்ப பார்ப்போம்.. என்று ஓரம் கட்ட பார்க்கின்றோம் தானே..?  வேண்டும் என்றால் நமது திருப்திக்காக மேலும் ஏதாவது ஒரு சில பதிவுகளை போட்டிருப்போம்.. பிறகு நாமே நமது பதிவினை மறந்து போய் சொந்த வேலையை பார்க்க மூட்டை முடிச்சை கட்டியிருப்போம். அப்படி இருக்கும் போது பிரபல பதிவர்கள் என்று பெருமையடித்து கொண்டு எப்படிப்பா இவங்க பொழப்ப ஓட்டுறாங்க என்று பல முறை மனதுக்குள் கேள்விகள் எழும் தானே..? ஆவர்களுக்கெல்லாம் இப்படி பதி போடுரது தான் முழு நேர வேலையா..? அப்படி அவர்கள் பதிவு போடுறதால யாருக்கு என்ன லாபம்..? ஏன் அவர்களுக்கே கூட என்ன லாபம் இருக்கிறது..?

( அதற்கு முன்னால் /// ; சண்டைக்கு வர வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கும், பொது நல பதிவர்களினை சமாளிக்கனுமே..!!? )


பதிவர்களில் ஒரு சில வகைகள் இருக்குங்க

 • இலக்கியம் / கவிதை பதிவுகள்
 • சினிமா / அரசியல் பதிவுகள்
 • கணிணி / தொழில்நுட்ப பதிவுகள்
 • நகைச்சுவை பதிவுகள்
 • பொது / படைப்புகள் தொடர்பான பதிவுகள்
 • வம்பு / மொக்கை பதிவுகள்
போன்ற பல வகைகளில் பதிவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர்.

     சரி இப்படி வித, விதமா பதிவுகளை எழுதுறாங்களே இவங்களோட நோக்கம் தான் என்ன..?

 எதுக்காக இவர்கள் தங்களுடைய நேரத்தினை இப்படி கழிக்கின்றனர்..?

மனிதனுக்கு பணம் அதிகமா கிடைச்சாலும் பிரச்சனை தான்,, கிடைக்காமயே இருந்தாலும் பிரச்சனை தான்.. எல்லோருமே எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை..


 •   கவிதை / இலக்கிய பதிவுகளினை பொதுவாக அத்தைய துரைகளின் ஆர்வம் இருப்பவர்கள் பதிகின்றனர். அவர்களின் எண்ணம் தமது ஆழ் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளினை தட்டி எழுப்பி அதை மற்றவர்களும் தெரிவித்து அவர்கள் தரும் ஆறுதல்கள் / பாராட்டுகள் மூலமாக தங்களின் மனதினை அமைதி கொள்ள செய்து விடுவார்கள்
 • சினிமா / அரசியல் பதிவர்கள் பெரும்பாலும் வேலை மெனக்கெட்டு தான் செய்யும் வேலைகளை மற்றவர்களிடம் பதியும் வேலையினை செய்ய இருப்பார்கள். இவர்களின் நோக்கமானது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயத்தினை தனது அறிவின்பால் எடுத்து கூறுவது அவர்களின் அறிவின் திறனை வெளிப்படுத்தவற்கான வடிகாளாக இருக்கும். ஒரு சிலர் வேண்டுமென்றே தனக்கு பிடித்த, பிடிக்காத கருத்துகளை பரப்புவதற்காக பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு சிலரே சரியான தகவல்களை பதிந்து "சபாஸ்." வாங்குகின்றனர்.
 • கணிணி / தொழில்நுட்ப பதிவர்களாவர், தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய அல்லது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்து அதனை மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கி அவர்களுக்கென்றே ஒரு புது உலகத்தும் புது மனிதர்களினையும் தன் பால் தக்கவைத்துகொண்டிருப்பார்கள். இவர்களின் நோக்கம்,, மாறாதா தேடலினை மற்றவர்க்கும் தெரிவிப்பதே ஆகும்.
 • நகைச்சுவை / வம்பு / மொக்கை பதிவுகள் அனைத்துமே தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கையே பெரும்பாலும் இருக்கின்றது.. இவர்களுக்கென்றே பாரட்ட ஒரு கூட்டமும், திட்டுவதர்கென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது.. இவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அழவைக்கவும் முடியும்,, அழகாக்கவும் முடியும்,, இவர்கள் யாவரும் தனிக்காட்டு ராஜாக்கள் ஆவர். ( ராணிகளும் இருக்கிறார்களப்பா..)
 • பொது / ஆக்கங்கள் தொடர்பான பதிவர்கள் தங்களது சிந்தனைகளினை  பகிர்கின்றனர். இவர்களின் கருத்துகள் சமூகத்தின் மேல் கோபமாகவோ அல்லது ஏக்கமாகவோ இருக்க கூடும். 

     இவ்வாறாக ஏதேனும் ஒரு கருத்தின் கீழாக பதிவர்களாக வலம் வரும் அனைவருமே தங்களின் பதிவுகள் மூலமாக ஏதேனும் வருமானம் வரக்கூடும் என்றிருந்தால் அதனினை புறக்கனிக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன். 
ஒரு சிலர் மட்டுமே தங்களின் கருத்துக்கள் மற்றவரையும் சென்றடைந்தால் போதுமென கருதுபவர்களாக இருக்கின்றனர்.

சரி, வலைப்பதிவுகள் மூலமாக கண்டிப்பாக வருமானம் ஈட்ட முடியுமா..?

நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

உங்களது உழைப்புக்கு ஏற்றவாறு குறுகிய அல்லது பெரிய அளவில் வருமானத்தை கண்டிப்பாக பெறலாம். 

எவ்வாறாக பணத்தை சம்பாதிப்பது என்பதனை விரிவான பக்கங்களாக தொடர்ந்து தரவே இனி வரும் பதிவுகள் காத்திருக்கின்றன.
( வலைப்பதிவில் தற்சமயம் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கும் பதிவர்கள் தங்களது கருத்துகளையோ அல்லது லிங்க்கையோ கமென்ட் மூலமாக தருவதன் மூலமாக உண்மையான முறையினை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க உதவியாக் இருக்கும் )

தொடர்ந்திருங்கள்...Read more ...

பைக் பஞ்சர் ஆச்சுனா என்ன பன்னலாம்..?


         
   பொதுவா பார்த்திங்கனா இந்த டூ வீலர் அவசரமா எங்கயாவது போகும் போது தான் காலை வாரி விடும். அப்படி ஆளே இல்லாத இடத்தில உங்க பைக் பஞ்சர் ஆச்சுனா தள்ளிட்டு போகனுமே அப்படிங்கற கவலைய விடுங்க. இந்த பிரச்சனைய ஈசியா சமாளிக்க என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நேற்று இரவு நான் வழக்கம் போல எனது வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன், வழியில்  தோழி பிரபா தனது அலுவலக பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அருகே சென்றதுமே எனை பார்த்து புன்னகைத்தார். 

   வாங்களேன் நான் டிராப் பன்னிடுறேன்னு அவரையும் அழைத்து கொண்டு எனது டூ வீலரில் கிலம்பினேன். 

என்னங்க ஆயுத பூஜை எல்லாம் எப்படி போச்சு..?

ம்ம்ம்... எங்க கம்பனியில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட்டோம். ஆன அதுக்கு முந்தைய நாள் மட்டும்.. அப்பப்பா...  கம்பனியை முழுசுமா சுத்தம் பன்றதுக்குள்ள பென்டு கழண்டுருச்சு..

அப்படியே பேசிக்கொண்டே சிறிது தூரம் சென்றிருப்போம்..

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........

எப்படியோ மானத்தை வாங்கரதுக்குனே காத்திருந்தா போலே வண்டி பஞ்சர் ஆகிவிட்டது..

ஒரு நமட்டு சிரிப்புடன். கிழே இறங்கிய பிரபா..  என்ன சார் நான் பாஸ்லயே போயிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்.

கவலை படாதிங்க.. பத்து நிமிசத்தில் பஞ்சர் பாத்திடலாம்ம்...

எப்படி..?

வேற எப்படி பாக்குறது..? எல்லாரையும் போல வண்டிய உருட்டிகிட்டே ஏதாவது ஒர்க்ஸ் ஸாப்க்கு போக வேண்டியதுதான்.

எங்க நேரம் ஆயுத பூஜையை ஒட்டி எந்த ஒர்க்ஸ் ஸாப் -ம் திறக்கல.. .

அப்ப தான் ஒரு முடிவிற்கு வந்தேன்..

*( ரொம்ப பில்டப் பன்னுற விஷயங்கள் எப்பவுமே மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சும் வந்து பார்க்குற உங்களோட தைரியம் ரொம்ம பிடிச்சிருக்கு.. இருந்தாலும்.. .. )


அப்ப தான் ஒரு முடிவுக்கு வந்தேன்..

இனி ஒர்க்ஸாப் எல்லம் எதுமே இருக்காது.. பேசாம, வண்டிய தள்ளிகிட்டே ஏதாவது பேசிட்டே போகலம் என்றேன்.,

பிரபாவும்.. ம் சரி வேற வழி..?

சொல்லுங்க உங்க பிஸினஸ் எப்படி போகுது..? நீங்க எதோ புது பிஸினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னீங்க..?

ஆமா//

எந்த மாதிரியான பிஸினஸ்..?

புதுசா இருக்கனும்,, நாம் தான் அந்த பிஸினஸை ஆரம்பிக்க வேனும்..

இது என்ன ஒன்னுமே புரியல..

அதாவது நான் ஆரம்பிக்க போற பிஸினஸ் பாத்திங்கன்ன நம்ம வழக்கமா பன்னுற பிஸினஸ் போல இருக்க கூடாது.. நம்ம மக்களுக்கு அது புதுசா இருக்கனும்..  நாம தான் அதை முதன் முதலா ஆரம்பிக்கனும்.

அதாவது நீங்கதான் அந்த தொழிலின் தந்தையா இருக்கனும் அப்படித்தானே..?

ம்ம்ம்ம். அப்படின்னு சொல்லலாம்.. ஆன பார்திங்கன பிரபா என்னைய பொருத்த வரை நாம பணம் சம்பாதிப்பதை காட்டியும் வருங்கால சந்ததியினர் நம்ம பேர சொல்லும் படி ஏதாவது ஒரு விசயத்தை செய்துவிட்டு போகனும்.

சரிதாங்க.. ஆன நாம ஒரு தொழிலையையோ அல்லது ஒரு சிந்தனையையோ கண்டுபிடிச்சு அதிலே வெற்றி பெருவதென்பது சாதாரண விசயமில்லையே..?

ஆமா.. ஆன, விடா முயற்சி இருந்தால் கண்டிப்ப நாம சாதிச்சு காட்ட முடியுமே..?

நீங்க ஒரு நல்ல தொழில்முனைவோரா இருந்தாலே நீங்க சாதித்ததாக அர்த்தப்படுமே..?

கண்டிப்பா.. அதைக் காட்டிலும் நான் ஒரு புது முயற்சியில் தொடங்கி வெற்றி பெருவதையே விரும்புகிறேன்..

   இப்ப நீங்க செய்யுற தொழில் வாய்ப்பானது உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். உங்கள் புகழையும் உயர்த்தும். ஆன, புதுசா ஒரு முயற்சியில் இறங்கும் போது அதில் வெற்றி பெற்றாலே தவிற புகழும், பொருளும் கிடைப்பதில்லை..? அப்படி பார்த்த இங்க புதுசா ஒரு விசயத்தை தோற்றுவிப்பதற்காக லட்சம் பேர் முயற்சி செய்யிறாங்க அதில ஒருத்தர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்.. நீங்க வெற்றி பெரும் ஒருத்தரை உந்துதலா எண்ணி உங்க வாழ்க்கையை பணயம் வைப்பது முட்டால் தனமான விசயம் தானே..?

இல்லைங்க பிரபா.. நீங்க சொல்வது முற்றியும் தவறு..
....மே பி..   நீங்க சொல்வது போல முயற்சி செய்யும் லட்சம் பேரில் ஒருத்தர் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.  ஆன அந்த ஒருத்தர் நாம தான் என்கின்ற தன்னம்பிக்கையை நீங்க முட்டால் தனம் என்பது மிகவும் தவறாகும்..

இப்ப,, நாம ஒவ்வொருவரும் காலைல வீட்டை விட்டு வரும் போது என்ன நினைச்சுட்டு வருகின்றோம்.? வேலைக்கு போய்விட்டு எப்படியாச்சும் சீக்கரமா வீட்டுக்கு வரனும், பாப்பாவ கொஞ்சனும்,  சமையல் செய்யனும் அப்படித்தானே.... அதில்லாம,, ஹாஸ்பிடலுக்கு அடிபட்டு போக போறோம்ன்னா  நினைக்கிறோம்..? ஏன்னா... தினம் தினம் நம சாலையில் போகும் போது யாரவது ஒருத்தர் விபத்தில் தன் உறுப்புகளையோ.. அல்லது உயிரையோ இழக்கின்றார்கள். அப்படின்னா.. அந்த ஒருத்தர் நாமாக கூட இருக்கலாம் அல்லவா..? ஏன் நாம அதைப் பற்றி கவலை படாமல் வீட்டை விட்டு கிலம்புகிறோம்..?

ஒரு விசயத்தை செய்யும் போது ஆயிரம் தடைகள் எப்படிப் பட்ட வழிகளிலும் வரலாம்..? அதை சமாளிக்கும் தைரியத்தை நாம் தான் வளர்க்க வேண்டும்.. அதை விட்டு விட்டு நாம் தோற்று விடுவோமே என்று பயப்பட ஆரம்பித்தால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் பயந்து கொண்டே இருக்க வேண்டியது தாங்க..

ம்ம்ம். நீங்க சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன வீணா எதுக்கு மெனக்கெடுவானேன்னு தான் அப்படி சொன்னேன்..

இல்லைங்க.. வீண் என்கின்ற வார்த்தையினை தவிற எதுவுமே இந்த உலகத்தில் வீண் இல்லைங்க..

    நீங்க நினைச்ச மாதிரியே எல்லோரும் நினைச்சிருந்தாங்கன்ன இந்த உலகத்தில் மாற்றமே எதுவும் வந்திருக்காது.. நமக்கு தெரிந்த மட்டுமே எடிசனும், கிரகாம்பெல்லும் மெனக்கெட்டு உழைக்க தவறி இருந்திருந்தால் உலகிற்கு முக்கியமான இரு விசயங்களான லைட்டும், தொலைப்பேசியும் வந்திருக்குமா..?
இன்னைக்கு உலகையே தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் கைப்பேசி இன்றைய உருவத்திற்காக எத்தனை பேரோட உழைப்பையும் நேரத்தையும் சுரண்டியிருக்கும்..?  இன்னைக்கு நாம செய்யுற ஒரு விசயத்துக்காக இன்னும் பல வருடங்களில் வர விருக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் பட்சத்தில் எப்படிங்க வீண் என்கின்ற வார்த்தை முலைக்கும்..?

பஞ்சர் கடை இன்னும் வரலைங்க.. 

( கடைய கண்டு பிடிக்கிற வரைக்கும் இப்படியே வண்டிய தள்ளிக்கிட்டு ஏதாவது பேசிக்கிட்டே போங்க..? பஞ்சர் பத்தி கவலையே பட வேண்டியதில்ல.. )
(சிங்கிளா போகும் போது பஞ்சர் ஆச்சுனா..?
.... அதுக்கும் கவலை வேண்டாம்.. இதை விட சூப்பர் ஐடியா அடுத்த பதிவில் வச்சிருக்கிறேன்ன்ன்ன்ன்ன் )
Read more ...