உங்கள் வலைத்தளம் தரமானதா..?

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Read more ...

இணைவதால் வரும் இணையத்தில் வருமானம்

நமது தமிழில் மொழில் முதன் முறையாக ஒரு புதிய முயற்சியாக இணையத்தில் ஒரு புது எழுச்சியை கொண்டு வருவதற்காகவும், வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் வருமானத்தையும் தேடி தரும் விதமாக புதுமையான ஒரு இணைய வலைத்தளமானது தனது முதல் சேவையை தொடங்கியுள்ளது.



இந்த தளத்தில் இலவசமாக உறுப்பினராக இணையும் அனைவருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக தள வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

தளத்தின் தோற்றமும், முறைமையும் மிக எளிதாகவும் கவரும்படியும் அமைந்திருப்பதுடன் வருமானத்தையும் ஈட்டித்தரும் என்பதை உணரமுடிகிறது.






இந்த தளமானது எப்படி இயங்குகிறது என்பதை காத்திருந்து தான் தெரிந்துகொள்ள முடியும்.  ஏனென்றால் தளத்தின் வருமானத்திற்கான முழு செயல்பாடும் நவம்பர் மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்க இருக்கிறது.

இப்போதே தங்கள் தளத்திற்காக பயனாளர்களை சேர்க்க தொடங்கிவிட்டது.

உறுப்பினராவதற்கு அப்படி ஒன்றும் சிறமப் பட தேவை இல்லை.

என்னங்க சேர்ந்துதான் பார்ப்போமே...

தள முகவரி

http://cpedelive.blogspot.com


( கொசுறு தகவல் : நிச்சயமாக இந்த தளத்தில் வருமான வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம், சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுத்தலாம். காரணம் இந்த தளத்தின் தொழி வாய்ப்பு பிரிவில் எனக்கும் ஒரு சிறிய பங்கு உள்ளது )

நவம்பர் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்றே உறுப்பினராக இணைந்துவிடுவோம்.





Read more ...

வலை போட்டு பணம் பிடிக்கலாம்..

    வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை கொண்டே வலைப்பதிவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை உணரமுடிகிறது. எதற்காக இவர்கள் வேலை மெனக்கெட்டு எழுத வேண்டி இருக்கிறது..? என்று பல வித சிந்தனைகள் இருந்தாலும் கூட, சுவாரசியம் கொஞ்சும் வார்த்தைகளின் மூலமாக நம்மை கட்டி இழுக்கும் வல்லமை கொண்ட பதிவர்கள் பலர் இருக்கின்றனர் என்பதே உண்மை. 
   
  ஆரம்பத்தில் வலைப் பதிவின்பால் ஆர்வம் கொண்டு ஏதேனும் கிறுக்க தொடங்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது எழுத்தின் தரத்தினை கூட்டி நாங்களும் நல்ல பதிவர்கள் தான் என்பதை பலரும் நிருபித்து காட்டி வருகின்றனர். வலைப் பதிவுகளின் தலைப்புகளை வைத்தே பதிவர்களின் எண்ணத்தையும் தரத்தினையும் அறிய முடிகிறதல்லவா..?






    வலைப்பதிவை தொடங்கிய உடன் முதன் முதலாக ஒரு பதிவை போட்டிருப்போம்.. அதற்கு பார்வையாளர்கள் வர வைக்க என்ன செய்வோம்..? நமக்கு பொதுவாக தெரிந்த மட்டும் ஆர்க்குட், பேஸ்புக் நண்பர்கள் மூலமாக கொஞ்சமாக பார்வையாளர்களை திரட்டுவோம்..  ஒரு நாளைக்கு 4 முதல் 5 ஹிட் வருவதற்கே அரும்பாடு பட வேண்டியிருக்கிறது.. எப்படித்தான் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை நமது வலை பளத்திற்கு வர வைப்பது என்பதனை நினைக்கும் போதே...., அட.., ஒழுக்கம பொழப்ப பார்ப்போம்.. என்று ஓரம் கட்ட பார்க்கின்றோம் தானே..?  வேண்டும் என்றால் நமது திருப்திக்காக மேலும் ஏதாவது ஒரு சில பதிவுகளை போட்டிருப்போம்.. பிறகு நாமே நமது பதிவினை மறந்து போய் சொந்த வேலையை பார்க்க மூட்டை முடிச்சை கட்டியிருப்போம். அப்படி இருக்கும் போது பிரபல பதிவர்கள் என்று பெருமையடித்து கொண்டு எப்படிப்பா இவங்க பொழப்ப ஓட்டுறாங்க என்று பல முறை மனதுக்குள் கேள்விகள் எழும் தானே..? ஆவர்களுக்கெல்லாம் இப்படி பதி போடுரது தான் முழு நேர வேலையா..? அப்படி அவர்கள் பதிவு போடுறதால யாருக்கு என்ன லாபம்..? ஏன் அவர்களுக்கே கூட என்ன லாபம் இருக்கிறது..?

( அதற்கு முன்னால் /// ; சண்டைக்கு வர வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கும், பொது நல பதிவர்களினை சமாளிக்கனுமே..!!? )


பதிவர்களில் ஒரு சில வகைகள் இருக்குங்க

  • இலக்கியம் / கவிதை பதிவுகள்
  • சினிமா / அரசியல் பதிவுகள்
  • கணிணி / தொழில்நுட்ப பதிவுகள்
  • நகைச்சுவை பதிவுகள்
  • பொது / படைப்புகள் தொடர்பான பதிவுகள்
  • வம்பு / மொக்கை பதிவுகள்
போன்ற பல வகைகளில் பதிவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர்.

     சரி இப்படி வித, விதமா பதிவுகளை எழுதுறாங்களே இவங்களோட நோக்கம் தான் என்ன..?

 எதுக்காக இவர்கள் தங்களுடைய நேரத்தினை இப்படி கழிக்கின்றனர்..?

மனிதனுக்கு பணம் அதிகமா கிடைச்சாலும் பிரச்சனை தான்,, கிடைக்காமயே இருந்தாலும் பிரச்சனை தான்.. எல்லோருமே எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை..


  •   கவிதை / இலக்கிய பதிவுகளினை பொதுவாக அத்தைய துரைகளின் ஆர்வம் இருப்பவர்கள் பதிகின்றனர். அவர்களின் எண்ணம் தமது ஆழ் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளினை தட்டி எழுப்பி அதை மற்றவர்களும் தெரிவித்து அவர்கள் தரும் ஆறுதல்கள் / பாராட்டுகள் மூலமாக தங்களின் மனதினை அமைதி கொள்ள செய்து விடுவார்கள்
  • சினிமா / அரசியல் பதிவர்கள் பெரும்பாலும் வேலை மெனக்கெட்டு தான் செய்யும் வேலைகளை மற்றவர்களிடம் பதியும் வேலையினை செய்ய இருப்பார்கள். இவர்களின் நோக்கமானது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயத்தினை தனது அறிவின்பால் எடுத்து கூறுவது அவர்களின் அறிவின் திறனை வெளிப்படுத்தவற்கான வடிகாளாக இருக்கும். ஒரு சிலர் வேண்டுமென்றே தனக்கு பிடித்த, பிடிக்காத கருத்துகளை பரப்புவதற்காக பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு சிலரே சரியான தகவல்களை பதிந்து "சபாஸ்." வாங்குகின்றனர்.
  • கணிணி / தொழில்நுட்ப பதிவர்களாவர், தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய அல்லது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்து அதனை மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கி அவர்களுக்கென்றே ஒரு புது உலகத்தும் புது மனிதர்களினையும் தன் பால் தக்கவைத்துகொண்டிருப்பார்கள். இவர்களின் நோக்கம்,, மாறாதா தேடலினை மற்றவர்க்கும் தெரிவிப்பதே ஆகும்.
  • நகைச்சுவை / வம்பு / மொக்கை பதிவுகள் அனைத்துமே தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கையே பெரும்பாலும் இருக்கின்றது.. இவர்களுக்கென்றே பாரட்ட ஒரு கூட்டமும், திட்டுவதர்கென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது.. இவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அழவைக்கவும் முடியும்,, அழகாக்கவும் முடியும்,, இவர்கள் யாவரும் தனிக்காட்டு ராஜாக்கள் ஆவர். ( ராணிகளும் இருக்கிறார்களப்பா..)
  • பொது / ஆக்கங்கள் தொடர்பான பதிவர்கள் தங்களது சிந்தனைகளினை  பகிர்கின்றனர். இவர்களின் கருத்துகள் சமூகத்தின் மேல் கோபமாகவோ அல்லது ஏக்கமாகவோ இருக்க கூடும். 

     இவ்வாறாக ஏதேனும் ஒரு கருத்தின் கீழாக பதிவர்களாக வலம் வரும் அனைவருமே தங்களின் பதிவுகள் மூலமாக ஏதேனும் வருமானம் வரக்கூடும் என்றிருந்தால் அதனினை புறக்கனிக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன். 
ஒரு சிலர் மட்டுமே தங்களின் கருத்துக்கள் மற்றவரையும் சென்றடைந்தால் போதுமென கருதுபவர்களாக இருக்கின்றனர்.

சரி, வலைப்பதிவுகள் மூலமாக கண்டிப்பாக வருமானம் ஈட்ட முடியுமா..?

நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

உங்களது உழைப்புக்கு ஏற்றவாறு குறுகிய அல்லது பெரிய அளவில் வருமானத்தை கண்டிப்பாக பெறலாம். 

எவ்வாறாக பணத்தை சம்பாதிப்பது என்பதனை விரிவான பக்கங்களாக தொடர்ந்து தரவே இனி வரும் பதிவுகள் காத்திருக்கின்றன.








( வலைப்பதிவில் தற்சமயம் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கும் பதிவர்கள் தங்களது கருத்துகளையோ அல்லது லிங்க்கையோ கமென்ட் மூலமாக தருவதன் மூலமாக உண்மையான முறையினை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க உதவியாக் இருக்கும் )

தொடர்ந்திருங்கள்...



Read more ...

பைக் பஞ்சர் ஆச்சுனா என்ன பன்னலாம்..?


         
   பொதுவா பார்த்திங்கனா இந்த டூ வீலர் அவசரமா எங்கயாவது போகும் போது தான் காலை வாரி விடும். அப்படி ஆளே இல்லாத இடத்தில உங்க பைக் பஞ்சர் ஆச்சுனா தள்ளிட்டு போகனுமே அப்படிங்கற கவலைய விடுங்க. இந்த பிரச்சனைய ஈசியா சமாளிக்க என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







நேற்று இரவு நான் வழக்கம் போல எனது வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன், வழியில்  தோழி பிரபா தனது அலுவலக பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அருகே சென்றதுமே எனை பார்த்து புன்னகைத்தார். 

   வாங்களேன் நான் டிராப் பன்னிடுறேன்னு அவரையும் அழைத்து கொண்டு எனது டூ வீலரில் கிலம்பினேன். 

என்னங்க ஆயுத பூஜை எல்லாம் எப்படி போச்சு..?

ம்ம்ம்... எங்க கம்பனியில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட்டோம். ஆன அதுக்கு முந்தைய நாள் மட்டும்.. அப்பப்பா...  கம்பனியை முழுசுமா சுத்தம் பன்றதுக்குள்ள பென்டு கழண்டுருச்சு..

அப்படியே பேசிக்கொண்டே சிறிது தூரம் சென்றிருப்போம்..

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........

எப்படியோ மானத்தை வாங்கரதுக்குனே காத்திருந்தா போலே வண்டி பஞ்சர் ஆகிவிட்டது..

ஒரு நமட்டு சிரிப்புடன். கிழே இறங்கிய பிரபா..  என்ன சார் நான் பாஸ்லயே போயிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்.

கவலை படாதிங்க.. பத்து நிமிசத்தில் பஞ்சர் பாத்திடலாம்ம்...

எப்படி..?

வேற எப்படி பாக்குறது..? எல்லாரையும் போல வண்டிய உருட்டிகிட்டே ஏதாவது ஒர்க்ஸ் ஸாப்க்கு போக வேண்டியதுதான்.

எங்க நேரம் ஆயுத பூஜையை ஒட்டி எந்த ஒர்க்ஸ் ஸாப் -ம் திறக்கல.. .

அப்ப தான் ஒரு முடிவிற்கு வந்தேன்..

*( ரொம்ப பில்டப் பன்னுற விஷயங்கள் எப்பவுமே மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சும் வந்து பார்க்குற உங்களோட தைரியம் ரொம்ம பிடிச்சிருக்கு.. இருந்தாலும்.. .. )


அப்ப தான் ஒரு முடிவுக்கு வந்தேன்..

இனி ஒர்க்ஸாப் எல்லம் எதுமே இருக்காது.. பேசாம, வண்டிய தள்ளிகிட்டே ஏதாவது பேசிட்டே போகலம் என்றேன்.,

பிரபாவும்.. ம் சரி வேற வழி..?

சொல்லுங்க உங்க பிஸினஸ் எப்படி போகுது..? நீங்க எதோ புது பிஸினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னீங்க..?

ஆமா//

எந்த மாதிரியான பிஸினஸ்..?

புதுசா இருக்கனும்,, நாம் தான் அந்த பிஸினஸை ஆரம்பிக்க வேனும்..

இது என்ன ஒன்னுமே புரியல..

அதாவது நான் ஆரம்பிக்க போற பிஸினஸ் பாத்திங்கன்ன நம்ம வழக்கமா பன்னுற பிஸினஸ் போல இருக்க கூடாது.. நம்ம மக்களுக்கு அது புதுசா இருக்கனும்..  நாம தான் அதை முதன் முதலா ஆரம்பிக்கனும்.

அதாவது நீங்கதான் அந்த தொழிலின் தந்தையா இருக்கனும் அப்படித்தானே..?

ம்ம்ம்ம். அப்படின்னு சொல்லலாம்.. ஆன பார்திங்கன பிரபா என்னைய பொருத்த வரை நாம பணம் சம்பாதிப்பதை காட்டியும் வருங்கால சந்ததியினர் நம்ம பேர சொல்லும் படி ஏதாவது ஒரு விசயத்தை செய்துவிட்டு போகனும்.

சரிதாங்க.. ஆன நாம ஒரு தொழிலையையோ அல்லது ஒரு சிந்தனையையோ கண்டுபிடிச்சு அதிலே வெற்றி பெருவதென்பது சாதாரண விசயமில்லையே..?

ஆமா.. ஆன, விடா முயற்சி இருந்தால் கண்டிப்ப நாம சாதிச்சு காட்ட முடியுமே..?

நீங்க ஒரு நல்ல தொழில்முனைவோரா இருந்தாலே நீங்க சாதித்ததாக அர்த்தப்படுமே..?

கண்டிப்பா.. அதைக் காட்டிலும் நான் ஒரு புது முயற்சியில் தொடங்கி வெற்றி பெருவதையே விரும்புகிறேன்..

   இப்ப நீங்க செய்யுற தொழில் வாய்ப்பானது உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். உங்கள் புகழையும் உயர்த்தும். ஆன, புதுசா ஒரு முயற்சியில் இறங்கும் போது அதில் வெற்றி பெற்றாலே தவிற புகழும், பொருளும் கிடைப்பதில்லை..? அப்படி பார்த்த இங்க புதுசா ஒரு விசயத்தை தோற்றுவிப்பதற்காக லட்சம் பேர் முயற்சி செய்யிறாங்க அதில ஒருத்தர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்.. நீங்க வெற்றி பெரும் ஒருத்தரை உந்துதலா எண்ணி உங்க வாழ்க்கையை பணயம் வைப்பது முட்டால் தனமான விசயம் தானே..?

இல்லைங்க பிரபா.. நீங்க சொல்வது முற்றியும் தவறு..
....மே பி..   நீங்க சொல்வது போல முயற்சி செய்யும் லட்சம் பேரில் ஒருத்தர் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.  ஆன அந்த ஒருத்தர் நாம தான் என்கின்ற தன்னம்பிக்கையை நீங்க முட்டால் தனம் என்பது மிகவும் தவறாகும்..

இப்ப,, நாம ஒவ்வொருவரும் காலைல வீட்டை விட்டு வரும் போது என்ன நினைச்சுட்டு வருகின்றோம்.? வேலைக்கு போய்விட்டு எப்படியாச்சும் சீக்கரமா வீட்டுக்கு வரனும், பாப்பாவ கொஞ்சனும்,  சமையல் செய்யனும் அப்படித்தானே.... அதில்லாம,, ஹாஸ்பிடலுக்கு அடிபட்டு போக போறோம்ன்னா  நினைக்கிறோம்..? ஏன்னா... தினம் தினம் நம சாலையில் போகும் போது யாரவது ஒருத்தர் விபத்தில் தன் உறுப்புகளையோ.. அல்லது உயிரையோ இழக்கின்றார்கள். அப்படின்னா.. அந்த ஒருத்தர் நாமாக கூட இருக்கலாம் அல்லவா..? ஏன் நாம அதைப் பற்றி கவலை படாமல் வீட்டை விட்டு கிலம்புகிறோம்..?

ஒரு விசயத்தை செய்யும் போது ஆயிரம் தடைகள் எப்படிப் பட்ட வழிகளிலும் வரலாம்..? அதை சமாளிக்கும் தைரியத்தை நாம் தான் வளர்க்க வேண்டும்.. அதை விட்டு விட்டு நாம் தோற்று விடுவோமே என்று பயப்பட ஆரம்பித்தால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் பயந்து கொண்டே இருக்க வேண்டியது தாங்க..

ம்ம்ம். நீங்க சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன வீணா எதுக்கு மெனக்கெடுவானேன்னு தான் அப்படி சொன்னேன்..

இல்லைங்க.. வீண் என்கின்ற வார்த்தையினை தவிற எதுவுமே இந்த உலகத்தில் வீண் இல்லைங்க..

    நீங்க நினைச்ச மாதிரியே எல்லோரும் நினைச்சிருந்தாங்கன்ன இந்த உலகத்தில் மாற்றமே எதுவும் வந்திருக்காது.. நமக்கு தெரிந்த மட்டுமே எடிசனும், கிரகாம்பெல்லும் மெனக்கெட்டு உழைக்க தவறி இருந்திருந்தால் உலகிற்கு முக்கியமான இரு விசயங்களான லைட்டும், தொலைப்பேசியும் வந்திருக்குமா..?
இன்னைக்கு உலகையே தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் கைப்பேசி இன்றைய உருவத்திற்காக எத்தனை பேரோட உழைப்பையும் நேரத்தையும் சுரண்டியிருக்கும்..?  இன்னைக்கு நாம செய்யுற ஒரு விசயத்துக்காக இன்னும் பல வருடங்களில் வர விருக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் பட்சத்தில் எப்படிங்க வீண் என்கின்ற வார்த்தை முலைக்கும்..?

பஞ்சர் கடை இன்னும் வரலைங்க.. 

( கடைய கண்டு பிடிக்கிற வரைக்கும் இப்படியே வண்டிய தள்ளிக்கிட்டு ஏதாவது பேசிக்கிட்டே போங்க..? பஞ்சர் பத்தி கவலையே பட வேண்டியதில்ல.. )
(சிங்கிளா போகும் போது பஞ்சர் ஆச்சுனா..?
.... அதுக்கும் கவலை வேண்டாம்.. இதை விட சூப்பர் ஐடியா அடுத்த பதிவில் வச்சிருக்கிறேன்ன்ன்ன்ன்ன் )








Read more ...