அட!! இது நானே தானா..? பகுதி -1

  • நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?
    ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை சமுதாயத்தில் சிறந்த நிலைகளில் வரவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்க்கின்றனர். இருப்பினும், பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கிய வழிமுறைகளையே பெரும்பாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் தொடர்கின்றனர்.  அப்படிப்பட்ட தருணங்களில் சிலர் கண்டிப்பானவர்களாகவும், சிலர் அப்பாவிகளாகவும், சிலர் பேராசைக்காரர்களாகவும் தங்களது குழந்தைகளுக்கு தெரிகின்றனர்

ஒரு நல்ல பெற்றோர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?

இதோ உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்.



கேள்வி 1.
        உங்கள் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 10 வரையிலான கல்வியை கொடுத்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        பிள்ளைகளுக்கு பிடித்த உணவு வகைகளை பற்றி அறிந்து வைத்திருக்கின்றீகளா.?
 ஆமாம்

        உங்கள் பிள்ளைகளின் உணவில் வாரத்தில் ஒரு முறையாவது கீரைகள், பழங்கள் அல்லது சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றனவா ?
 ஆமாம்

        பாஸ்ட் புட் உணவினை நீங்கள் பரிந்துரைக்க மறுத்துள்ளீர்களா..?
 ஆமாம்

        அவர்களின் மதிய உணவில் சிறப்பு விருந்து செய்திருக்கிறீர்களா..?
 ஆமாம்

        திண்பன்டங்களை அவர்களே மற்றவர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கும்படி பழக்கப் படுத்தியிருக்கிறீர்களா..?
 ஆமாம்

        வீட்டில் விருந்தினர்கள் இருக்கும் சமயத்தில் குழந்தைகளையும் உடன் அமர்த்தி அறிமுகப்படுத்திவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் புதியவர்கள் முன்னிலையில் சகஜமாக பழகுகின்றனரா..?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகள் அவர்களின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர அனுமதித்தது உண்டா.?
 ஆமாம்

        அதேபோல், நண்பர்களின் இல்லங்களுக்கு தனியே செல்ல விடுவீர்களா.?
 ஆமாம்

        உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியர், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் பெற்றோர்களுடைய தொலைப்பேசி எண்கள் உங்களிடம் இருக்கின்றதா..?
 ஆமாம்


        குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்ய அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

        இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது புதிய துணி வாங்கி தருவீர்களா.?
 ஆமாம்

        பள்ளி சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்கள் சுத்தமாக இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்வீர்களா.?
 ஆமாம்


        அவர்களின் புத்தகப் பையில் என்ன என்ன இருக்கிறது என்பதை அறிவீர்களா.?
 ஆமாம்

        குறைந்த பட்சம் 10 வயது வரையிலாவது அவர்களது பிறந்த தினத்தன்று பரிசுகள் ஏதும் வழங்கியது உண்டா.?
 ஆமாம்


        அவர்களின் வகுப்பு ஆசிரியரை மாதம் ஒரு முறை தொடர்புகொண்டு விவரங்களை கேட்பீர்களா.?
 ஆமாம்

        பள்ளி / பரிச்சை / பேருந்து மற்றும் இதர கட்டணங்களை குறித்து வைத்து சரியான தேதியில் செலுத்திவிடுவீர்களா.?
 ஆமாம்

        .தேர்வு நேரங்களில் விளையாட அனுமதிப்பீர்களா..?
 ஆமாம்

      ஆவர்களின் மதிப்பெண் விழுக்காடு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களா .?
 ஆமாம்

        குழந்தைகளின் படிப்பு தவிர அவர்களுக்கு வேறு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுப்புவீர்களா.?
 ஆமாம்

        அவர்களின் மேல் படிப்பிற்காக அல்லது அவர்களது உபயோகத்திற்கென்றே சிறு தொகையையேனும் சேமிக்கின்றீர்களா.?
 ஆமாம்

      உங்கள் குழந்தை, பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் இதர விழாக்களில் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பு / பரிசுகள் வாங்கியது உண்டா.?
 ஆமாம்

        இதர கதை புத்தகங்கள் / விரும்பிய தொலைக்காட்சி நிகழ்சி / வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளோடு வெளியே விளையாட அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        குழந்தைகள், வீட்டில் பூந்தொட்டி / மீன் தொட்டி / செல்ல பிராணிகளை வளர்க்க அனுமதிப்பீர்களா.?
 ஆமாம்

        வருடம் ஒரு முறை கோடை சுற்றுலா குழந்தைகளோடு செல்வீர்களா.?
 ஆமாம்

        அவர்கள் விரும்பிய பொருளை அவர்களே சேமித்து வாங்க கொள்ள வலியுறுத்துவீர்களா.?
 ஆமாம்

        தினமும் அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்களுடன் கலந்துரையாடுகிறீர்களா.?
 ஆமாம்

        கோவில்கள் மற்றும் இறை வழிபாடுகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுத்துகிறீர்களா.?
 ஆமாம்

        தாத்தா, பாட்டி மற்றும் பெரியவர்களின் அன்பும், ஆலோசனைகளும் உங்கள் குழந்தைக்கு கிடைக்க செய்கிறீர்களா.?
 ஆமாம்


      இப்படியாக இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை உங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள முடியும். மேற்கண்ட கேள்விகளில் குறைந்த பட்சம் 10 கேள்விகளுக்காவது உங்களது பதில் "ஆமாம்" என்று இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிறந்த நல்ல பெற்றோராக இருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ":சபாஸ" சொல்லிக்கொள்ளுங்கள். 

இந்த கேள்விகளிலேயே உங்கள் செல்ல குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திர்கான உங்கள் வழிகாட்டும் திறன் வெளிப்பட்டிருக்கும். மேலும் இந்த தொடரில் இதனை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறேன்.

தொடர்ந்து வாசியுங்கள் :-

தட்டப்படாத கதவுகளே அதிர்ஷ்டத்தை அடைத்து வைத்திருக்கின்றன..!

மேலும் வாசிக்கும் முன் ஒரு கப் தேனீருக்கு ஆர்டர் செய்திடுங்கள்....




Read more ...

அட!! இது நானே தானா..? முன்னுரை

பெற்றோர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கான பொக்கிஷம்.

     தேடல்கள் இல்லாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை.. அப்படி தேடி தேடி இன்னும் மன நிறைவு கொள்ளாமல், மேலும் தேடுவதையே குறிக்கோளாய் கொண்ட உயிர்கள் மனித இனம் மட்டுமே ஆகும். இப்படிப் பட்ட தேடல்களின் விளைவால் நாம் பெற்றது என்ன? மற்றும் நாம் இழந்தது என்ன என்பதை தன்னுணர்வின்பால் உணர்ந்தவர்களின் அனுபவ வார்தைகளால் இந்த பகுதியானது தொடங்கப்படுகிறது. 

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். இன்றைய சூழ்நிலைகளில் தனிக்குடும்பங்களாக வாழும் பல கோடி குடும்பங்களில் நிகழும் பெற்றோர், பிள்ளைகளின் உறவுச் சங்கிலிக்கிடையே ஏற்படும் விரிசல்களுக்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம் இந்த தொடர் பதிவு பகுதியானது அமையும்.

   மனஅழுத்தம், மனசோர்வு என்பது எதனால் ஏற்படுகிறது என்பதையும், அதனை அழிக்கும் அருமையான உற்சாக மருந்து என்ன என்பதையும் இத்தொடரில் விவரிக்கப்படும்.

  வளர் இளம் பருவத்தினர் சந்திக்கும் சிக்கல்களையும், தீர்வுகளையும் எடுத்துணர்த்தும். மேலும் மாணவர்களுக்கான தேர்வுகால பயத்தை போக்கவும், ஞாபக மறதி போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடவும் அறிய வாய்ப்பை தெரியப்படுத்தவும் இந்த தொடர் உங்களுக்கு பயன்படும்.


இந்த தொடர் பதிவின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்த ஓவ்வொருவரும் தங்களது வாழ்வில் தவறவிட்ட தருணங்களை திரும்பி கொன்டுவர ஆசைப்டுவார்கள், மேலும் கிடைத்திருக்கும் நாட்களில் தங்களை தாங்களே புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இப்படி ஓவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே அட!! இது நானே தானா..? என்று ஆச்சரியப்பட்டு போவார்கள் என உறுதியளிக்கிறேன்.

    மொத்ததில் பிள்ளைகளின் மன இருக்கத்தை பெற்றோரும், பெற்றோர்களின் மன நிலைகளை பிள்ளைகளும் புரிந்துகொண்டு பரஸ்பரம் அன்பு பாராட்டும் ஒரு இன்பமான் குடும்ப சூல்நிலைகளை உருவாக்க இந்த தொடர் பதிவானது பணியாற்றும் என நம்புகிறேன்.

உங்களின் கருத்துக்களையும், ஆதரவினையும் பின்னூட்டம் இடுவதன் மூலமாக இன்னும் சிறப்பாக இந்த தொடர் பதிவினை அமைக்க எனக்குதவும் என எதிர்பார்கிறேன்.


நன்றி!!

உற்சாக கருத்துகளோடு

செள. அருணேஸ்வரன்.
25.05.2012 வெள்ளி

Read more ...

உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?

வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்பொம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும்.  வருகை விகதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு தனது பயணத்தை முற்றுப்புள்ளி வைத்து சென்றவர்கள் ஏராளம். 

இப்படி ஆரம்பத்தில் பிரபலமாக பேசப்பட்டு, நாளடைவில் பதிவே இல்லாமல் திரும்பியவர்கள் தங்களை முழுமையாக சோதித்துகொள்ளுங்கள்

உங்கள் வலைத் தளத்தில் வருகையாளர்கள் குறையவே மாட்டார்கள் 

தினம் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள் :

    உங்கள் வலைப் பதிவில் கருத்துக்களை பதிய போதுமான வார்த்தைகள் கிடைப்பதில்லையா..? கவலையைவிடுங்கள். தினம் நீங்கள் ஒரு பதிவை எழுதுகிறீர்களோ இல்லையோ வேறு, பத்து பதிவுகளையாவது முழுமையாக படியுங்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக வேண்டும். உங்களால் மற்றவர்கள் பதிவை படிக்க முடிந்தால் தான் உங்களது பதிவுகளுக்கான வார்த்தைகளை தேடாமல், தட்டச்சில் கை வைத்த உடனே உங்கள் பதிவிற்கான வார்த்தைகள் உங்கள் கரங்களில் தவழும்.

உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் மற்றவர்களுக்கு படிக்க எளிதாகவும், புரியும்படியும் இருக்க வார்த்தைகளே வாய்ப்பாக அமையும் என்பதை உணருங்கள்.

பார்வையாளர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தல் :

       உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் கருத்தையோ அல்லது எழுதும் தன்மையையோ பிடித்துப்போய் தான் வருவார்கள். அவர்களின் விருப்பம் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். 

உதாரனமாக, 
       நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் பட்சத்தில் உங்கள் தள வருகையாளர்கள் அதை மட்டுமே விரும்பி வருகிறார்காள் என்று உணருங்கள். உங்கள் தள கருத்துக்கள் யாவுமே சிரிப்பை சிதறும் படியே அமைத்துக்கொள்ளுங்கள். யோசனையே வேண்டாம் முழுமையாக நீங்கள் ஒரு பகுதியை நோக்கியே உங்கள் கவனத்தை செலுத்துங்கள், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொழில்நுட்ப பதிவை எழுதும் எண்ணம் இருந்தால் அதற்காக தனியாக வேறு பக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒரே இடத்தில் பதிவதன் மூலமாக பார்வையாளர்கள் மனம் மாறுபட்டு புரிதல் தவறிவிட வாய்ப்புள்ளது.

Read more ...