உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?

வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்பொம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும்.  வருகை விகதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு தனது பயணத்தை முற்றுப்புள்ளி வைத்து சென்றவர்கள் ஏராளம். 

இப்படி ஆரம்பத்தில் பிரபலமாக பேசப்பட்டு, நாளடைவில் பதிவே இல்லாமல் திரும்பியவர்கள் தங்களை முழுமையாக சோதித்துகொள்ளுங்கள்

உங்கள் வலைத் தளத்தில் வருகையாளர்கள் குறையவே மாட்டார்கள் 

தினம் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள் :

    உங்கள் வலைப் பதிவில் கருத்துக்களை பதிய போதுமான வார்த்தைகள் கிடைப்பதில்லையா..? கவலையைவிடுங்கள். தினம் நீங்கள் ஒரு பதிவை எழுதுகிறீர்களோ இல்லையோ வேறு, பத்து பதிவுகளையாவது முழுமையாக படியுங்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக வேண்டும். உங்களால் மற்றவர்கள் பதிவை படிக்க முடிந்தால் தான் உங்களது பதிவுகளுக்கான வார்த்தைகளை தேடாமல், தட்டச்சில் கை வைத்த உடனே உங்கள் பதிவிற்கான வார்த்தைகள் உங்கள் கரங்களில் தவழும்.

உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மற்றவர்களுக்கு படிக்க எளிதாகவும், புரியும்படியும் இருக்க வார்த்தைகளே வாய்ப்பாக அமையும் என்பதை உணருங்கள்.

பார்வையாளர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தல் :

       உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் கருத்தையோ அல்லது எழுதும் தன்மையையோ பிடித்துப்போய் தான் வருவார்கள். அவர்களின் விருப்பம் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். 

உதாரனமாக, 
       நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் பட்சத்தில் உங்கள் தள வருகையாளர்கள் அதை மட்டுமே விரும்பி வருகிறார்காள் என்று உணருங்கள். உங்கள் தள கருத்துக்கள் யாவுமே சிரிப்பை சிதறும் படியே அமைத்துக்கொள்ளுங்கள். யோசனையே வேண்டாம் முழுமையாக நீங்கள் ஒரு பகுதியை நோக்கியே உங்கள் கவனத்தை செலுத்துங்கள், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொழில்நுட்ப பதிவை எழுதும் எண்ணம் இருந்தால் அதற்காக தனியாக வேறு பக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒரே இடத்தில் பதிவதன் மூலமாக பார்வையாளர்கள் மனம் மாறுபட்டு புரிதல் தவறிவிட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment