முற்றிலும் இலவசமாக சொந்த டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சேவை வேண்டுமா..?

     இணையத்தை பொறுத்த வரையில் நமக்கென்றே ஒரு இணையதளம் வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது செலவு செய்தால் மட்டுமே நமக்கென்றே ஒரு தளத்தை நமக்கு விருப்பமான பெயரில் தொடங்க முடியும்.
பிளாக் அல்லது வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்கள் வலைப்பூ துவங்க உதவினாலும். அவைகளின் சப் டொமைனையே பயன்படுத்த வேண்டி இருக்கும். 

ஆனால் கூகிள் நிறுவனம் தற்போது இந்த குறையை போக்கியுள்ளது.



     கூகிள் நிறுவனம் ஆனது ஹோஸ்ட் கேடர், ஐசிஐசிஐ மற்றும் பெடரேசன் ஆப் மைக்ரோ ஸ்மால் அன் மீடியம் என்டெர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து http://www.indiagetonline.in என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த வசதியானது இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

   இந்த தளத்தில் இலவசமாக நமக்கென்ற டொமைனை நாம் தேடிப்பெற்று அதை முற்றிலும் இலவசமாகவே ஹோஸ்ட்டும் செய்துகொள்ளலாம்.

   வியாபார நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திடவே இலவச இணையத்தள சேவையை இந்த தளம் வழங்குகிறது.

இந்த தளத்தின் சிறப்பம்சங்களாவன :

  • டொமைன் மற்றும் ஹோஸ்டிங் முற்றிலும் இலவசம்
  • ஒரு வருடத்திற்கு இந்த சேவை இலவசம்
  • டொமைன் பெயரிலேயே மின்னஞ்சல் கணக்கையும் உருவாக்கி கொள்ளலாம் (www.yourname@yourdomain.com )
  • ஒரு வருடத்திற்கு பிறகு மேலும் தொடர்ந்து வேண்டுமானால் சந்தாதாரராக இணைந்துகொள்ளலாம்
  • தளத்தை வடிவமைக்க இலவச வடிவமைப்பு சேவையையும் வழங்குகிறது
  • டொமைன் ஆனது முடிவில் .in ல் அமைகிறது (www.yourname.in)
  • இலவச தொலைப்பேசி எண்ணில் நமக்கான வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்
  • டொமைன் ரிஜிஸ்டர் செட்ய்தவுடனாகவே நமக்கான கன்ட்ரோல் பேனல் அமைப்பு கிடைத்துவிடும்
  • மிக விரைவாக இணையதளத்தை நிறுவிடலாம்.
    கூகிள் மின்னஞ்சல் கணக்கும் உங்களது பான் கார்டும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக நீங்கள் இந்த சேவையை பெற முடியும்.

   இந்த சேவையை பயன்படுத்தி தொடங்கிய எனது வலைப்பக்கத்தை காண டொடுக்குங்கள் : 


  உங்களுக்கும் இலவசமாக ஒரு தளத்தை உறுவாக்க வேண்டுமா..? மேற்கண்ட indiagateonline தளத்திற்கு சென்று துவங்குங்கள் உங்களுக்கான இலவச இணையதளத்தை.

வாழ்த்துக்கள்..!




1 comment:

  1. உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_30.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete