Eppadinga mobile la tamil la elutharathu?

Ithu ennoda mble la irunthu anupara muthal pathivu. Enaku tamil la type panra method eppadinu theriyala. Therinjavanga cmd la sollungalen. Mobile la E kalapai instal seiya mudiuma ?
Read more ...

சவுண்டு சர்வீஸ் தொடங்கலாம் சவுகரியமா சம்பாதிக்களாம்..

இன்றைய நவீன உலகத்தில் DVD மற்றும் Home Theatre சேல்ஸ் & சர்வீஸ் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திகாட்டிட தன்னுடைய அனுபவங்களையும் வெற்றிப் பாதையையும் உங்களுடன் சேர்த்து பயனிக்க நண்பர் R.வீரா அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.


வணக்கம்ங்க..

      என்னுடை 13 வது வயதில் முதன்முதல்லாக  ஒரு சர்வீஸ் சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கத்துக்க தொடங்கினேன். எனக்கு 20 வயது ஆகும் போது சொந்தமாக நானே ஒரு சவுண்ட் சர்வீஸ் சென்டர் தொடங்கினேன். அன்னையில் இருந்து என்னைய என் தொழில் பத்திரமா பார்த்துகுதுங்க.. 

    எத்தனையோ எலக்ட்ரானிக் துறை பத்தின  இன்ஜினீரிங் படிப்பெல்லாம் இப்ப வந்துருச்சுங்க. எம் பையன கூட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் சம்பந்தமான படிப்பையே படிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன். அவனும் இதில் மிக ஆர்வமாக இருக்கிறான். படிக்கும் நேரம் போக மீதி நேரங்களில் அவன் என்னுடன் கடக்கு வந்து ஆர்வமா பார்த்துட்டு இருக்கான். சொல்ல போனா கூடிய சீக்கரமே எனக்கு எதிரா ஒரு கைடை புடிச்சு உட்கார்ந்துடுவான் போல  இருக்கு...

சிறிய புன்னகையுடன் தனது தொழில் ஆலோசனைகளை பகிர்கிறார்..

உங்கள் ஏரியாவில் சுமார் 10*16 அளவிலான ஒரு சிறிய கடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..

பொதுவா DVD மற்றும் Home Theatre  சேல்ஸ் பாத்திங்கன ரொம்ப நல்லவே போகுதுங்க.
கடைக்கு தேவையான அட்வான்ஸ் தொகை போக, கொஞ்சம் இன்டீரியர் மற்றும் செல்ப் ரேக் அமைக்க செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு சிறந்த கற்பனையாளர்னா குறைந்த செலவில் மிக சிறப்பா உங்களது கடையினை நீங்க அமைத்து கொள்ளலாம்.

இன்டீரியர் மற்றும் பெயின்டிங் வேலையை முடிச்சதும். சரக்கு எடுக்க நீங்க வேறு எங்கும் தேடாதிங்க. அனைத்து மாவட்டங்களிலுமே பெரிய DVD மற்றும் Home Theatre  நிறுவங்கள் அங்கீகரிக்கப் பட்ட விற்பனை நிலையங்களை அமைத்துள்ளன. எனவே அங்கு சென்று உங்களது கடையினது விசிடிங் கார்டை கொடுத்து மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி வைத்து கொள்ளலாம். சென்னை, பெங்கலூர் மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களில் இன்னும் குறைந்த விலையில் DVD மற்றும் Home Theatre பொருட்கள் மற்றும் அதற்கான சர்வீஸ் பொருட்களை வாங்கிகலாம். முதல் முறை மட்டும் நீங்கள் நேரடியாக சென்று உங்களது DVD மற்றும் Home Theatre  சாதங்களை மொத்த விலையில் வாங்கிகொள்ளுங்கள். பிறகு தேவைப்படும் சமயங்களில் தொலைபேசி வாயிலாக தெரிவித்தால் போதும் அங்கீகரிக்கப் பட்ட விற்பனை நிலையங்களில் இருந்தே விற்பனை பிரதிநிதிகள் உங்களை தொடர்புகொண்டு உங்களது கடைக்கே வந்து சப்ளை செய்து விடுவார்கள். இதில் மேலும் சிறப்பு என்ன வென்றால் ஒரிரு பறிமாற்றங்களை நாம் சரியாக செய்துவிடுவோமேயானால் அவர்கள் நம்மை ஊக்குவிக்கும் முறையில் நாம் தரும் பணத்தின் மதிப்பை காட்டிலும் அதிக மதிப்பில் சாதங்களை இறக்கிவிடுவார்கள். நாம் விற்பனை செய்து வரும் லாபத்தில் மீதி தொகையை திருப்பி தந்துவிடலாம்.

      உதாரணமாக நாம் ஒரு பத்தாயிரம் செலுத்தி ஆர்டர் போடுவோமேயானால்   கம்பெனி சுமார் 30 ஆயிரம் வரையிலான பொருட்களை கூட நமக்கு இறக்கிவிட்டு போஇவிடும். பிறகு நாம் விற்பனையை செய்து மீதி தொகைகளை எளிய தவனைகளில் செலுத்திவிடலாம். நாம் நாணயமாக நடக்கும் பட்சத்தில் கம்பனிகள் நமக்கு மேலும் மேலும் பல ஊக்கங்களை அளிக்க தயாராக இருக்கின்றன.

சரி பொருட்களினை வாங்கி வச்சுடோம். அதை விற்பனை செய்ய வேண்டுமில்லையா..?

   முதலில் உங்களது வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு நிறைய விளம்பரங்களை செய்யுங்கள். தெரிந்தவர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களது பொருளுக்கான சந்தையினை ஏற்படுத்துங்கள். நாளடைவில் வியாபாரம் செழிப்படைய தொடங்கி விடும். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த முதலில் அவர்களது தேவையை புரிந்து கொண்டு DVD மற்றும் Home Theatre  போன்றவற்றின் தரத்தையும் அதற்கு கம்பனி தரும் சர்வீஸ் வாராண்டி பற்றின த்கவல்களையும் அளியுங்கள். விலையையை கூட்டியோ குறைத்தோ  சொல்லி விக்காதீர்கள். இரண்டுமே நம்பிக்கையை கெடுத்துவிடும். பொருக்கான தரத்தை பொருத்தே வாடிக்கையாளர்கள் திறும்பவும் வருவார்கள் எனவே குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற லோக்கல் சாதனங்களை சிபாரிசு செய்வதை குறைத்து கொள்ளுங்கள்..

இவ்வாறாக நடந்தால் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாக உங்கள் கடைக்கு வருவது நிச்சயம்

பெரும்பாலும் இது போன்ற DVD மற்றும் Home Theatre  சர்வீஸ் சென்டர்கள் விற்பனையில் மட்டுமல்ல் சர்வீஸ் செய்து கொடுப்பதிலேயே தனது லாப விகிதத்தை பெருக்குகின்றன..

நான் உங்களகு பரிந்துரை செய்ய விரும்புவது, நீங்கள் நம்பிக்கையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உங்களில் பொருட்களை வாங்கி செய்பவர்கள் தங்களது DVD மற்றும் Home Theatre  சாதனங்களை ரிப்பெயரிங் சர்வீஸ் காக உங்களிடமே கொண்டு வருவார்கள். அப்படி வரும் போது உங்களுக்கு சர்வீஸ் செய்ய தெரியும் பட்சத்தில் நீங்களே சர்வீஸ் செய்து கொடுங்கள். இல்லையென்றால் கவலை பட தேவை இல்லை.. சர்வீஸ் மட்டுமே செய்து கொடுப்பவர்கள் எப்படும் உங்களது கடைக்கு வாடிக்கையாளராகவோ அல்லது நண்பர்களாகவோ அனுகுவார்கள். அவர்களிடம் தொடர்ந்து நீங்கள் சர்வீஸ் செய்து உங்கள் வாடிககையாளரிடம் கொடுக்கலாம். மேலும் ஸ்பேர்ஸ் வாங்கி போட்டு சர்வீஸ் செய்யும் போது மிகுந்த லாபத்தை பார்க்கலாம்.

பொதுவாக எனது கடைக்கு வந்து சர்வீஸ் செய்யும் சர்வீஸ் மேன்கள் நிச்சயமாக ஒரு நாளைக்கு 500 ரூ. வரை சம்பாதிக்கின்றனர். அப்படியென்றால் பார்த்துகொள்ளுங்கள்.

பொதுவாக 20% லிருந்து 40%  உங்களது இலாபமானது அமையும்.

ஒரு நாலைக்கு இரண்டு DVD மற்றும் Home Theatre  விற்றாலே போது மாதம் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை சம்பாதிக்களாம். அதுபோக சர்வீஸ் விகிதத்தில் பார்த்தால் எப்படியும் தினமும் ரூ.300 உறுதியாக வரும்.

சுமார் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை இருந்தாலே போதும்.
உங்களது தொழில் கன்னியமாக நடக்கும் பட்சத்தில் உங்களது வெற்றியானது தீர்மானிக்க படும்.

எப்படியும் தொழில் தொடங்கிய ஒரிரு மாதங்கள் சற்றே சருக்கல்கள் வருவது சகஜம், அதற்கு பயந்து தளர்ந்து விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உங்களது பாக்கெட்டை நிரப்புவார்கள்.

முயலுங்கள்.. வெற்றி நிச்சயம்... வளருங்கள்..

வாழ்த்துகளுடன்..
R.வீரா

நன்றி!!


Read more ...

இது எங்களோட தப்பு இல்லீங்கோ..

துக்கிரிதனமா பேசிக்கினு இருந்த துன்ற சோத்துக்கு தாளம் தான்ட போடனும்..

இன்னாட சொல்லிகினு இருக்கேன் தாளமா போடுறே..?

சொன்னத கேட்டுதான் தாளம் போடுறேன்..

ஆ ஆ கண்ணம் வரைக்கும் கிழியிது வாய் துடுக்கு..

இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்..

புரியாம பேசாதே பல்ல தட்டுவேன்..

பேசறதே புரியாது பொக்கையாயிடுவேன்.. பிப்பி பிப்பி பீ..

ஆர பாத்து பேசறேனு நெனைப்பிக்குதா..?

பேரு வைச்ச ஆத்தாவ மறப்பேனா...

வம்பு பன்னுனே கொன்னுபுடுவேன்..

ஆ ஆ ஆ ஆ நி வளர்தது அப்புடி.. நான் இன்னா பன்னுவே..

ராங்கு பன்னாதே எங்கையில ராங்கு காட்டுனா எல்லாமே ராங்கா பூடும்..

அது எப்புடி பூடும்..?
ராஜா கைய வைச்சா ஏன்டா டேய் அது ராங்கா பூடுமாடா..?

பூட்ஹ்க்க்ட்ச்க் பூச்ல்ட்ல்ச்ட்

தா ட ச்சீ.. இப்பென்ன பூடும்றீங்களா.. பூடாதுன்றீங்களா..?

 போவாது.. போவாது..

அப்படி சொல்லு.. யக்கூ...

ராஜா கைய வைச்சா... ஆ.. ஆ.. ஆ.. ஆ.. அது ராங்கா போனதில்லை..
         --- ----- ------ ------ --------------------- -------------------         ------------

இப்படித்தாங்க இன்னும் நம்ம ஹமாம் சோப்பு அம்மாக்கள் மாறாம எப்பவுமே நம்மை திட்டிக்கிட்டே இருக்காங்க..

நாமெல்லாம் யாருங்க..`?

சும்மா அந்தர் பன்ன வேண்டாமா...?

ம்ம்..  சரி விசயத்துக்கு வருவோம்..

பொதுவாக காலேஜ் முடிந்த இரண்டு வருடமா நம்ம இளைஞன் படுற பாடு தாங்க
  
Read more ...

ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா ( மதுரை ஸ்பெஷல் )

ஜில்லுனு தொழில் செய்யலாம்... ஜிவ்வுனு காசு பார்க்கலாமா..?

ஜிகர்தண்டா இருக்கு//.

அடேயப்பா மதுரை அருவாளுக்கு மட்டும் அல்லங்க ஜிகர்தண்டாக்கும் பேர் போனதுங்க.. நம்ம ஊருலேயும் மதுரை மணத்தோடு ஜிகர்தண்ட தொழில் தொடங்க தோழர் சீனிவாசன் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்..

கடந்த 12 வருடங்களாக ஜிகர்தண்டா மற்றும் பாதாம் பால் தொழில் தொடங்கி நான் சந்தித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவாக மதுரை மாவட்டங்களில் மட்டுமே சுவை மிகுந்த ஜிகர்தண்டா தொழில் பரவலாக இருக்கிறது.. குறைந்த முதலீட்டில் அதிக வருவாயை தரக்கூடிய ஜிகர்தண்டா தொழிலை ஏனைய மாவட்டங்களிலும் சிறப்பாக தொடங்கி வெற்றிகரமான வருவாயை ஈட்ட என்னுடன் பயணிக்க உங்களையும் அழைக்கிறேன்..

மூலதனமாக கடின உழைப்புடன் கூடிய..,


  • 10x16 அளவிலான சுகாதாரமிக்க அறை
  • விறகு அடுப்பு ஒன்று
  • 30லி கொள்ளளவுள்ள ஒரு அலுமினிய பாத்திரம்
  • நன்னாரி சர்பத் 
  • ஐஸ்கிரீம் மேனுவல் மெசின்
  • 0.5HP அளவுள்ள மின் மோட்டார்
  • ஒரு வாகனம் ( TVS Excel ) 
  • குளிர்பதன பெட்டி மற்றும்
  • கடைக்கு தேவையான ஸ்டால் கூண்டு
ஆகமொத்தம் குறைந்த பட்சம் ரூ.50000 முதலீடு இருந்தால் போதும்.. 




ஜிகர்தண்டா செய்யும் முறை :

  • நன்கு காய்ச்சிய தூய்மையான பால்
  • நன்னாரி சர்பத்
  • கடல் பாசி
  • பாலாடை
  • வெண்ணிலா ஐஸ்கிரீம்
தேவையான பதத்தில் கலந்து கொடுத்தால் ஜில்லுனு ஜிகர்தண்டா ரெடி..

பால் காய்ச்சும் முறையானது., முந்தைய நாள் இரவிலேயே சுமார் 10லி பாலினை 5லி ஆகும்படி கொதிநிலையில் சுமார் 4 மணி நேரம் காய்ச்சவும். பிறகு தனல் வெப்பத்திலேயே இருக்கும் படி பாலை அமர்த்தி இரவு முழுவதும் வைத்து விடவும்.. 5லி பாலானது சுமார் 3லி அள்விற்கு பதமாகிவிடும். பிறகு விற்பனைக்கு கொண்டு செல்லும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்..
விற்பனை நிலையத்தில் வைத்து பாலுடன் நன்னாரி சர்பத், கடல் பாசி,  பாலாடை ஆகியவற்றை போதுமான அளவில் கலந்து மேலே வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து கொடுத்தால் போதும் சுவையான ஜில்லென்ற ஜிகர்தண்டா ரெடியாகிவிடும்...

குறிப்பு : ஐஸ்கிரிம் மெசின் வாங்க முடியாதவர்கள் அதனை கிலோ கணக்கில் ஆர்டர் செய்து ஐஸ்கிரீம் கடைகளில் வாங்கி வைத்து கொள்ளலாம்..
கடல் பாசியை சுமார் 5 மணி நேரமாவது முன்பே ஊரவைத்துக் கொள்ளவும்.

45% அளவில் நாம் செய்யும் முதலீடுக்கு ஏற்ப்ப இலாபம் பார்க்கலாம்.
சராசரியாக ஒரு டம்ளர் ஜிகர்தண்டாவை ரூ.15 க்கு விற்கலாம்.
நமக்கு ஒரு டம்ளருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

மேலும் ஜிகர்தண்டா தொழிலில் பார்ட்னராகவோ அல்லது தொழில் முறை தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள். முடிந்த வரை தங்களுக்கான ஆலோசனைகளை வழங்க ஆயத்தமாக உள்ளேன்..






தொடர்புக்கு :

83446 04862
அல்லது
maduraijigarthanda@gmail.com என்ற மின் அஞ்சலிலும் தொடர்பு கொள்ளுங்கள்

///////////////////////////////////////////
//////////////////////////////

நன்றி திரு.சீனிவாசன்


மேலும் சுவைக்க..,

......
....


அடி முட்டாள் பெண்ணே..!

உருவமும்..,
ஓசையும் கொண்ட
என் தமிழிடம்
உணர்வுகளை பங்கிட
என் உள்ளம்...



மேலும் ரசிக்க.. Click :  http://malaikkathalan.blogspot.com


Get cash from your website. Sign up as affiliate
Read more ...

சூப்பர் மார்க்கெட் சொந்தமாக தொடங்க

5500 ரூபாய் முதலீட்டில் சூப்பர் மார்க்கெட் தொடங்கலாங்க..
Read more ...

வாருங்கள் வழி காட்டுங்கள்

வர்த்தகம், வியாபாரம், தொழில், வணிகம், வாணிபம் என்றெல்லாம் பெயர் கொண்டிருந்தாலும் தொழில் தொடங்கவும் அதை திறமையாக நடத்தவும் தொழில் முறை சார்ந்த அனுபவ அறிவை சிறிதேனும் தெரிந்து கொன்டாலேயே அன்றி முழுமையான தொழில் வல்லுனராக இயலாது. எனவே நமது வலைதளத்திற்கு வருகை தரும் அனைவரும் பயன்பெரும் வகையில் சிறப்பான தொழில் சார்ந்த பதிவுகளினை இட தீர்மானித்துள்ளோம். சக வலைப்பதிவாளர்கள் தங்களின் தொழில் முறை கருத்துக்களையும், அனுபவங்களையும் கமெண்ட் மற்றும் press4business@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவிப்பதின் மூலம் மற்றவர்களும் பயன் அடையச்செய்யலாம்.



  • தாங்கள் MLM போன்ற துறையில் வல்லுனராக திகழ்பரா..? அல்லது புதிதாக தொடங்கியுள்ளிர்களா..? 
  • இன்டர்நெட் மற்றும் இணைய வடிவமைப்பு துறை சார்ந்தவரா..?
  • கேட்ரிங்க் அல்லது ஹோட்டல் தொடர்பான துறை பொருளிட்டாரா..?
  • பிரிண்டிங், காலண்டர் டிசைன் போன்ற வேலை செய்து தருபவரா..
  • உங்களது சொந்த பிராண்ட் அல்லது பொருளை சந்தை படுத்த வேண்டுமா.?
  • அட, உங்கள் வலைப்பதிவையேனும் கூட எமது பதிவில் விளம்பர படுத்த வேண்டுமா..? ( தொழில், வணிகம் சம்பந்தமான பதிவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள படுவர்கள் )
  • சேர் மார்க்கெட் அல்லது வேறு வகைப்பட்ட புக்கிங் அல்லது புரோக்கிங் அலுவலகமா..?
  • டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் சென்டரா..?
  • கம்ப்யூட்டர் பயிற்சி நிலையமா..?
  • மெக்கானிக் சர்வீஸ் செய்பவரா..?
  • இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனமா..?
  • ஆர்டர் தேடுபரா..? அல்லது கொடுக்க வேண்டுமா..?


     உங்களது கம்பெனி பற்றி தெளிவாக விளக்க குறிப்புடன் உங்களது தொலைப்பேசி எண்ணையும் பகிர்வதின் மூலம் இந்த தளத்திலிருந்து மேலும் உங்களது தொழிலை இலவசமாக விரிவு படுத்துங்கள்.

தொடர்புக்கு

 press4business@gmail.com

Get cash from your website. Sign up as affiliate
Read more ...

வருமானத்தை பெருக்க வளமான வழிகள்...

நமது மாத வருமானத்தை இரட்டிபாக்கலாம்
Read more ...