வாங்க தொழில் செய்யலாம்--- திட்டமிடல் (Planning)

தொழில் செய்ய முனைவோருக்கான சிறப்பான பதிவாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த பதிவினை திட்டமிட்டுள்ளேன். இது என்னுடைய கருத்துக்களே ஆகும். பல மேதைகள் இதை பற்றி விரிவாக சொல்லியிருந்தாலும் எனது பார்வையில் உங்களுக்காக....

திட்டமிடல் ( PLANNING) :
பொதுவாக தொழில் முனைவோருக்கான திட்டமிடல் என்பது ஒரு தொழிலை தொடங்குவது குறித்தான தெளிவான அனுகுமுறையை குறிக்கிறது. அதாவது,


* என்ன தொழில் செய்யப்போகிறோம்.
* எப்படியான வழிமுறைகளை கையாளப் போகிறோம்.
* சூழ்நிலைக் காராணிகள் மற்றும் தேவையான மூலப்பொருள்களை எவ்வாறு பெறுவது.
* பொருளுக்கான சந்தையின் நிலை.
* மூலதனத்திற்கான வழிமுறைகள் பற்றிய அனுகுமுறை.
* வேலையாட்களின் ஒத்துழைப்பினை பெறுதல்.
* நிதிநிலையை சரியாக பராமரித்தல் மற்றும் பெறுக்குவதற்கான புதிய சிந்தணைகளை புகுத்தும் முறை போன்ற சில வறையறைகளை தெளிவாக புரிந்துகொண்டு செயலாற்றினால் போதும். திட்டமிடலில் வல்லுனர் ஆகிவிடலாம்.

* என்ன தொழில் செய்யப்போகிறோம்.
அனுபவம் என்பது நம்மால் மட்டுமல்ல பிறறிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். எனவே நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடும் முன்பு அந்த தொழில் பற்றிய அறிவுடைய சிலரின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும். ஏற்கனவே செய்யப்போகும் தொழிலுக்கு உண்டான அனுவத்தை பெற்றிருப்போமாயின் அதில் புதிதாக மாற்றம் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய போட்டி யுகத்தில் வேரூன்ற உதவி செய்யும்.
நாம் செய்யும் தொழில் எத்தகையது..? அதற்கான போதிய தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா..? அல்லது அதை வளர்த்திக்கொள்ளும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது...? என்பது போன்ற காரணிகளை தெளிவாக ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் தொடங்கிய பின்பு அதற்குன்டான அனுபவத்தை நாம் பெறுவதற்குள் ஏறக்குறைய வாடிக்கையாளௌகளின் நன்மதிப்பை நாம் சில நேரங்களில் இழந்திற கூடும் அபாயம் இருக்கிறது.

எனக்கு தெரிந்த பணக்கார நண்பன் ஒருவன் புதிதாக தொழில் தொடங்க எண்ணி அனுபவம் + அறிவு இதனை பற்றி சிந்திக்காமல் ஒரு கம்ப்யூட்டர் சென்டரை தொடங்கி நடத்தினான். அவன் ஆர்ட்ஸ் குரூப் படித்தவன் என்பதால் கம்ப்யூட்டர் பற்றிய போதிய அறிவு பெற்றிருக்கவில்லை. இருந்தாலும் ஆட்களை வேலைக்கு வைத்து நடத்தி விடலாம் என்ற நினைப்பின் காரணமாகவே அவன் அதை தொடங்கினான். சில வாரங்கள் மட்டுமே அவனால் செய்யமுடிந்தது, இப்போது திரும்ப அவன் தனது தந்தையுடன் கம்பெனியினை கவனித்தி வருகிறான். காரணம் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை முழுமையாக அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வேலைக்கு இருக்கும் ஆட்கள் சம்பளத்தை பொருத்தே நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எத்தகைய வேலையினை பெறுவது என்பதில் நாம் தானே தீர்மானிக்க வேண்டும்..?
Read more ...

இன்னும் கத்துக்கனும் கண்ணா...

ஹெ அந்த வீட்ட நீ பார்துக்கோ, நான் இங்கே பார்துக்கறேன்.
சரிக்கா..
டேய் அந்த அக்கா உள்ளே போரறாங் சீக்கரமா போ...
---
--

அக்கா... அக்கா...
யாருப்பா என்ன வேணும்...
அக்க பாத்திரம் வெளக்கர பவுடரு வேணுங்களா... மூனு பாக்கெட்டு பத்து ரூபா தான்..
இல்லப்ப.. அதெல்லாம் வேண்டாம்... எற்கனவே இருக்கு..
இல்லக்க இது நல்லா இருக்கும் வேணும்ன்னா சேம்பல் பாருங்கக்கா,,
(விரு விருன்னு பக்கத்துல இருந்த பாத்திரத்தை எடுத்து தேய்த்து காட்டுகிறான் சாரி காட்டுகிறார்)
---
பாத்திங்களா... பளிச்சுனு அகிருச்சு...
--
பரவாலப்பா எங்கிட்டே இருக்கிறது தீர்ந்தப்பரமா வாங்கிக்கறேன்.. இப்ப வேணாம்..
--
பத்து ரூபாதாங்கக்கா வாங்கி வைச்சுக்கங்க அது தீர்ந்தப்பரமா இதுல வெளக்குங்க.. வாங்கிக்கங்க..
--
--

இன்னைக்கு எதாவது உருப்படியானா பதிவை எழுதியே ஆகனுமே என்ன எழுதரதுன்னு யோசிச்சுட்டே பல்ல விளக்கிட்டு இருக்கும் போது என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இளம் தொழிலதிர்கள் மூவர் தங்கள் விற்பனையை நடத்திக்கொந்திருந்த காட்சிகளே மேற்கண்டவைகள் ஆகும்..

அது சரி மேட்டருக்கு போலாம் இன்னும் இருக்கு..

ஹே கண்ணுங்களா இங்க வாங்கா என்ன அது .. ( இது நானாக்கும்)
அண்ணா வெளக்கர பவுடருங்கண்ணா..
ஓ.. சரி காலைல இது வைச்சுட்டு சுத்தரீங்களே இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா,,,
எக்சாம் நடக்குது மதியம் போகனும்ண்ணா..
அண்ணா நீங்களும் வாங்கிக்கங்கண்ணா.. மூனு பாக்கெட் பத்துரூபாய் தாங்கண்ணா..
சரி உள்ள போ அம்மா இருப்பாங்க கேளு....
( இன்னும் கல்யாணம் ஆகளைங்க அதனால அம்மா, அம்மா தானுங்கோ)
சரிங்கண்ணா..

--
அக்கா வெளக்கர பொடி வேணுங்களா..
இல்லப்ப வேணாம் இருக்குப்பா.. ( இது என் அம்மா)
மறுபடியும் அவன் சாரி அவரு பழைய பாட்ட பாடி அம்மாவிடம் டெமோ காட்டிணாண்.. அப்போது நான் கண்களால் வாங்கிக்கங்க பாவமா இருக்கு என்பது போல பார்த்தேன்.. அதை உணர்ந்தவராய் அம்மா அவரிடம் பேச்சு கொடுத்தார்கள்..

ஏன்டா தம்பி நாலு பாக்கெட்டு கொடுக்க வேண்டியதுதான்னே.. கடையில இருக்குற பவுடரு லைட்ட தொட்டாலே அழுக்கு போயுடும் ஆனா இத அலுத்தியல்ல தேய்க்குறே...
இல்லக்கா.. அவுக ரொம்பா தயாரிக்குராங்கள்ள அதனால தான் அப்படி தராங்கா.. நாங்களும் நல்லத தான் வைச்சிருக்குரோம்.. ஆனா கட்டுபடியாகாதுக்கா.. மூனு தான் தரமுடியும்..

அதெல்லாம் இல்ல நாலு பாக்கெட்டு தா.. இல்லைன்னா வேணாம்..
இல்லக்க அவ்லோ எல்லாம் வராது..
என்னடா நீ புது பவுடரு.. கொஞ்சமாவது அனுசரிடா..
வேணும்ன்னா.. இந்த சேம்ப்பல்ல கொஞ்சம் எடுத்துக்கங்க...


பேரம் பேசாம வாங்கும்மா.. பாவமா இருக்கு..

சரி குடுடா.. எவ்வளவு..
பத்து ரூபா..
இந்த,,,
தேங்ஷ்க்கா...


ஹே கையில என்னடா காயம்.. இரு மருந்து கொடுக்கறேன் போட்டுட்டு போ...


---
---

பையன மருந்து போட்டுட்டு அனுப்பியது,

ஏம்மா அவங்கிட்டே போய் பேரம் பேசுர... பத்து ரூபா தானே.. கொடுத்திட்டு அனுப்ப் வேண்டியதானே... என்றேன்.

அதற்கு..


அவனுக்கு பணத்த உடனே கொடுத்துட்டா அதனோட வேல்யூவ அவன் உணர மாட்டான்.. இந்த வயசுல வீடு வீடா சேல்ஷ் பன்றான்.. மத்தவங்க கிட்டே அவன் பேசரதுக்கு கொஞ்சம் இதுவும் உதவி செய்யும்.. பணம் கொடுக்கிறத காட்டிலும் அவனோட வளர்ச்சிக்கு இது போன்ற சாமார்த்தியமான பேச்சு திறமைதான் முக்கியம். அதனால தான்டா நான் அவங்கிட்டே பேச்சு கொடுத்தேன்...

புரிஞ்சுதா... என்றார்....


ஹும் இப்பதான் புரிஞ்சுதுன்னு தலையாட்டுனேன்...


அய்யய்யோ டைம் ஆயிடுச்சே...

இன்னைக்கு எதை பத்தி பதிவு எழுதலாம்னு யோசிச்சுட்டே இருக்குறேன்.. ஒன்னுமே கிடைக்கல,,,,,,Read more ...

வாங்க தொழில் செய்யலாம்...

ஹலோ என்ன தேடுரீங்க.. முதன் முதலா ஒரு பதிவை எழுதறேன் ரொம்ப எதிர்பாக்கதிங்க ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன். ஏதாவது தப்பான கருத்துகள் இருந்தா திட்டாமா தெரியபடுதுங்க...

ம்.. சரி விசயத்துக்கு வருவோம், படிப்ப முடிச்சதும் வீட்ல வருமானத்த கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்களா.../ வேலை தேடி ஓய்ந்து போய் கடைசியில் கண்டு பிடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா மனசு சும்மாவே இருக்க மாட்டிங்குது என்னடா இது காலையிலிருந்து னைட்டு வரைக்கும் மாடு மாதிரி னாம உழைக்குறோம். நம்மல வேலை செய்ய வைச்சு ஒருத்தன் சம்பாதிக்குறான் அதுல ஒரு பங்க சம்பளம்னு கொடுக்குரான் ஏன் ம்மால முடியாதா../ பேசாம நாமலே தொழில் செஞ்சா என்ன அப்படின்னு மனசு கேக்குதா../
உடனே வேலையை விட்டுட்டு எதவது தொழில் தொடங்கி ( அதுவும் அப்பா காசுல ) தடால் புடால்னு எம்டியா ஒரு மூனு மாசத்த காலி செஞ்சுட்டு சட்டுன்னு ஒரு னாள் கணக்கு போட்டு பார்த்தா எம்ட்டியா ஒன்னுமே இருக்காது.. அடடே இது னமக்கு ஒத்து வராதுனு மறுபடியும் வேலைக்கு போகலாமுன்னாலும் மனசு ஒத்துழைக்காது. சரி விட்டத பிடிக்கனுமேனு மறுபடியும் அரகுறையா ஏதவது புது தொழில் செய்ய போக அதும் னிலைக்க மாட்டேங்குது. ஏன்னு மன்டைய போட்டு உடைச்சாலும் ஒன்னுமே புரியாது..

ஏன் டென்ஷனாகுறிங்க... கவலைய விடுங்க...

நீங்க எந்த தொழிலை செய்ய நினைத்தாலும் பரவாயில்ல..
வெற்றியை மட்டுமே அடைய விரும்பரிங்களா.../

வெரி வெரி சிம்ப்பிள்...

எங்க நிறுவத்தின் ராசிக்கள் மோதிரத்தை போடுங்க.. அய்யய்யோ மன்னுச்சுக்கங்க டிவி பார்த்த ண்யாபகதில் சொல்லிட்டேட்ன். சரி மேட்டருக்கு போலாம்,,,

* ஆழமான திட்டமிடலும்
* நேர்மையான அனுகுமுறையும்
* திறமையான ஆலுமை பண்பும்
* முழுமையான அறிவும்
* சரியான நேரமும் வாய்க்க பட்டால் போதுமே...

என்னங்க புரியுதுங்களா...../
இத பத்திதாங்க விரிவா எழுதலாம்னு களத்தில குதிச்சிறுக்கேன்..

நீங்களும் தயார.../
Read more ...

பிளாக்கர் நண்பர்களுக்கு......

இந்த தளத்தில் வியாபாரம் சம்பந்தமான சிந்தனைகள், யுத்திகள், வாய்ப்புகள் போன்ற பதிவுகளை திட்டமிட்டுள்ளேன். இது புதிதாக முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் வியாபார நண்பர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமாறு அமையப்பெற உள்ளது. உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
Read more ...

இணையத்தினூடாக வியாபாரம் செய்ய விரும்புகிaர்களா?

இணையத்தளச் சந்தைப்படுத்தல் பற்றிய பல தவறான தகவல்கள் உள்ளன. பல சிறிய வியாபார உரிமையாளர்களுக்கு எது சரி, எது தவறு என்று அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. தமக்கு இணையத்தளம் பொருந்துமா என்பதை நிர்ணயிப்பது மிக முக்கியம் பின்னர் அதன் சந்தைப்படுத்தல் திறனைப் பயன்படுத்துவதற்கான சரியான முறைமைகளைப் பயன் படுத்துதல் முக்கியம்.

பின்வருவன வற்றில் இணையம் பற்றிய பொதுவான தவறான கருத்துக்கள் மற்றும் உங்கள் ஒன்லைன் சந்தைப்படுத்தும் செயலை வெற்றியடையச் செய்ய உதவும் குறிப்புகள் உள்ளன.

தறவான கருத்து 1 : அனைத்து சிறிய வியாபாரங்களுக்கும் இணையத்தளம் இருக்க வேண்டும்.

பல சிறிய வியாபாரங்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட இணையத்தளத்தை வைத்துக்கொள்வதால் இலாபமடைகிறார்கள் என்றாலும், இந்த வகையான சந்தைப்படுத்தல் அனைவருக்கும் ஏற்புடையது அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்களுக்கு இணையத்தளம் இருக்க வேண்டுமானால், பின்வருவனவற்றை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். * உங்கள் வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உங்கள் வாடிக்கையாளர்கள் இணையத்தளங்களின் மூலம் தயாரிப்புகளை வாங்குபவர்களாகவோ அல்லது தகவல்களைப் பெறுபவர்களாகவோ இருந்தால் நீங்கள் இணையத்தளத்தை உருவாக்குவது சரி. மேலும் அவர்கள், தகவல்களைப் பெற ஏனைய ஆதாரங்களைப் பெரிதும் பயன்படுத்தினால் (மஞ்சள் நிறப் பக்கங்கள், செய்தித் தாள், இதழ்கள், வியாபார நிகழ்ச்சிகள் அல்லது ஏனைய சந்தைப்படுத்தல் சாதனங்கள்) உங்கள் கவனத்தை இவற்றிலேயே செலுத்த வேண்டும்.

* நீங்கள் தேசிய அல்லது சர்வதேச வாடிக்கையாளர்களை அடைய விரும்பினால்.

வலை என்பது “உள்ளூர்” சந்தைப்படுத்தல் அல்ல. இயல்பாகவே அது பரவலாகச் சென்றடையும் தன்மை கொண்டது. எனவே நீங்கள் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நியூயோர்க் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு இல்லக் கட்டுமான ஒப்பந்ததாரர், இணையத்தளத்தின் முழுப்பயனையும் அடைய முடியாது ஏனெனில் இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை வழங்கக்கூடயது.

தேசிய ஏற்றுமதி கொண்ட ஒரு சொக்லட் விநியயோகத்தர் இணைத்தளங்களின் பரவலான இலாபங்களை அடைய ஏற்றவராவார். * ஒரு இணையத்தளம் உங்கள் சந்தைப்படுத்தல் இலக்குகளையும் மற்றும் வரவு செலவுத் திட்டத்தையும் ஆதரிக்கிறது.

முழுதும் தொகுக்கப்பட்ட உங்கள் சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றின் ஒரு முக்கியப் பகுதியாக உங்கள் இணையத்தளம் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளிலும் ஒரு நிலையான செய்தியைக் கொண்டிருப்பது முக்கியமாகும். * ஏனைய சந்தைப்படுத்தல் முறைமைகளை விடச் சிறந்ததாகவும் அவற்றிற்குப் பதிலாகவும் இணையத்தளம் இருக்கக்கூடும்.

இணையத்தளத்தில் வாடிக்கையாளர் வேண்டுகின்ற தகவல்களை உடனடியாகப் பெறலாம். ஏனைய முறைமைகளில் தகவல்களை இவ்வளவு விரைவாகப் பெற முடியாது. சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். உதாரணமாக ஒரு வியாபார ரீதியான புகைப்படக் கலைஞர், தனது விபரங்களையும் அவரது புகைப்படங்களையும் இணையத்தளத்தில் வைத்து விட்டால், நிலையான வாடிக்கையாளர்கள் அவருடைய இணையத்தளத்தை நோக்கி வருவார்கள். இது ஒவ்வொரு வேலைக்காகவும் தனது விபரத்தையும் புகைப்படங்களையும் செலவு செய்து அனுப்புவதை விட சிறந்தது.

* நீங்கள் உங்கள் தளத்தைப் பொறுப்பாகப் பேண வேண்டும். ஒரு இணையத்தளத்தை எப்போதும் கவனித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதைப் புதிதாக வைத்துக்கொள்ள விரும்புகிaர்களா? ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கங்களைச் சேர்ப்பதில் உறுதியாக இருக்கிaர்களா? அதனைப் பேணுவதற்குப் போதுமான பண வசதியும் நேரமும் உங்களுக்கு இருக்கிறாதா? இதை நீங்களாகவே செய்ய விருப்பமில்லை என்றால், ஒருவரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இணையத்தளத்திற்கான உங்கள் உழைப்புகள் அனைத்தும் வீணாகிப் போகும்.

தவறான கருத்து 2 : ஒரு இணையத்தளம், போட்டியாக உள்ள பெரிய வியாபாரங்களுக்கும் சிறிய வியாபாரங்களுக்கும் உள்ள இடைவெளிகளை சரிசெய்து விடுகிறது.

ஆம், ஒரு தொழில்சார் அழகான தோற்றம் உள்ள இணையத்தளம் உங்கள் சிறிய வியாபாரத்தை உண்மையைக் காட்டிலும் சிறந்த ஒன்றாகக் காட்டலாம். ஆனால் ஒரு செயற்றிறன்மிக்க திட்டமும் செயற்பாடுகளும் இல்லாவிட்டால், உண்மையை விட மதிப்பு குறைந்ததாகவே உங்கள் இணையத்தளம் உங்கள் வியாபாரத்தைக் காட்டும். இது போட்டிச் சூழலில் சிக்கலை உருவாக்கும்.

உங்கள் நிபுணத்துவத்தைக் காட்ட இணைத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்படி உங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் நிபுணத்துவத்தையும் காட்டலாம். மேலும் இதனால் வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நோக்கி ஆர்வமுடன் வருவார்கள்.

இருப்பதைக் காட்டிலும் சிறப்பாகக் காட்சியளிக்க ஒரே வழி உங்களுக்கே உரியதான தனிப்பட்ட டொமைன் பெயரை வைத்துக்கொள்வதாகும். ஒரு “www.yourcompanyname.com” எனும் வடிவத்திலான வலை முகவரி, உங்கள் இணைய சேவை வழங்குநர் அல்லது ஒன்லைன் சேவை ஆகியவற்றின் துணை முகவரிகளைப் (www.your ISP.com / yourcompany) பயன்படுத்துவதை விடத் தொழில்சார் தோற்றத்தைக் கொடுக்கும்.

மேலும் இது கண்டறியவும் இலகுவானது. உங்கள் தனிப்பட்ட டொமைனைப் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைவுதான். மேலும் பல இணையச் சேவை வழங்குநர்கள் உங்கள் தளத்தை அந்தப் பெயரின் கீழ் மிகக் குறைந்த மாதக் கட்டணத்தில் ஹொஸ்ட் செய்கிறார்கள். உங்கள் இணையச் சேவை வழங்குநர்களிடம் இதை எப்படிச் செய்வது என்பது பற்றிப் பேசுங்கள்.

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய மற்றொன்று தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். மணிகளையும் விசில்களையும் “அழகுக்காக” உங்கள் இணையத்தளங்களில் பயன்படுத்துவது சில நேரங்களில் உங்களுக்கு எதிராகச் செயல்புரிந்து விடும். ஒரு உதாரணம், ஒரு ஆலோசனை நிறுவனத்தின் முகப்பு பக்கத்தில் எத்தனை பேர் அந்த பக்கத்தைப் பார்வையிட்டார்கள் என்ற எண்ணிக்கையைக் கூறும் பிரபலமான எண்ணி பயன்படுத்துகிறது.

சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக அது இணையத்தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறலாம். ஆனால் நீங்கள் பெறுவது சரியானதாகவோ அல்லது தவறான தகவலாகவோ எண்ணிகளைப் பயன்படுத்தாமல் இருந்தால் இந்தக் கவலை இன்றி உள்ளடக்கத்தைப் படிக்கலாம்.

தவறான கருத்து 3 : ஒரு இணையத்தளத்தை நிறுவி விட்டதும், மக்கள் உங்களை தேடி வருவார்கள்.

மக்கள் உங்கள் இணையத்தளத்தைத் தாங்களாகவே கண்டுபிடித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கா தீர்கள். உங்கள் வழக்கமான சந்தைப்படுத்தல் கருவிகள் மூலமும் இணையத்தளத்தின் மூலமும் விளம்பரங்கள் செய்வதன் மூலம் உங்கள் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இங்கு சில பொதுவான வழி முறைகள் உள்ளன.

உங்கள் இணைத்தளத்தைYahoo!, Excite, Infoseek, google Lycos மற்றும் Hotbot போன்ற அனைத்து பெரிய தேடு பொறிகளில் பதிவு செய்யுங்கள். குறைந்த கட்டணத்தில் உங்கள் முகவரியைப் பல பொறிகளிலும் கோப்பங்களிலும் பதிவு செய்யக்கூடிய சேவைகள் பல உள்ளன. அதில் பிரபலமானது Submit It என்பதாகும். ஆனால் இவற்றிலும் நீங்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஏனெனில், இத்தகைய சேவைகள் உங்கள் தளத்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்யும். ஆனால் உங்கள் தளம் எப்படி விளக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.

இணைப்புகளையும் பதாகை விளம்பரங்களையும் (banner ads), பொருத்தமான (Complementary) தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்கும், போட்டியல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இணைப்பு வைத்துக்கொள்ள விரும்பும் தளத்தைக் பற்றி ஒரு மின்னஞ்சலைதீ Webmaster க்கு அனுப்பி ஒரு தலை கீழ் இணைப்பு ஏற்பாட்டைப் பெறுங்கள்.

இந்த பரிமாற்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களுக்கு அதிக இலாபம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இணைப்புப் பரிமாற்றம் போன்ற சேவைகளால், ஏனைய வியாபாரங்களுடன் விளம்பரங்களைப் பரிமாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் வைத்திருப்பவை களுக்கு நேர்விகிதாசாரத்தில் இலவச பதாகை விளம்பரங்களையும் இடம்பெறச் செய்யலாம்.

சந்தைப்படுத்தலின் இலக்கியம் முழுதிலும் உங்கள் இணைய முகவரியைப் பரவலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்து விளம்பரங்களிலும் சிற்றேடுகளிலும், வியாபார அட்டைகள், லெட்ர் ஹெட் ஆகிய அனைத்திலும் இணையத்தள முகவரியை இடம்பெறச் செய்யுங்கள். உங்கள் மின்னஞ்சல்களுக்கான கையொப்பக் கோவைகளிலும் அதை இடம்பெறச் செய்யுங்கள். இதனால் வாடிக்கையாளர்கள் உங்கள் செய்தியிலிருந்து இணையத்தளத்திற்கு நேரடியாக வர முடியும்.

inaiyathil padithathu

Read more ...