ஆக்சுளி, ''சோ'' வை எப்படி வெளியேத்தரதுனா...?

என்னதான் பிரச்சனைனே தெரியலீங்க., எவ்வளவோ முயற்சி செஞ்சாலும் இந்த '' '' ''சோ '' வை மறந்துடலாம்னு பார்த்த முடியவே மாட்டிங்குதுங்க.. இதனால என்னை எத்தனை பேர் கேலி செய்யறாங்க தெரியுங்களா..? எப்படிங்க இந்த பழக்கத்தை விடறது..?

       ஆக்சுளி என்ன பிரச்சனைன., ஓப்பான சொல்லிடறேங்க.. ( ஆன, இது கம்பனி சீக்ரெட் ''சோ'', யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்க... )

    நாம தினம் தினம் எவ்வளவோ மொக்கை போடுறோம்,, அதுல அடிக்கடி நாம பேசும் போது நமக்கே தெரியாம ஆக்சுளா நாம சில வார்த்தைகளை பேசுவோம். அதாங்க 'சோ', 'அதாவது', 'இப்ப பாத்திங்கன்ன', போன்ற வசனங்களை அடிக்கை உபயோகப்படுத்துவோம்.  இது சில சமயங்களில் ஏன் பல சமயங்கலில் எதிரில் கேட்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்..
பக்குவமான பேச்சாளர்கள் கூட தங்களுக்கென்றே சில பிரத்யேக வர்த்தகளால் மேடைகளில் அவசஸ்தை படுவதை நாம் பார்க்கிறோம் தானே.. ஆக்சுளா நான் என்ன சொல்ல வரேன்னா.., இப்படி நாமக்கே தெரியாம நாம சில வார்தைகளை அடிக்கடி உபயோகப் படுத்துவதை குறைப்பது அல்லது நிறுத்துவதற்கான தீர்வு என்ன...? அப்படிங்கறதுதாங்க..?

அட இது ஒரு விசயமாப்ப..?

    ஆமாங்க நாமெல்லாம் யாருங்க தொழில் முனைவோர்... அதாங்க பிசினெஸ் மேக்கனைட்டு.. நாம எப்போதாவதல்ல எப்பவவுமே மீட்டிங் போட்டே ஆகனுமுங்க..   ஆக்சுவளா..,  மார்க்கெட்டிங் வேலை பார்க்கரவங்கள கேட்டு பாருங்க மாச கடைசில அவங்க சீனியருங்க மீட்டிங்க போட்டு பன்னற அட்டூளியங்கள் இருக்கே.... ம்ம் அய்யய்யய்யோ... மார்க்கெட் ரேசியோவ உயர்த்த காய்ச்சி எடுத்துருவாங்க.. அப்படி, மீட்டிங்குங்கற பேருல மூனு மணி நேரம் தெனற தெனற பேசுவாங்க பாருங்க பேச்சு...

ஏன் நம்ம எம்.எல்.எம் பார்ட்டிங்க..? ( ஓசில டீ வாங்கி கொடுத்ததும் பின்னாடியே வந்தில்ல அனுபவி மவனேனு )  சும்மா பேசியே காதை புண் ஆக்கிடுவாங்க...

பேசுனவன் புழைச்சுப்பான். கேட்டவன் கதி..?

அவனும் பேசனும்ல...,

ஆமா,   ஆக்சுளி நான்இத பத்தி பேச வரலியே...

ம்ம்..

நாம பேசும் போது இடையில பேசர தேவை இல்லாத சொற்களை நிப்பாட்டறதற்க்கு என்ன வழி..?


 • அதுதான் தேவையில்லாத சொல் ஆச்சே அதைய ஏன் பேசனும்..? அப்படின்னு மனசுல பதிவு பன்னிக்கனும்
 • முதல்ல என்ன பேசப்போறோம் என்பதை தீர்மானித்து பேசறது நல்லது
 • ஆக்சுளா, நாம பேசும் போது ஒருதறம் அதை ரெக்கார்டு பன்னி வைச்சுட்டு திரும்ம அதை போட்டு கேட்டு பார்த்து எந்தெந்த இடத்தில நாம எந்த வார்த்தையை எதற்காக பேசறோம்னு பார்த்து அதை சரி பன்னிக்கலாம் (அப்பத்தானே கேக்குறவன் பாடு என்னன்னு புரியும் )
 • மனசுல கான்பிடென் வேனும் மச்சி.. ம்ம்ம் தன்னம்பிக்கையோட பேசுங்க எந்த இடத்திலேயும் மிஸ் ஆகாது
 • எதை பேசறோம்ங்கரத தெளிவா புரிஞ்சு பேசுங்க.. பொது மேடையோ அல்லது டீக்கடை பெஞ்ச்சோ வார்த்தைகளின் ஆழம் அதை வாசிப்பதை பொருத்தே புலனாக்கம் அடைகின்றது என்பதை புரிந்து செயல்படுங்கள்
 • அடிக்கடி நான் இப்பெல்லாம் 'அந்த'  வார்த்தையை பேசரதில்லையே அப்படின்னு உங்களுக்கு நீங்களே சொல்லி பழகிக்கங்க.. மனசுக்கு புரிய வைச்சாச்சுனா அப்பறம் கவலையை விட்டடலாம்..
 • எல்லாத்தையும் காட்டிலும் முதல்ல நிறையா மேடை பேச்சோ அல்லது மத்தவங்க பேசும் போதோ கூர்ந்து கவனிச்சு பழகுங்க. எப்பவுமே நாம எந்த விசயத்தையுமே கவனிச்சுட்டு வந்தோம்னா அதுல பிரச்சனை வராது
 • ஆக்சுளா நாம மத்தவங்க பேசும் போது காதுகளை கூர்மையாக வைத்து கவனிக்க ஆரம்பிச்சோம்னா அந்த பேச்சு நம்ம மனசுல பதியும்.' சோ' அடிக்கடி டீவி யோ அல்லது பொது மேடையோ நல்ல அறிஞர்களின் வார்த்தைகளை கேளுங்கள்  
 • உங்களுக்கு மிகவும் பிடிச்ச தலைப்பில் நீங்களே ஒரு பத்து நிமிடம் கண்ணாடி முன்னாடி நின்னு பேசி பாருங்க.. ( வரலாறு முக்கியம் அமைச்சரே )
ஆக்சுளா.......  எனக்கொரு பிரச்சனைங்க யாரவது வழி சொல்லுங்க....?
Read more ...

வர்த்தக தொடர்பாடல் ( BUSINESS COMMUNICATIONS )


 • வர்த்தக தொடர்பாடல் ( BUSINESS COMMUNICATIONS )
    பொதுவாக தொழில் முனைவோருக்கான அடிப்படை தொழில் கட்டமைப்பு குறித்தான தகவல்களில் Business Communications எனப்படும் வர்த்தக தொடர்பாடல் திறன் ஆனது மிகவும் இன்றியமையாத பண்பாக அமைகிறது. இது குறித்தான விளிப்புனர்வானது நம்மில் பலருக்கும் அலட்சிய போக்கான மனப்பாங்காகவே இருக்கிறது. MBA மற்றும் வணிகம் தொடர்பான படிப்பினை கொண்டோருக்கு Business Communications ஆனது ஒரு பாடமாகவே அமைக்க பெற்றுள்ளது. நாம் சந்தைப்படுத்தும் ( Market ) பொருளுக்கு உண்டான மதிப்பினை நுகர்வோர் மற்றும் சந்தையாளர்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான மூல வேர் ஆனது நீங்கள் எத்தகைய திறனை வர்த்தக தொடர்பாடலில் கொண்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே தான் (Business Communication) குறித்தான தேடலின் தகவல்களானது உங்கள் பார்வைக்கு பதியப்படுகிறது.


 • வர்த்தக தொடர்பாடல் (Business Communication) எனப்படுவன..,
தொழற்கூடம் அல்லது அலுவலக தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான வர்த்தக உரையாடல் அல்லது ஊடகத்தின் வழியாக தெளிவுபடுத்தும் முறைக்கே வர்த்த்க தொடர்பாடல் (Business Communication) என்று பெயர்.


ஒரு நிறுவனத்தில் தனிப்பட்ட கருத்துக்களையோ அல்லது குழுசேர் கருத்துக்களையோ திறன்பட முறைபடுத்தப்பட்ட ஊடக வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய செயல்பாடானது மட்டுமே நிர்வாக வளர்ச்சி மற்றும் வெற்றியை முழுமையாக தீர்மானிக்கிக்கிறது.

முறைபடுத்தப்பட்ட தகவல் தொடர்பியலானது சாதக பாதகங்களை தெரிவுபடுத்தப்பட்டு அதற்கான தொடர்பியல் ஊடகத்தினை தேர்வு செய்கிறது.

வர்த்தக தொடர்பிற்கான உறுப்புகளாவன.,

 • அனுப்புனர்
 • பெறுனர்
 • செய்தி
 • மற்றும் ஊடகப் பொருள்
இவற்றையே கொண்டுள்ளன..,
இதில் அனுப்புனர் மற்றும் பெறுனர்கள் தங்களுடைய தகவல் பரிமாற்றாங்களை தேவைபடும் செய்தியின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி தேவையான ஊடகமாக வாய்மொழியாகவோ, கடிதமாகவோ அல்லது தொலை தொடர்பு சாதனங்களான தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்கின்றனர்.

இங்கே உடகப் பொருள் என்பது செய்தியினை கொண்டு சேர்க்கும் கருவியாகும்

தகவல் தொடர்பியலானது ஒரு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு இடையிலேயோ அல்லது மற்ற ஒரு நிறுவனத்திற்கு இடையிலேயேவோ  இருக்கிறது.

ஒரு நேர்த்தியான வர்த்தக தொடர்பியலானது பின்வரும் காரணிகளை கொண்டு அமையப்பெற்றிருக்க வேண்டியது அவசியம். • தெளிவான நோக்கம்

எதற்கான தொடர்பியல் தேவைப்படுகிறது என்பதை முழுமையாக திட்டமிட வேண்டும். திட்டமிட்ட பின் (under writing)
Read more ...

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்..?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ..?
பாரினில் இனிமை வேறினியார்க்கோ..?

என்ற எம் பாட்டானின் தாகம் தீர்க்க முடியாமல் சிதறும் எம் இளம் தலைமுறையினை கண்டெழுந்த விளைவால் இந்த பதிவுவானது உங்கள் பார்வைக்கு இடப்படுகிறது...


வாணிபம் என்ற கொள்கையை கொண்டு, வந்தோரெல்லாம் ஆட்சி செய்திடவா எமது வந்தே மாதரம் பிறந்தது..?

கட்சிக்கொடிகளையும், சாதிக்கொடிகளையும் கையில் ஏந்திடும் வல்லமைகொண்ட எமது சகோக்கள் ஏன் தம் திறன் குறித்த சந்தேகம் கொள்கின்றனர்.?

வழி நடத்த ஆள் இல்லையே.., எம் வழியில் நடக்க ஆள் இல்லையே..,

எபோதும் இந்த இரு குறைகளையும் வார்த்தைகளாக்கியே வாழ்ந்து பழகி கழித்திடும் நாட்களில் ஏன் வரும் காலம் நிறம் மாற வண்ணம் பூச மறுத்தொதிங்கி போகின்றோம்..?

எபோதும் ஜப்பானையும்,, சைனாவையும் உதாரணங்களாக்கி பார்க்கிறோமே என்றெம்மை உதாரணமாக்க போகின்றோம்..?படித்ததெல்லாம் பணம் பன்னுவதெற்கென்றால்..., இங்கு படிபோரெல்லாம் பணம் கொண்டவரா..?

பல்லமும் மேடும் சாலைக்கிருக்கட்டும், நாம் வாழ சாதிக்கு எதற்கு..?

தீக்கனலும் தம் தலை நிமிர்ந்திடவே ஆசைகொள்ளும்.. திடம் கொண்ட எம் இளைஞர்..?

தஞ்சையையும் , மதுரையையும் காலத்தால் வரலாறுகளாக்க முடியும்.. வாழ்ந்த மனிதர்களின் சுவடிற்கு நாம் தானே உற்தி சேர்க்க வேன்டும்..?


தமிழோ ஆங்கிலமோ தமிழாங்கிலமோ எதேனும் கற்றுக்கொள்.. இறுதியில் இறப்பது நீயாயினும் இருப்பது உன் உறவல்லவா..?
கற்பதை தானே கற்பிக்க முடியும்..?


தொலைக்காட்சிகளில் கழியும் விழாக்கால நிமிடங்களை என்றெண்ணி பார்க்கப்பபோகிறோம்..?

குழந்தையாய், குழந்தைகளுக்காய்,, என வேறுபட்ட கால சூழ்நிலைகளை சந்திக்கப்போவதென்னவோ உண்மைதான்.. இருக்கின்ற காலம் தனையும் செலவிட வேண்டா.., இருபதில் ஏதும் செலவிடலாமே...? எண்ணத்தை, கொண்ட தின்னத்தை,,, ஏதேனையும்...

ஆசைகளை அழிக்க முடியவில்லை குறைக்க கூடவா முடியவில்லை..?

இலச்சங்களில் கனவு,,  சேர முடியாவிட்டால் சோர்வு..

லஞ்சமும் வஞ்சமும் கண்களாகவும்..
சோம்பலும் ஆசையும் காதுகளாகவும்..,
பொய்மையை வாய் மொழியாகவும் கொண்ட காந்தி சொன்ன குரங்குகளாய் நாட்டினை பாவித்திருக்கிறோம்.


தேவை,,,,  சுதந்திர விழா அல்ல போராட்டமே...


விளித்தெழு இளைஞனே நாளைய சுதந்திர தினமாகட்டும் உண்மையானதாக இருக்கட்டும்


( ..............இன்னைக்கு மட்டுமாவது )


Read more ...

டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 3

                            வலை பதிவுகளின் வாயிலாகா டேலி பற்றின கருத்துக்களை தமிழ் மொழியில் தேடி கழித்த பின் சிறு துளி தாகம் தீர்க்கவே இந்த முயற்சி..

வனிகம், வலை பதிவு செய்யும் நண்பர்கள் தவறாமல் தகவல்களை உள்ளிட பின்னூட்டம் மூலமாக உதவுங்கள்..

டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 3

உண்மைய சொல்லனும்னா இதுதாங்க முதல் பகுதிங்க..
எபடியோ ரெண்டு பதிவுகளில் உங்களை வரவெச்சுட்டேன்.,,

டேலியோட எஸ்டிடி எல்லாம் நமக்கெதுக்குன்னு முந்தைய பதிவுகளில் திட்டி இருந்த நல்ல உள்ளங்களுக்கு மதிப்பு கொடுத்து இந்த பதிவுலயாவது கொஞ்சம் உள்ளே கை பிடித்து அழைத்து செல்ல முயல்கிறேன்...

 எப்படியோ டேலிய நம்ம கம்யூட்டர்ல இன்ஸ்டால் செஞ்சுட்டோம்ல.. இனி வேலைய பார்போம்...


 • டேலி 9 ( Tally ERP 9 )


டேலி பதிப்பை விண்டேஸ் ஸ்டார்ட் மெனு வழியாக ஓபன் செய்து கொள்ளுங்கள்.

Start ----> Programs ----> Tally ERP 9


டேலி முகப்பு பக்கம் தோன்றும் இதனை கேட் வே ஆப் டேலி (Gateway of Tally ) என்பர்.

http://www.PaisaLive.com/register.asp?3951109-5534411

கேட் வே ஆப் டேலியானது (Gateway of Tally ) பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் வலது மர்றும் இடதுபுறமாக பிரிக்கப்பட்டிருக்கின்ற இரு பகுதிகளில் தான் நமக்கு விருப்ப உள்ளீடுகளை செய்யபோகிறோம்..

கேட் வே ஆப் டேலியின் (Gateway of Tally )  இடதுபுறம் உள்ள பகுதியில் நமது கம்பெனியின் தொடக்க விவரங்களை பார்வையிடுகிறோம்.. முதலில் நமது கம்பெனியின் தொடக்க விவரங்களை உள்ளிட வேண்டுமல்லவா..? அதற்கு தான் கேட் வே ஆப் டேலியின் (Gateway of Tally ) வலது புறமாக உள்ள கம்பெனி (Company Info. ) இன்போ மெனுவை பயன் படுத்தப்போகிறோம் ..


படத்தின் மீது கிளிக் செய்து அளவை பெரிதாக்கி பார்த்து கொள்ளுங்கள்    கம்பெனி இன்போ மெனுவில் (Company Info. ) உள்ள கிரியேட் கம்பெனியை கிளிக் செய்வதின் மூலமாக கம்பெனி கிரியேசன் (Company Creation )உள்ளீடு பட்டையை பெறலாம். இதில் உங்களுடைய கம்பெனியின் விவரங்களை கொடுத்துக்கொள்ளுங்கள்.


படத்தின் மீது கிளிக் செய்து அளவை பெரிதாக்கி பார்த்து கொள்ளுங்கள்

    ( Company Creation ) கம்பெனி கிரியேசன் பட்டையில் பட்டையில் கெட்கபடும் தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக என்டர் கீயை உபயோபடுத்தி கொடுங்கள் இறுதியாக என்டர் கீயை சொடுக்கும் போது எளும் குட்டி பெட்டியில் எஸ் - ஐ சொடுக்கி உங்களுடைய கம்பெனனி கிரியேசன் வேலையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.

    இபோது உங்களுடைய கேட் வே ஆப் டேலி பக்கமானது இடது புற பட்டையில் உங்கள் கம்பெனி பற்றின விவரங்களை தெரிவித்து உன்களை கம்பீரப்படுத்துமே...?

     ம்ம்ம்.. எப்படியோ கிரியேட் பன்னிட்டோம்.., அது சரிங்க ஏதவது விபரங்களை மிஸ் பன்னிருந்தா ..? அல்லது தவறாக கொடுத்துவிட்டிருந்தால் அதனை சரிபடுத்த வேண்டுமல்லவா..? அதற்காக.,,


    உங்களது கீபோர்டில் உள்ள F3 கீயை அழுத்துங்கள் (அல்லது) கேட் வே ஆப் டேலியின் வலது மூலையில் உள்ள கம்பெனி இன்போ என்பதை சொடுக்கி வரும் மெனுவில் உள்ள ஆல்டர் என்பதை சொடுக்கி தங்களது கம்பெனி கிரியேசன் பட்டையில் தேவையான தவல்களை உள்ளிடவோ அல்லது மாற்றமோ செய்துகொள்ளுங்கள்..


    குறிப்பு : 
 • கம்பெனி கிரியேசன் பட்டையில் தேவை என்றால் பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளலாம்.. 
 • " ESC  கீ " உபயோகப் படுத்தி முன்தைய மெனுவிற்கு செல்லலாம்


    கம்பெனி இன்போ வில் அமைந்துள்ள மெனுக்களின் பயன் குறித்த விபரங்களை தெரிவுபடுத்திக்கொள்ளுங்கள்..

 • Select Company

Allows you to Select or load a company.
 • Connect Company

Allows you to Connect Company on Tally.NET
 • Disconnect Company

Allows you to Disconnect Company from Tally.NET
 • Shut Company

Allows you to shut a company.
 • Create Company

Allows you to create a Company.
 • Alter

Allows you to alter a company.
 • Security Control

Allows you to create Security Levels and users & passwords.
 • Change TallyVault

Allows you to secure the data by providing a TallyVault password.
 • Split Company Data

Allows you to split company data across multiple period
 • Backup

Allows you to take a backup of the company data.
 • Restore

Allows you to restore a data backup.


    டேலி பற்றின சந்தேகம் இருந்தா தயங்காம கேளுங்க.., யாருகிட்டயாவது கேட்டு பதில் சொல்லுறேன்..

    அடுத்த பதிவை படிக்கும் முன் உங்களது கம்பெனியின் கணக்கு பதிவியளுக்கான விவரங்களை முன்னறே மனதினில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..

வெற்றிகரமான வியாபார காந்தங்களே...!

      தொழிலில் நேர்மை வேனும்... கல்லாவுல காசு சேர்க்கும் போது கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்கனும்னு.. அண்ணன் மமுட்டி சொன்னதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கங்க... நாம ஒவ்வொரும் செய்யும் சிறிய தவறு தான் இன்னைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் நமது இந்தியாவின் மதிப்பை இழக்க வைக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்..

http://www.PaisaLive.com/register.asp?3951109-5534411

     மொதல்ல தனி மனிதனாக நம்மைத் திருத்திக்கொண்டு பிறகு மற்றவரை குறை கூறுவோம்..

இந்த இனிய பொன் சுதந்திர வாரத்தில் விடியளை எதிர்நோக்கி காத்திருக்கும்
உங்கள் அன்பன்....

Read more ...

சக்க போடு போடு ராஜா.. உன் காட்டுள மழை பெய்யுது..

" பெருசா யோசிச்சா தான் சாதிக்க முடியும் " நீ கண்டிபா சாதிப்பே.. பெருசா யோசி பீமா... சுட்டி டிவி ஜக்கி சான் பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போ ஜூலி பீமா கிட்டே இததான் சொன்னா.. உடனே கிளிக் ஆச்சு நாமும் டிரை பன்னித் தான் பார்ப்போமே.. அப்டினு தான் கொஞ்ம் நடைய மாத்தலாம்னு இந்த பதிவு...


  தொழில் எதுவாயினும் செய்யும் தனிதன்மை தானே வெற்றியை தீர்மானிக்கிறது..?

ம்ம்.. சரிங்க.,,,,

        என்னக்கா வூட்டுல இவ்லோ பெரிய கூட்டம்..?

   எங்கூட்டுக்காரரோட தம்பி பையன் அருணு எவனோ கூறு கெட்டவன கூட்டிட்டு வந்து சோப்பு விக்கெரேன் சீப்பு விக்குரெனுட்டு அக்கப்போரு பன்னிட்டிருக்கன்டி.. நானே விபரம் தெரியாமத் தான் பார்த்திட்டு இருக்கேன்ற இவ வேற...

( மொத்தமாக ஆறு பிளாஸ்டிக் சேரு. அதுல ஐந்துபேரு.. அப்படியே திண்ணையில வெத்தலைய கொத்துனபடி ரெண்டு பெருசுங்க சகிதமா இருக்குற இந்த சுச்சுவேசன் சூலூரை தாண்டி ஒரு பாப்பம்பட்டி கிராமமும்னு வைச்சுக்குவேமே..)    ஏம்ப்பா அருணு எங்க பெரிப்பா ஊர்ல நிறையா பேர தெரியும்னு டெமோ காட்டரதுக்கு என்னைய கூட்டிடு வந்தே பச்ச தண்ணியாவது கண்ணுல காட்டுப்பா. (...இவருதாங்க மாசம் அறுபதாயிரதுக்குமேல சம்பாதிக்குற சீனியர்  MLM பிஸினஸ் மேனுங்க.. பேரு சத்ய மூர்த்தி )


    பொருங்க சார்.. முதல்ல நீங்க புராடெக்ட்ட பத்தி எதையாவது ஒலரி எனக்கு கீழ எவனையாது ஜாய்ன் பன்னி விடுங்க அப்பரம போகும் போது கவனிக்கறேன்..

அடப்போபா.. நானும் நாலு மணி நேரமா கட்டம் எல்லாம் போட்டு காட்டுரேன் இருக்கிற நாலு பேரும் அவங்க அவங்க ஜோலிய தானே பாக்குராங்க..

   அதெல்லாம் எனக்கு தெரியாது என்னை சேர சொல்லும் போது என்ன சொன்னிங்க நீ சேர்ந்தா மட்டும் போதும் உனக்கு கீழ ஆட்களை நானே போட்டுக்கரேன்னிங்க இப்ப என்னடான்னா எனையவஏ புடிக்க சொல்லுரிங்க.., அப்பவே இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னேன்.. கேக்கல.., அனுபவிங்க.., இல்லைன நான் கட்டுன காசயாது திருபி கொடுங்க..

அட நீ வேற..,

ஏங்க எல்லோரும் இங்க கவனிங்க..,

அம்மா சலவைக்கு போட்டதெல்ல கொண்டாந்திருக்கேன்.. ( இது டோபி கோபி )

வாடா வாடா.. காலைலயே தரேன்னியேடா.. ஏ லேட்டு....

என்னம்மா பன்றது., பொன்டட்டிக்கு உடம்பு சரில்ல அதானுங்க...   இதென்னங்மா யாரு அந்த வாத்தியாரு வட்டா வட்டமா போட்டு காட்டிட்டு இருக்காரு..

அவரு சோப்பு விக்கரவன்டா கோபி...

அம்மா எனக்கு சலவை பன்றதுக்கு கிடைக்குமாம்மா..?

அவன்கிட்டயே கேளு..

சாரே... இந்தா சாரே... எனுங்கோ வாத்தியாரே...

வாத்தியாரா ..?  சொல்லுங்க...,

எனக்கு சோப்பு வேனுமுங்க... நீங்க விக்கரிங்கலாமா எனுங்க வாத்தியாரு தொழில்ல வருமானம் போதலிங்களா..?

உங்க பேரு என்னங்க..

கோபிங்க சாமி..

மிஸ்டர் கோபி.., நீங்க தப்பா நினைச்சுட்டிருக்கீங்க.. நாங்க தொழில் வாய்பு மூலமா லட்சக்கணகுல பணம் சம்பாதிக்க வாய்பை ஏற்படுத்த வந்திருக்கோ.. இது வெறும் சோபு விக்கிற கம்பெனி அல்ல.. ஏன் நீங்க கூட மாசம் லட்சத்துக்கும் மேல சம்பாதிக்களாம்..,

அட டே இன்சூரன்சு கம்பனியா..? பொலப்பு கெட்டவங்கய்ய .. எம் பொலப்ப வெற கெடுக்கப்பாக்குறீங்களா..?

நோ.. நோ.. நாங்க அன்றாட யூஸ் பன்னுற பொருட்கள் மூலமா வருமானம் வர வெபோம்... உங்க செலவையே வருமானமா ஆக்கிடுவோம்..

ஆமா கிளிச்சிங்க... ஏன்ய உங்களுக்கு வேற வேலையே கிடைக்கிலயா..
ஏன்சாமி எம் பொலப்புல மண்ணல்லி போட பாக்குரிங்க.. இருக்குரத விட்டுட்டு பறக்கறதய புடிக்குறதூ.. ஆள விடுங்க...

இல்லை கோபி...

அட போங்க சாமி.. என் கழுதைய விட மோசம நானு வேலை பாக்குறேன் சல்லி காசு கூட பாக்க முடியல.. லச்சமாம் கோடியாம்...

நான் கூட பேங்க்ல பத்தாயிரம் சம்பளத்தில இருந்தேன். இப்ப பாருங்க மாசம் அறுபதாயிரதுக்கு மேல சம்பாதிக்கிறேன்..

அட நிஜமாங்களா...?

............

............
............
............
............


கண்டிபா எல்லாமே சாத்தியம் தாங்க.. என் பெரு கோபி நான் கூட ரென்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சலவை தொழி தாங்க செஞ்சிட்டு இருந்தேன்...

இப்ப......( காலம் மாறலாம், கொண்ட காட்சிகள் மாறுமா..?)
Read more ...

டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 2

அக்கவுண்டிங் சாப்ட்வேர்களில் டேலியின் பங்கானது எத்தகையது என்பதை இனி வரும் பகுதிகளில் முழுமையாக தெரிந்துகொள்வோம். அதற்கு முன் டேலி (TALLY) கத்துக்கலாமா என்றதுமே ஆவலுடன் தளத்திற்கு வந்து பொக்கிசமாக பின்னூட்டமும் அளித்து என்னை உற்சாகப் படுத்திய உள்ளங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பகுதியில் எனக்கு தெரிந்த வரையில் முழுமையாக விவரிக்கிறேன்.. தவறான கருத்துக்களாக இருப்பின் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக கருத்துக்களை பறிமாறிக்கொள்வதின் மூலமாக சிறந்த இடுக்கையினை நாம் தர முடியும்.. சரி சார் விசயத்துக்கு போவோம்..

ஆரம்ப கட்ட டேலி சாப்ட்வேர் பற்றின எண்ணமானது, மிகுந்த கீ போர்டு பங்சனாகவே இருந்த காரணத்தினால் டேலி கத்துக்கொள்ளும் ஆர்வமானது ஆடிட்டிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் தொடர்பான பணி வாய்ப்பில் இருப்போரும் பணி தேடுவோருமே டேலி கற்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். பிறகு டேலியானது தனது அசூர வளர்சியில் சாதரணமானவர்களும் ஒரு கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதற்கு ஒப்பாக டேலி கற்றுக்கொள்ளும் படி டேலி (TALLY) தனது ஆளுமையை காட்டத்தொடங்கி விட்டது..
டேலி (TALLY) சாப்ட்வேரின் சிறப்பம்சங்கள் :-


 • டேலி கையாளுவதற்கு எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது
 • அக்கவுண்டு ஸ்டேட்மென்ட் பிரிண்ட் செய்வது சுலபம்
 • ஈ மெயில் மூலம் பறிமாற்றம் செய்யமுடியும்
 • டிரையல் பாலன்ஸ் மற்றும் பிராபிட் & லாஸ் 
 • பில்லில் கம்பெனி லோகோ மற்றும் விபரங்களை பதிவு செய்யலம்
 • TAX தொடர்பான திட்ட அறிக்கைகளை எளிய முறையில் பதிதல் முதலான பல கூறுகளை உள்ளடக்கி செயல்படுகிறது..
டேலி பதிப்புகள் விபரம் (TALLY VERSIONS) 

 • டேலி 4.5  ( TALLY 4.5 )
அக்கவுண்ட்ஸ் தொடர்பான பதிபுகள் மட்டுமே இதில் இட முடியும். மேலும் 4.5 ஆனது டாஸ் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியதால் கீபோர்டு கட்டளைகளை உள்ளடக்கியதாக இருந்தது..

 • டேலி 5.4 ( TALLY 5.4 )
4.5 ன் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவமே 5.4 ஆகும். இது graphic interface version ஆக அமைக்கபட்டதுடிதன் மூலம் தனது சாம்ராஜ்ஜியத்தை பரப்ப தொடங்கியது.

 • டேலி 6.3 ( TALLY 6.3 ) 

அடுத்த பதிபான 6.3 முற்றிலும் விண்டோஸ் ஆபரேட்டிங்கை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. இதில் வேகமாக அச்சிட்டு பெறும் வகையிலாக அமையபெற்றது மேலும் VAT மெருகூட்டப்பட்டு வெளிவந்தது.


 • டேலி 7.2  ( TALLY 7.2 ) 

டேலி 7.2 கூடுதல் வசதிகளுடன் வேகமாக இயங்க்கும் வண்ணம் அமைக்கபெற்றது.


 • டேலி 8.1  ( TALLY 8.1 ) 

புதிய தரவுக் கட்டமைப்பை உள்ளடக்கியதாக டேலி 8.1 வெலிவந்ததி இது POS மற்றும் ( Payroll )  ஊதிய விபரபட்டியல் சேர்க்கப்பட்ல்டிருந்தது. இது போதுமான வரவேற்பை பெற முடியாததற்கான காரணம் தடையற்ற சேவையை தர இயலாமல் போனதே ஆகும். 


 • டேலி 9   ( TALLY 9 ) 

டேலி அரக்கன் தனது அனைத்து சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுக்குள் கொண்டு  தனது புதிய மற்றும் சிறப்பான பதிப்பாக டேலி 9 (  al so Tally ERP ) வெளிவந்தது. தனது அனைத்து பதிபுகளையும் இதன் மூலமாக நிறைவடையச் செய்தது.. விற்பனையாளர்கள், சம்பளபட்டியல், FBT, TDS, e-TDS  தாக்கல் வசதிகள் மற்றும் என்னிலடங்கா பல வசிதிகளை தனக்குள் உள்ளடக்கியிருந்தது. இது போதுமான ஆதரவை பெற்று மேலும் மெருகூட்டப்பட்டு Tally ERP ஆக வரவேற்க்கப்படுகிறது....


டேலி சாப்ட்வேர் : 1. சிங்கில் யூசர் ( Single User )
 2. மல்ட்டி யூசர் ( Multi user )
குறு தொழில் மற்றும் சிறிய அளவிலான வியாபார பரிமாற்றங்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் சிங்கில் யூசர் பேக்கையும் பெரிய மற்றும் அதிகப்படியான கணக்கு பதிவியலில் ஈடுபடுவோரும் மல்ட்டி யூசர் பேக்கையும் உபயோகப்படுத்துகின்றனர்.


டேலி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் முறை :

தேவையான வகையிலான டேலி சாப்ட்வேரை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவும். ( எப்படியும் நாம டிரையல் வெர்சனை தானே இன்ஸ்டால் பன்ன போறோம்ன்றவங்களுக்கு பிரச்சனை இல்லை மத்தவங்க http://www.tallysolutions.com என்ற தளத்திற்கு சென்று வாங்கிக்கொள்ளவும். ) 


Installing Tally
சிடி டிரைவ் அல்லது போல்டரை ஓபன் செய்து
 1. கிளிக் INSTALL.EXE from the CD

அல்லது
 1. Click START from Windows
 2. Select RUN
 3. TYPE <CD drive>:\INSTALL
 4. Press ENTER
இபோது Tally 9 Setup Wizard is தெரியும்

கீழ்கன்டவாரு செயல்படவும்1. Click Next to continue

2. The Installation wizard displays the License Agreement3. Read the license agreement before you proceed. Click I Agree to continue. Click I Decline to stop the set-up or click Back to go to the previous screen4. In the Installation screen, you may accept the suggested directories. Else, click Change Application Directory or Change Data Directory or Change Configuration Directory orChange Language Directory to change the respective directory paths. Use Tab or the mouse to change the path in any of the directories
Quote:
Application Directory

The Tally program files reside in this directory.


Data Directory

The Tally data resides in this directory.

The default directory where data is stored is C:\Tally\Data. To change click on Change Data Directory button and enter the new directory.

When Tally is installed in a directory with an earlier version, it detects and retains the data configuration path of the previous installation.


Configuration Directory

Tally configuration files reside in this directory.

You can specify the path of the directory where the configuration files should be saved. It is usually the same path as the Application Directory.


Language Directory

Tally Language files (.dct) reside in this directory.

You can specify the path of the directory where the Language files will be maintained. It is usually the same path as that of the Application Directory.

---------------------------------------------------------------------------------------------------------------------------

Note: If you are a Multi-License User, select the Run Tally License Server at Windows Startup check box
5. Click Install Operating System Language Support to enable Language Support

6. Select your Country name in Country Selection

7. Select the Initial Startup Language from the list. When you start Tally for the first time, Tally will appear in the language selected as the Initial Startup Language8. Click Install

The installation progress status is displayed as shown below.9. Insert Windows CD to install language or Browse for the i386 folder in your system
Quote:
Note: You will be prompted to install the i386 language support folder only if it is not available in your system
10. Click OK to install Language Support

11. Click Finish to complete Setup

அவ்வளவு தாங்க இப்ப நீங்கள் உங்களது கணிணியில் டேலி மென் பொருளை முழுமையாக இயக்க முடியும்எபடியோ இன்ஸ்டால் பன்னிட்டோம்ல...  அப்டின்னு காலர தூக்கி விட்டுட்டுக்கோங்க.. அப்படியே கம்யூட்டரை சட் டவுன் பன்னிட்டு சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.... ம்ம்ம்ம்
Read more ...

டேலி (TALLY) கத்துக்கலாமா..?

  ஒவ்வொரு தொழில் முனைவேருக்குமான முக்கிய தகுதிகளில் அக்கவுண்ட்ஸ் கீப்பிங் எனப்படும் கணக்கு பதிவியலின் சிறப்பம்சங்களை ஒரளவேனும் தெரிந்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

    பொதுவாக பெரிய நிறுவனங்கள் தனது கணக்கு பரிவர்த்தனைகளை தனி டிபார்ட்மென்ட் கொண்டு செம்மையாக செய்துவிடுகின்றன.. ஆனால் சிறு தொழில் நடத்தும் வியாபர நண்பர்கள் சில சமயங்களில் தனது வியாபார பரிவர்த்தனைகளை சரியாக நிர்வகிக்காத காரணங்களாலேயே தனது வெற்றி வாய்பினை தவறவிடுக்கின்றனர். அத்தகைய சூழ்நிலைகளில் அடிப்படை கணிணி அறிவு கொண்டிருந்தாலே டேலி ( Tally) எனப்படும் அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேர் துணைகொண்டு தனது வியாபர பரிவர்த்தனைகளை தாங்களே மிகவும் எளிய முறையில் கையாளலாம். எனவேதான் அக்கவுண்ட்ஸ் கீப்பிங் பற்றிய முழுமையான தகவல்களுக்காக இந்த பதிவிடப்படுகிறது., பொதுவாக எனக்கும் அக்கவுண்ட்ஸ்க்கும் துளியும் ஒத்துபோகாது.. இருப்பினும் உங்களுக்காக நானும் பழகப்போறேன்.. என்ன பழகலாமா....?


 • டேலி  (TALLY )
டேலியானது வியாபர பரிவர்த்தனைகளை முழுமையாக கையடக்கக்கூடிய குறு / பெறு வணிக நிறுவனங்களுக்கான கணிணி வழி கணக்கு பதிவியலின் பயன்பாட்டு சேவையே ஆகும்.  (அதாங்க இது ஒரு அக்கவுண்டிங் சாப்ட்வேர்.) டேலி மென்பொருளை வடிவமைத்தவர்கள் இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனமாகும். கிட்டத்தட்ட 94 நாடுகளில் டேலி மென்பொருளானது உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமே நாம் டேலி பற்றின பெருமைகளை நன்குணரமுடிகிறது. பொதுவாக இதன் எளிமையான உருவாக்க முறையினாலேயே பெரும்பாலன ஆதரவை டேலி பெற்றுள்ளது. ஆரம்பகட்டத்தில் டேலி மென்பொருளானது கீபோர்டு மட்டுமே உபயோகப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அதன் அசூர வளர்ச்சியின் காரணாமாக பல பல புது முன்னேற்றங்களை கண்டு இபோது தனது புது பாரிமானத்தில் மிளிர்கிறது.. 

   சரி டேலி பழகும் முன் அக்கவுண்ட்ஸ் பத்தி முதல்ல கொஞ்சம் தெரிஞ்சுக்களாமா..?

கணக்கு பதிவியல் (Accounting) :
     பொருளை வாங்குதல், விற்றல் மற்றும் நிதி நிலை தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரு வித பக்குப்பாய்விற்குட்படுத்தப்பட்ட முழுமையான தீர்வுக்கு கணக்கு பதிவியல் என்று பெயர் (....க்கும் தெரியாக்கும்)
சரி, அத்தகைய கணக்கு பதிவியல் தொடர்பான நமக்கு தேவையான சிறிய ரூல்ஸ் என்ன தெரியுமா..?

 • Debit ............. > the Reciver
 • Credit .............>  the Giver


டெபிட்டார் (Debtor) எனப்படுபவர் பெறுபவராகவும், கிரடிட்டார் (Creditor) எனப்படுபவர் கொடுப்பராகவும் கருதபடுகிறார்.

முதலில் முழுமையான கணக்கு பரிவர்த்தனைகளை தொடங்கும் முன் ஜர்னல் என்ட்ரி எனப்படும் தொடக்க குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.. இன்னாருக்கு இன்னா பொருளை வித்தேன் வாங்குனேன்.. இதெல்லாம் தாங்க..

பிறகு.,

லெட்ஜர் கிரியேட்டிங்
வவுச்சர் கிரியேட்டிங்
பாலன்ஸ் சீட்
பிராபிட் & லாஷ் எல்லாம் பர்த்துக்கலாம்..கணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்


 • a/c - account - கணக்கு
 • B/S - Balance Sheet - ஐந்தொகை
 • b/d - brought down - கீழ் கொண்டு வரப்பட்டது(மீதி)
 • c/f - carried forward - முன் கொண்டு செல்லப்பட்டது(மீதி)
 • Dr - debit - பற்று
 • Cr - credit - செலவு
 • G/L - General Ledger - பொது பேரேடு
 • P&L - Profit & Loss வருமான செலவீன கணக்கு
 • TB - Trial Balance - பரீட்சை மீதி


சரிங்க தூங்க போய்டாதிங்க பொறுமையா ஒவ்வொரு பதிவிலும் தெரிஞ்ச வரைக்கும் சொல்லரேன். தெரிஞ்சத சொல்லுங்க...
Read more ...