இலச்(சிய)சங்களை எளிதாக அடையலாம்...


பல நூறு கோடி ரூபாய்களை எளிதாக சம்பாதிக்க எளிதான வழி என்னவென்று தெரியுமா..?

தேடி தேடி அழுத்தே போய்விட்டது என்று புலம்பல்களை கேட்டுக்கொண்டே இருந்தால் போதுமா..?

இதோ இலச்சங்கள் உங்கள் கைகளில புரளப்போகிறது..
ஆம், இனி நீங்களும் கோடீஸ்வரர் தான்..

இருங்க அவசரப்ப படாதிங்க முதலில் ஒரு வெற்றிக் குறி சொல்லிட்டு ஆரம்பிப்போம்..

என்ன ரெடியா..?
ம்,,
நான் பிஸினெஸ் பன்னப் போறேன்..
அதுல நிறைய சம்பாதிக்கப் போறேன்..

ஓகே.. இனி விசயத்துக்கு வருவோம்..

என் நண்பர் ஒருவர் என்னை பார்க்க நேற்று இரவு வந்திருந்தார்.. ( ஆபிஸ் மூடிய பிறகு வந்திருக்கலாம், தபிச்சிருப்பேன்,,, ம்ம்ம்ம் ). அருண் எனக்கு ஒரு உதவி செய், எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு ஒரு வழி சொல்லு என்றார். விசயம் என்ன என்றேன்.

காலேஜ் முடிச்சு இரண்டு வருசம் ஆச்சு, இன்னும் என்த வேலையும் செட் ஆகல, நானும் எத்தனையோ தொழில் மற்றும் வேலைக்கு போய் பார்துட்டேன், ஆனா எனக்கு எதுமே சரியா அமையல, என்த வேலையும் எனக்கு முழுமையான ஆதாயத்தை தர மாட்டிங்குது, எவ்லவோ முயற்சிக்கு பின் இப்பதான் ஒரு தொழில் செட் ஆயிருக்கு.. இதுல நான் எப்டியும் ஜெயிச்சு காட்டிருவேன்.. பல லச்சங்களை ஒரிரு வருடங்களில் சம்பாதிக்கப் போறேன்.. என்றார்.

சரிப்பா நல்ல விசயம் தானே..? நான் என்ன உனக்கு உதவனும், என்ன குழப்பம் உனக்கு..?

என்மேல் எனக்கு நிறைய தன்னப்பிக்கை எனக்கிருக்கு.. அது போலவே நான் இப்ப தேர்ந்தெடுத்திருக்கிற பிஸினஸ் மேலயும் எனக்கு நம்பிக்கை நிறைய இருக்கு.. நான் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைக்காரணிகள் அனைத்தையுமே நான் செஞ்சாச்சு,, ஆன எனது நெருங்கிய உறவினர் ஒருவர் என்னை திடிரென்று அழைத்திருந்தார். அவர் மிகவும் பிரபலமான தொழில் அதிபர் ஆவார், அவர் தனது கம்பெனியை என்னை கவனித்துக்கொள்ள சொல்கிறார். எனக்கு முழு அதிகாரமும் அவர் தனது நிர்வாகத்தில் கொடுத்து விடுவதாகவும், ஒரிரு வருடங்களில் தனியாகவே ஒரு கம்பெனியை உனக்காக வைத்து தருகிறேன் நீயே கவனித்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார். இபோது எனக்கு மிகப்பெரிய குழபம் என்னவென்றால், நான் எனது உறவினரிடமே செல்லட்டுமா.. அல்லது எனது சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதா.. என்றே ஆகும் என்றார்.

சரியான முடிவு என்ன என்பதை அறிய முடியவில்லை,, இரண்டுமே எனக்கான சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. என்ன செய்ய என்றார்.

சரி முதலில் குழப்பத்திற்கான காரணம் என்ன ..?
1.) சொந்த தொழில்
2.) சொந்தகாரர் தொழில்


1.) சுய தொழில் வாய்ப்பு :-


 • தொழியில் போதிய அனுபவம் இருக்காது,
 • ஏதேனும் தவறு நிகழ்வதாயின் முழு பொறுபையும் தானே சுமந்தாக வேண்டும்,
 • முதலீடு பற்றிய கவனம் மிக அவசியம்,
 • பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்,
 • கூடுதல் வேலைபழுவை சந்திக்க நேரிடும்,
 • உழைப்பிற்கான முழு ஆதாயத்தை பெற போதுமான பொறுமை மிக அவசியம்,
 • எத்தகைய கால சந்தர்ப்பத்திலும் பின்வாங்க கூடாது,
 • உற்பத்தி பொருளுக்கனா சந்தை படுத்துதலையும், அதற்கான விற்பனை முறையையும் சரியாக கையாள வேண்டும்,
 • தனக்கான களத்தினை அமைப்பதில் கவனத்துடனும் பாதுகாப்பான வழிமுறை அல்லது மாற்றுத் திட்டத்தையும் உடன் வைத்திறுத்தல் அவசியம் ஆகும்..
ஆக, இத்தகைய காரணிகளினை முழுமையாக அலோசித்துக்கொள்//.

சரி இரண்டாவது வாய்ப்பானது

2.) வேலை வாய்பு

 • முதலீடு பற்றிய அச்சம் தேவையில்லை
 • தேவையான அனுபவத்தை கற்பதற்கான நேரம் கிடைக்கும்
 • சிக்கல்களில் ஆலோசனைகளை பெற வழி உண்டு
 •  வருமானத்தை அடைவதிலான சிரமங்கள் பங்கு போட்டுக்கொள்ளலாம்
 • நமது நிர்வாகத்திறன் மட்டுமே நமக்கு சொந்தம்
 • எதிர்காலத்தில் நாம் வெளியேற்ற பட நேரிடலாம்
 • நம்பகத்தன்மையற்றதாகவே வாழ்வியல் நடைமுறை இருக்க கூடும்....
உங்களது பிறச்சனை என்னவென்றால், சரியான பணி வாய்ப்பாக இரண்டுமே இருக்கிறது. இதில் சிறந்த தொழில் எது என்பதை தீர்மானிக்க தேவையில்லை.. உங்களுக்கான களமானது உங்கள் கையிலேயே இருக்கிறது. 

" வாய்ப்பானது யாருக்கும் எளிதில் வருவதில்லை, அப்படிப்பட்ட வாய்பு வரும் போது அதை பயன்படுத்திக்கொள்வதில் தவறு நேர்ந்துவிடக்கூடாது "

எத்தகைய தொழிலையும் நாம் நினைத்தால் சிறப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும்.. உதாரனமாக வேலையே இல்லை தொழில் எதுவும் தெரியாது என்று புலம்பிய ஒருவன் ஒரு டிபார்ட்மென்ட் ஷ்டோருக்கு சென்றான், மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த அவன் சில நாட்களிலேயே அங்கு வினோதம் ஒன்றை கண்டான். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தினம் தினம் விற்று விடுவதையும்,  இன்ன பிற துணி வகைகளும் விற்பனையில் வெகுவாகவும் ஆவதை கண்டான். ஆனால் நுலைவாயிலில் போடப்படும் மேட் என்னும் கால் மிதிகளை ஒரு சிலர் மட்டுமே வாங்குவதையும் கண்டான்.
மேலாளரிடம் காரணம் கேட்டதற்கு இங்கு வருபவர்களின் நோக்கம் மளிகை மற்றும் அவர்களுக்கான துணி மற்றும் வாசனை திரவிங்கள் போன்றவற்றை வாங்கும் நோக்கத்துடனே வருகிறார்கள், இதைப் போன்ற கால்மிதி மட்டுமே வாங்க வேண்டும் என்ற என்னத்துடன் யாரும் வருவதில்லை, வந்த போது கண்ணில் பட்டால் மட்டுமே இது போன்ற சில பொருள்களையும் சேர்த்து வாங்க்லுகின்றனர் எனவே தான் எளிதில் விற்பனையாகத இது போன்ற பொருட்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை என்றார்.

அந்த மாதம் சம்பளம் வாங்கிய அவன், மொத்த தொகைக்கும் அங்கேயே மளிவான விலையில் மேலாளரிடம் பேசி அந்த கால் மிதிகள் தொகைக்கான அளவில் வாங்கினான்.. பிறகு வீதி வீதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த கால்மிதிகளை விற்பனை செய்தான்.   கால்மிதியை மட்டுமே வாங்க வேண்டும் என்று டிபார்ட்மென்ட் ஷ்டோருக்கு செல்லாத கூட்டம், வீட்டிற்கே வந்ததும் அதை வாங்க தவறவில்லை,, எனவே மொத்த காய் மிதியையும் எளிதாக விற்றான். அதில் சொற்ப இலாபம் அடைந்த அவன் வந்த வருமானதை மேலும் முதலீடு ஆக்கினான்.. தற்போது அவன் ஒரு சிறிய தொழிற்சாலையில் சில பேரை வேலைக்கு வைத்துக்கொண்டு தனது வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளான்..

   நம் பார்வையி தான் அனைத்துமே இருக்கிறது.. நீ உனது உறவினரிடம் சென்று வேலை செய்தாலும் நீயே சொந்தமாக தொழில் செய்தாலும் அதில் உனக்கான தனித்தன்மையை ஏற்படுத்து, என்னைபொறுத்த வரையில் நீ தேர்ந்தெடுத்த தொழிலையே நீ செய்வது மிகவும் உனக்குள்ளான தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடும், இரண்டுமே சிறந்தது என்றாலும் முதலாவாதாக இருப்பதையே நீ செய்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றேன்.

நண்பரும் சரி என்றார்;

சரி விஷயத்திற்கு வருவோம்..,  முதலில் சொன்ன அந்த கோடிஸ்வரனாக ஆக என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா..?


 • எதாவது ஒரு கட்டத்தில் தெளிவாக ஒரு முடிவு எடுங்கள்
 • அதற்கு செயல் வடிவம் கொடுங்கள்


 அவ்வளவு தாங்க, நீங்களும் கோடிஸ்வரர் தானே..

" கேள்விக்குறி (?)+  கேள்விக்குறி (?)  =  கேள்விக்குறி (?)
வேள்விக்குறி (?)  + கமா (,) = ஆச்சரியக்குறி (!) "நல்லதோ,  கெட்டதோ யாராவது கருத்து சொல்லுங்கப்பா..

நன்றி!

Read more ...

சாதனை நாயகர்கள்


வியாபார உலகில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவருமே மனதினில் எபோதும் வைத்திருந்த உறுதி யாதெனில் விடா முயற்சியே ஆகும்.

எத்தகைய சூழ்நிலையிலும் தாங்கள் எடுத்துக்கொண்ட எண்ணப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல்
வெற்றி பெறும் வரை சமூகத்திலும், சக நணபர்களிடமும் கூட எத்தனையோ அவப்பெயர்களை தாங்கிக்கொண்டு சாதித்துகாட்டியவர்களே இன்றைய சாதனை நாயகர்கள் ஆவார்கள்..

நம்மில் எத்தனையோ பேர் தன்னம்பிக்கை புத்தகங்களையும், சி.டி. களையும் தேடிச் சென்று வாங்கி ஆர்வமுடன் படிப்பதை பார்க்கின்றோம்.

" சரித்திரத்தை படிப்பவர்கள் யாவரும் சரித்திரம் படைப்பதில்லை ஆனால் சரித்திரம் படைத்தவர்கள் யாவருமே சரித்திரம் படித்தவர்களாவரே."

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன, படித்து விட்டு வேலை இல்லை என்போரையும், படிக்காததால் வேலை இல்லை என்போரையும் கண்டுகொண்டே தானே இருக்கின்றோம்?

தன்னம்பிக்கையை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தேடல் என்பதை எப்போதும் மறவாமல் இருக்க வேண்டும். அனைவருக்குமே தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக ஜப்பானின் சுசிகியையும், ஆப்ரஹாம் லிங்கனையுமே தேடிப்படிப்பதில் தவறேதும் இல்லை.. ஆனால் நமது நெருங்கிய நண்பனின் அண்ணனையும், தூரத்து உறவினரானவரையும், ஏன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மனிதரையும் கண்டுக்கொள்ளாமலே இருக்கின்றோம்..?

ஆமாம் நாம் பெரும்பாலும் கையை கண்களுக்கு எதிரே மிக அருகில் பிடித்துக்கொண்டு காட்சியினை தேடிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை.

தினம் தினம் போராட்டங்களை சந்திதுக்கொண்டு நம் சக இளைஞர்களை பார்க்கின்ற போதே நமக்கான வழித்தடத்தினை நாம் அறிந்துகொள்ளலாம். எனக்கு தெறிந்த நண்பர் ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை செய்துவந்தார். மிக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவரை இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனது அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் கடன் பெற்று வாழ்க்கையோட்டிக்கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன் எனது அலுவலகத்திரற்கு வந்திருன்த அவரை கண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது டிரைவர் வேலையை செய்து கொண்டே பகுதி நேரமாக ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் முகவராக சேர்ந்து இரண்டு வருடங்களாக பலரையும் சந்திதித்து நிதானமாக தனது பணியினை செய்து வந்திருக்கிறார். இன்று என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு நட்சத்திர ஹோட்டலில் ட்ரீட் கொடுக்கும் அளவிற்கு தனது வளர்ச்சியை கண்டிருக்கிறார். நண்பரிடம் அவரின் வளர்ச்சிக்கான காரணம் கேட்டேன்..

எத்தனையோ இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன அவற்றுள் எந்த வித வேறுபாடும் பெரியளவில் இல்லை. அவற்றின் மதிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் தனித்தன்மையிலேயே அவற்றின் மதிப்பானது உயருகிறது. நான் முதலில் முகவராக சேர்ந்ததுமே என் நெருங்கிய நண்பர்களிடம் சென்றேன் அவர்கள் என்னை கண்டதுமே ஓட ஆரப்பித்தனர் காரணம் அவர்களை பாலிசி போட கேட்டதால், நாளடைவில் எனக்கே வெருப்பாகி விட்டது இருந்த வேலையும் கூட தள்ளாட்டம் கண்டது ஆனாலும் என்னிடம் தொழில் செய்யவோ மூலதனம் இல்லை எனவே எனக்கான வாசல்படி இதில் தான் உள்ளது " தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்..?" அதனால் மீண்டும் போராட துணிந்தேன் எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட எனது விசிடிங்கார்டை கொடுத்து விடுவேன். பஸ்சில் போகும் போதும், டீ சாப்பிடும் போது பக்கத்தில் இருப்பவர்களிடம் இப்படி எந்த சந்தர்ப்பத்தையும் நான் எனக்கான வழித்தடமாக மாற்றிக்கொள்ள தயங்கியதில்லை எத்தனையோ அவமானங்கள், கிண்டல்களை சந்திதேன் விளைவு இன்று கை நிறைய வருமானம் பார்க்கிறேன். என்னை சந்திக்க மறுத்த நண்பர்கள் கூட இப்போது அவர்களாகவே என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசுகின்றனர். இதற்காக நான் செயவிட்டது எனது நேரத்தையும் விடாமுயற்சியையும் மட்டுமே ஆகும். என்றார்.

ஆம்,, இது போலவே ஆம்வே நிறுவனத்தில் சேரும் படி என்னை அறிவுருத்திய நண்பரும்குட தனது இலச்சியங்களை இலச்சங்களாக்க பட்ட பட்டினை விளக்கியுள்ளார்..

இன்னும் எத்தனையோ சக நண்பர்ககள் தங்களது வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் அது எத்தகைய தொழிலாக இருந்தாலும் அவர்கள் தன்னையும் தன் தொழிலையும் நம்பிக்கையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மைப்பாட்டை அறியலாம்.

ஆம்வே தவறானது, இன்சூரன் ஏஜன்ட் ஏமாற்று பேர்வலி என்று வசைபாடும் கூட்டத்திற்கு நடுவே இவர்களும் தனது வெற்றியை பதிய வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்..?


தயக்கத்தை விட்டொழியுங்கள்...
தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்...
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் முழுமையாக ஈடுபடுங்கள்...

வெற்றி என்பது எளிதில் கிடக்காது என்பதை உணருங்கள்....
Read more ...