ஷேர் மார்க்கெட் - அடிப்படை 1

பிளாக் எழுத தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே மிகவும் அதிக அளவில் ஆதரவு தெரிவித்த மற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கும் தொடர்ந்து இந்த தளம் வளர உறுதுணையாய் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து வரும் இந்தியாவில் நமது பொருளாதாரத்தை நிர்னயிப்பதில் ஷேர்மார்கெட் எனும் பெருங்கடலே முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த பெருங்கடலில் பல திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருந்தாலும் நமது நோக்கமானது வாசகர்கள் அனைவரும் ஷேர் மார்க்கெட் தொடர்பான சில அடிப்படை அறிவினை பெற வேண்டும் என்பது தான்.

இந்த பதிவானது அதற்கான அடிப்படை அச்சாரமே ஆகும்.

சரி விசயத்திற்கு போவோமா..........

ஷேர் ரேட் இன்னைக்கு ரொம்ப உயர்ந்திருக்கே ...
அடக்கடவுளே இன்னைக்கு இவ்ளோ ஷேர் இறங்கிருச்சே....


இது மாதிரியான வசனங்களை அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.../

என்னதாங்க அப்படி அதுல இருக்கு...

தெரிஞ்சுக்கலாம் வாங்க சார், அதுக்குதானே நாங்க இருக்கோம்..

ஷேர் மார்க்கெட் .


     பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமான உலகளவிய நடைமுறையினையே ஷேர் மார்க்கெட் என்கின்றோம்.


  பொதுவாக , அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்ற அல்லது தொடங்கப்பட இருக்கின்ற ஸ்தாபனத்தின் முதலீட்டிற்கான மதிப்பில் நாமும் லாப நோக்கில் பங்கு கொள்ளும் செயல்முறையே ஆகும்.

ஷேர் பரிவர்த்தனை Share Trading நடைபெறும் முறைகளாவன,
  • டிரேடிங் அக்கவுண்ட்
  • டிமேட் அக்கவுண்ட்

  • டிரேடிங் அக்கவுண்ட்
      டிரேடிங் அக்கவுண்ட் என்பது பங்குகளை வாங்க, விற்பதற்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிலையாகும். இதில் உங்களுக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளுகம் பங்குகளின் ஏற்ற இறக்கங்களை மையமாக கொண்டு இயங்குகிறது. அதாவது மிகவும் நம்பிக்கையான ஒரு நிறுவனத்தின சில பங்குகளை நீங்கள் வாங்க்/விற்க மேற்கொள்ளும் செயல்முறையினை குறிக்கிறது.

  • டிமேட் அக்கவுண்ட்
      இது உங்களது ஷேர் அக்கவுண்டிற்கான மூலாதாரன அக்கவுண்ட் ஆகும், இதனை மையமாக கொண்டே உங்களது ஷேர் ஆனது இயங்குகிறது. அதாவது உங்களின் தனிப்பட்ட பங்குகளை சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை ஆகும். இது உங்களது வங்கி கணக்கிற்கான செயல்முறைகளை போன்றது.

மேலும் ஷேர் மார்கெட் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்..

நன்றி     பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
    Get cash from your website. Sign up as affiliate

    1 comment: