திருப்பூரில் டாலர் நகரம் - வாருங்கள் சகாக்களே!!

      மிகச்சிறந்த படைப்புகளை நாள்தோறும் நாம் வலைத்தளங்களில் படித்து வருகிறோம். அந்த வகையில் எனக்கு நல்ல குருவாகவும் அண்ணனாகவ்வும் இருந்து அவ்வப்போது தலையில் குட்டு வைத்து ஆலோசனைகளை இலவசமாக கொடுத்து வரும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்களின் முதலாவது மற்றும் திருப்பூரின் உண்மை முகத்தை எடுத்துச் சொல்லும்

" டாலர் நகர்" நூல் வெளியீட்டு விழா, 

ஜனவரி மாதம் 27 ஆம் தேதி, திருப்பூர், பல்லடம் ரோடு, டி.ஆர்.ஜி. ஹோட்டலில் நடக்க இருக்கிறது. (அன்று எனது பிறந்த நாளும் கூட,, அண்ணன் கிட்டே யாரும் சொல்லிடாதிங்க் அவருக்கும் தெரியாது : D)


      4தமிழ்மீடியாவில் அவர் எழுது வந்த  டாலர் நகரம் படைப்பை அவர்களே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.. 

காரணம் ஜோதிஜியின் எழுத்தாற்றல். 
    
   அவரிடம் பேசும் பொழுதே அவரின் ஆற்றலை கண்டு நிறைய வியந்திருக்கிறேன்.

நேரம் தவறாமை, துல்லியமான கணக்கீடு என்று மனுசர் எப்பப் பாரு கோடு போட்டு என்னை பெண்டு  எடுக்கிறார். ஆனால் அவரின் இந்த பண்பே என்னை மேலும் அவருடன் ஒட்ட வைத்து வருகிறது.

     டாலர் நகர் கைக்கு வந்ததுமே மூன்று நாள் லீவு போட்டு படித்துவிட முன்பதிவும் செய்துவிட்டேன். திருப்பூர்காரன் என்பதால் மட்டும் அல்ல, இந்த புத்தகத்தில் முதலாளிகள்,  தொழிலாளர்கள், வியாபார மாற்றங்கள் என்று பல்வேறு நிலைகளில் உள்ளவர்களின் மனநிலை பற்றியும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் தனது பார்வையில் ஒரு சேர்த்து வைக்க வேண்டிய பொக்கிசமாக தொகுத்து தந்திருக்கிறார். ஒரிரு பக்கங்களை புரட்ட தந்திருந்தார் அதில் கிடைத்த தகவல்களிலே இன்னும் எனது ஆச்சரியங்கள் அகலாமல் இருக்கிறது.

    அன்பு அண்ணனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் அனைவரையும்  வரவேற்கிறேன்.


Read more ...

இவ்வளவு தானா உங்கள் நோக்கம்?

        தொழிற்களத்தின் கட்டமைப்பை துவங்கியதில் இருந்தே எனது இந்த வலைப்பூவை தொடாமல் இருந்தேன். மிதமிஞ்சிய, எனது  மனதிற்குள் பாதித்திருக்கும் சில விசயங்களை உங்கள் அனைவருடனும் நேரடியாக பகிர்ந்திடவே இந்த பதிவு.

        எரிமலையும், கடலும் அமைதியாக இருப்பதற்காக அதனிடம் நாம் எப்படி அஜாக்கிரதை கொள்ளாமல் அதன் வீரியத்தை அறிந்து வியந்து நிற்கிறோமோ? அதே போலவே தான் இந்த இணைய உலகமும். இதன் பலனை, பலத்தை  முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் நாம் நம்மின் இன்றைய நேரங்களை வீணடித்தோமேயானால், வரலாற்றில் நமது தலைமுறையினர்களின் பெயர்களும் தவறிழைத்தவர்களின் பட்டியலில் சென்று சேரும்.  

    தமிழும் இணையமும், சமுதாயமும் இணையமும், தொழிலும் இணையமும்  என்ற  மூன்று தலைப்புகளின் கீழும் இந்த பதிவை நீங்கள் வாசிக்க முடியும். ஆனால் நான் இந்த பகிர்வுக்கு இவ்வளவு தானா உங்கள் நோக்கம்? என்று கேட்டதற்கான காரணத்தையும் பதிவின் இறுதியில் சொல்கிறேன்.


"பிறம்மகற்பம் என்பது, ஒன்றை தொடர்ந்து கிட்டதட்ட இருபத்தி ஒரு சுழியங்கள்   வரும் கோடிக்கோடி என்ற எண்ணிக்கையை குறிக்கும் தமிழ்ச் சொல்" உலக  மொழிகளில் எதிலும் இந்த எண்ணிக்கையை குறிக்கும் சொல் இல்லை என்று கூகுள் தேடுபொறி தேடல் கூட சொல்லி தமிழன் தம் நுட்பத்தையும், பெருமையையும் பீற்றிக்கொள்கிறது.

ஆம், திரை கடல் ஓடியும்  திரவியம் தேடு என்ற எம் பாட்டனின் பாட்டன்கள் உலகம் முழுவதும் எம் தமிழன் கால் தடத்தை  பதித்து வெற்றி அரசாண்ட வரலாற்று காலங்களை நினைவில் கூற விரும்புகிறேன்.

     சங்கம் வளர்த்த தமிழ் இன்று வருமானத்திற்காகவும், வாய்ப்புக்காகவும் மட்டுமே எக்கி நிற்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது. 

முத்தமிழின் சுவை உணர்ந்த வெள்ளையனும் இங்கே வீரமாமுனிவனாகி உள்ளான். எம் தலை உணரா உறவுகளோ தன் பலம் அறியாது அரியனைக்கு அடுத்தவனை தேடுகிறது.


     தமிழில் கோடிக்கணக்கான இலக்கியங்கியங்களை நாம் படைத்திருக்கிறோம். ஏன்? "உலகிலேயே அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே படைப்பு திருக்குறள் மட்டுமே!!" உலகின் பத்துகோடி தமிழர்களில் பத்து தலைமுறைக்கு பின்னரும் ஒற்றை வள்ளுவனை மிஞ்சவில்லையோ?


எப்படி அய்யா தமிழ் வாழும்? நீர் சொன்ன முயலும் ஆமையும் இங்கே முயலாமை என்றெல்லவா பதியப்பட்டிருக்கிறது? நாங்கள் ஏன் எங்கள் சிந்தனையை தமிழில் பதிக்க வேண்டும்.

தமிங்கிழம் படைப்போம் தடைகளை உடைப்போம் என்பதல்லவா எங்களின் தாரக மந்திரம்?

ஒன்றுக்கும் உதவாத ஊறுகாயல்லவா உங்கள் தமிழ் என்று பிரித்து பேசும் புதிய தலைமுறை நாங்கள்(?)!

இந்த எண்ணக்கள் தானே எங்கள் பதிவில் இருக்கும்.

      முகநூல் இருந்தும்  வீண் அரட்டைக்கு எங்கள் வலைப்பூவைத் தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்று அடம்பிடிக்கும் குழந்தையல்லவா நாங்கள்?

     உலகம் முழுவதும் ஐம்பதனாயிரத்திற்கும் மேலான தமிழ் வலைப்பதிவர்கள் உருவாகி இருந்தாலும் எங்களுக்குள் கூட்டல், கழித்தல்,  வகுத்தல்  கணக்குகளை பகிர நூறு அல்லது ஐநூறு பதிவர்களை மட்டும் தான் தெரிந்து வைத்து தொடர்ந்து தொடர்பில் வைத்து எங்களுக்குள் ஒற்றுமையுடன் செயல்பட்டு(?) நீயா  நானா என்ற ஏற்ற தாழ்வு பாராது ஒருவருக்குக்கொருவர் உற்சாக(பான)ம் கொடுத்துக் கொள்வோம். 

எந்த உரிமையை கேட்டுப் பெறவும் ஒரு கூட்டம் வேண்டும். 
66-ஆ னாலும் இ-- னாலும் ஒரு வார்த்தை ஏதிர்த்து பேச எனக்கு எப்படி தன்னந்தனியாளாய் தைரியம் வரும்?

       ஆங்கிலத்தைச் சாடி எனக்கு பிழைப்பு நடத்த தெரியும், ஆம், விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தின் 264 உலக மொழிகளில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் கட்டுரை ஆங்கிலத்திலும் பிற நாட்டு மொழிகாளிலும் இருந்தாலும் சங்கம் வளர்த்த தமிழன் விக்கிப்பீடியா தகவல்  களஞ்சியத்தில் உலக மொழிகளில், ....இல்லை ....இல்லை வேண்டாம் இந்திய மொழிகளில் மூன்றாவது இடத்தில்.

 பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். ஆம், எமது நாற்பத்தி ஒன்பதனாயிரம் கட்டுரைகளை தாண்டி, பங்காளிக்காரன் தெலுங்கில் எம்மை முந்தி இரண்டாவது இடத்தில் இருந்தால் பரவாயில்லை தானே??? 

அப்பப்பா மூன்றாவது இடம்...! கை தட்டுங்கள். ஆங்கிலத்துடன் போட்டி போட வேண்டியது இல்லையே??
தைரியமும், தன்னம்பிக்கையும், தெளிவையும் கொடுக்கும் வலைப்பதிவதால். ஆனாலும் இன்னும் தற்கொலைகளையும், கற்பழிப்பையும் தடுக்க நல்ல பதிவுகளுக்கு கருத்திட மட்டும் நேரம் இல்லை எமக்கு.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஓரு பிரபல பதிவரின் பதிவு சொன்னது, ஆங்கில பதிவுகளுக்கு மட்டும் ஆட்சென்சை நிப்பாட்டினால் அப்புறம் பாருங்கள் அவர்களில் எத்தனை பேர் கடையை மூடப்போகின்றார்கள் என்றார். 

உண்மைதானே? ஒரு  மணி நேரம் வலைபதிய  எமக்கு இருபது ரூபாய் செலவாகிறது, நான் ஏன் பதிய வேண்டும்.? எனக்கு சொந்தமாக தொழில்நுட்பமோ, அறிவியலோ, ஆன்மீகமோ, மருத்துவமோ தெரியாது, தெரிந்தாலும் தமிழ்  தட்டச்சு என் விசைப்பலகை உள்வாங்க மாட்டேன் என்கிறதே?

இணையம் தொழிலும் செய்யுமாம்? எங்கே செய்துதர சொல்லுங்கள் பார்ப்போம்.


     நான் கடந்த ஆறு வருடங்களாக பதிந்து வருகிறேன். நான் எதற்காகவும் புதிதாக எவரையும் வலைபதிய வற்புறுத்தாத தனிமை விரும்பி(?)

     ஒற்றுப்பிழையும் தொற்றுப்பிழையும் முதலில் கண்டு பிடித்து குற்றம் சொல்லி வளரும் நக்கீரனாய் பிழையை சொல்வது திருந்தத்தானே தவிர, தனி மனிதனை சாடுவதெல்லாம் எமக்கு தெரியாது(?).

      மன்னிக்க, இவ்வளவ்வு வரிகளும் யாரையும் புண் படுத்தவோ அல்லது புலமையை வெளிப்படுத்தவோ இங்கே நான் பதியவில்லை. மனதில் சில ஆதங்கம், உங்களிடம் பகிரவே எனது தனி வலைப்பூவில் சந்தித்திருக்கிறேன்.

    ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை முடித்து சமூகத்தில் நுழைகிறார்கள். என்னிடம் அலைபேசிய எத்தனையோ மாணவர்களில் பெரும்பாலும் வேலை கேட்டு பேசியவர்கள் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலை மாணவர்களே!! 

இன்று வழிகாட்ட ஆளில்லாமல் இந்த இளைஞர்கள் அனைவரும் மோசடி வலைகளில் எளிதாக சிக்கிக்கொள்கிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள். 

    கி.மு வில் இருந்தே ஈமூ போன்ற மோசடிகள் தொடர்ந்தாலும் சமீபத்திய நாளிதழ்கள் தான் தினந்த்தோறும் புதியவகை மோசடிகளை அம்பலப்படுத்துகின்றன.

    பல்துறையை சார்ந்த நண்பர்களும் உங்கள் அனுபங்களை, ஆலோசனைகளை உங்கள் தளத்தில் கட்டாயம் பதியுங்கள். நல்ல பல கருத்துக்கள் பலரையும் காலம் காலமாக சென்றடையும். முன்னோர்களின் படைப்புகளை பாதுகாக்க தவறிவிட்டோம். இருக்கும் காலத்திலாவது நம் சிந்தனைகளை பதிவாக பதிந்து வைப்போம்.

மேலும், உங்களின் தேடல்கள் விரிவடைந்து உங்கள் சுய மரியாதையையும் இந்த பதிவுலகம் மேம்படுத்திக் கொடுக்கும். 


     நாளைய எதிர்காலத்தில் இணையத்தால் மட்டுமே ஒரு மாபெரும் புரட்சியும், மாற்றமும் ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இணைந்து பணியாற்றுவோம்!! இணையத்தால் செயலாற்றுவோம்!!

- தொழிற்களம் அருணேஸ்
Read more ...