வலை போட்டு பணம் பிடிக்கலாம்..

    வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை கொண்டே வலைப்பதிவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை உணரமுடிகிறது. எதற்காக இவர்கள் வேலை மெனக்கெட்டு எழுத வேண்டி இருக்கிறது..? என்று பல வித சிந்தனைகள் இருந்தாலும் கூட, சுவாரசியம் கொஞ்சும் வார்த்தைகளின் மூலமாக நம்மை கட்டி இழுக்கும் வல்லமை கொண்ட பதிவர்கள் பலர் இருக்கின்றனர் என்பதே உண்மை. 
   
  ஆரம்பத்தில் வலைப் பதிவின்பால் ஆர்வம் கொண்டு ஏதேனும் கிறுக்க தொடங்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது எழுத்தின் தரத்தினை கூட்டி நாங்களும் நல்ல பதிவர்கள் தான் என்பதை பலரும் நிருபித்து காட்டி வருகின்றனர். வலைப் பதிவுகளின் தலைப்புகளை வைத்தே பதிவர்களின் எண்ணத்தையும் தரத்தினையும் அறிய முடிகிறதல்லவா..?


    வலைப்பதிவை தொடங்கிய உடன் முதன் முதலாக ஒரு பதிவை போட்டிருப்போம்.. அதற்கு பார்வையாளர்கள் வர வைக்க என்ன செய்வோம்..? நமக்கு பொதுவாக தெரிந்த மட்டும் ஆர்க்குட், பேஸ்புக் நண்பர்கள் மூலமாக கொஞ்சமாக பார்வையாளர்களை திரட்டுவோம்..  ஒரு நாளைக்கு 4 முதல் 5 ஹிட் வருவதற்கே அரும்பாடு பட வேண்டியிருக்கிறது.. எப்படித்தான் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை நமது வலை பளத்திற்கு வர வைப்பது என்பதனை நினைக்கும் போதே...., அட.., ஒழுக்கம பொழப்ப பார்ப்போம்.. என்று ஓரம் கட்ட பார்க்கின்றோம் தானே..?  வேண்டும் என்றால் நமது திருப்திக்காக மேலும் ஏதாவது ஒரு சில பதிவுகளை போட்டிருப்போம்.. பிறகு நாமே நமது பதிவினை மறந்து போய் சொந்த வேலையை பார்க்க மூட்டை முடிச்சை கட்டியிருப்போம். அப்படி இருக்கும் போது பிரபல பதிவர்கள் என்று பெருமையடித்து கொண்டு எப்படிப்பா இவங்க பொழப்ப ஓட்டுறாங்க என்று பல முறை மனதுக்குள் கேள்விகள் எழும் தானே..? ஆவர்களுக்கெல்லாம் இப்படி பதி போடுரது தான் முழு நேர வேலையா..? அப்படி அவர்கள் பதிவு போடுறதால யாருக்கு என்ன லாபம்..? ஏன் அவர்களுக்கே கூட என்ன லாபம் இருக்கிறது..?

( அதற்கு முன்னால் /// ; சண்டைக்கு வர வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கும், பொது நல பதிவர்களினை சமாளிக்கனுமே..!!? )


பதிவர்களில் ஒரு சில வகைகள் இருக்குங்க

 • இலக்கியம் / கவிதை பதிவுகள்
 • சினிமா / அரசியல் பதிவுகள்
 • கணிணி / தொழில்நுட்ப பதிவுகள்
 • நகைச்சுவை பதிவுகள்
 • பொது / படைப்புகள் தொடர்பான பதிவுகள்
 • வம்பு / மொக்கை பதிவுகள்
போன்ற பல வகைகளில் பதிவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர்.

     சரி இப்படி வித, விதமா பதிவுகளை எழுதுறாங்களே இவங்களோட நோக்கம் தான் என்ன..?

 எதுக்காக இவர்கள் தங்களுடைய நேரத்தினை இப்படி கழிக்கின்றனர்..?

மனிதனுக்கு பணம் அதிகமா கிடைச்சாலும் பிரச்சனை தான்,, கிடைக்காமயே இருந்தாலும் பிரச்சனை தான்.. எல்லோருமே எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை..


 •   கவிதை / இலக்கிய பதிவுகளினை பொதுவாக அத்தைய துரைகளின் ஆர்வம் இருப்பவர்கள் பதிகின்றனர். அவர்களின் எண்ணம் தமது ஆழ் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளினை தட்டி எழுப்பி அதை மற்றவர்களும் தெரிவித்து அவர்கள் தரும் ஆறுதல்கள் / பாராட்டுகள் மூலமாக தங்களின் மனதினை அமைதி கொள்ள செய்து விடுவார்கள்
 • சினிமா / அரசியல் பதிவர்கள் பெரும்பாலும் வேலை மெனக்கெட்டு தான் செய்யும் வேலைகளை மற்றவர்களிடம் பதியும் வேலையினை செய்ய இருப்பார்கள். இவர்களின் நோக்கமானது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயத்தினை தனது அறிவின்பால் எடுத்து கூறுவது அவர்களின் அறிவின் திறனை வெளிப்படுத்தவற்கான வடிகாளாக இருக்கும். ஒரு சிலர் வேண்டுமென்றே தனக்கு பிடித்த, பிடிக்காத கருத்துகளை பரப்புவதற்காக பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு சிலரே சரியான தகவல்களை பதிந்து "சபாஸ்." வாங்குகின்றனர்.
 • கணிணி / தொழில்நுட்ப பதிவர்களாவர், தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய அல்லது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்து அதனை மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கி அவர்களுக்கென்றே ஒரு புது உலகத்தும் புது மனிதர்களினையும் தன் பால் தக்கவைத்துகொண்டிருப்பார்கள். இவர்களின் நோக்கம்,, மாறாதா தேடலினை மற்றவர்க்கும் தெரிவிப்பதே ஆகும்.
 • நகைச்சுவை / வம்பு / மொக்கை பதிவுகள் அனைத்துமே தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் எண்ணிக்கையே பெரும்பாலும் இருக்கின்றது.. இவர்களுக்கென்றே பாரட்ட ஒரு கூட்டமும், திட்டுவதர்கென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது.. இவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அழவைக்கவும் முடியும்,, அழகாக்கவும் முடியும்,, இவர்கள் யாவரும் தனிக்காட்டு ராஜாக்கள் ஆவர். ( ராணிகளும் இருக்கிறார்களப்பா..)
 • பொது / ஆக்கங்கள் தொடர்பான பதிவர்கள் தங்களது சிந்தனைகளினை  பகிர்கின்றனர். இவர்களின் கருத்துகள் சமூகத்தின் மேல் கோபமாகவோ அல்லது ஏக்கமாகவோ இருக்க கூடும். 

     இவ்வாறாக ஏதேனும் ஒரு கருத்தின் கீழாக பதிவர்களாக வலம் வரும் அனைவருமே தங்களின் பதிவுகள் மூலமாக ஏதேனும் வருமானம் வரக்கூடும் என்றிருந்தால் அதனினை புறக்கனிக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன். 
ஒரு சிலர் மட்டுமே தங்களின் கருத்துக்கள் மற்றவரையும் சென்றடைந்தால் போதுமென கருதுபவர்களாக இருக்கின்றனர்.

சரி, வலைப்பதிவுகள் மூலமாக கண்டிப்பாக வருமானம் ஈட்ட முடியுமா..?

நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

உங்களது உழைப்புக்கு ஏற்றவாறு குறுகிய அல்லது பெரிய அளவில் வருமானத்தை கண்டிப்பாக பெறலாம். 

எவ்வாறாக பணத்தை சம்பாதிப்பது என்பதனை விரிவான பக்கங்களாக தொடர்ந்து தரவே இனி வரும் பதிவுகள் காத்திருக்கின்றன.
( வலைப்பதிவில் தற்சமயம் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கும் பதிவர்கள் தங்களது கருத்துகளையோ அல்லது லிங்க்கையோ கமென்ட் மூலமாக தருவதன் மூலமாக உண்மையான முறையினை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க உதவியாக் இருக்கும் )

தொடர்ந்திருங்கள்...1 comment:

 1. all the best nanbaa...nalla pathivu... all the best..please keep write..

  ReplyDelete