அட!! இது நானே தானா..? முன்னுரை

பெற்றோர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கான பொக்கிஷம்.

     தேடல்கள் இல்லாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை.. அப்படி தேடி தேடி இன்னும் மன நிறைவு கொள்ளாமல், மேலும் தேடுவதையே குறிக்கோளாய் கொண்ட உயிர்கள் மனித இனம் மட்டுமே ஆகும். இப்படிப் பட்ட தேடல்களின் விளைவால் நாம் பெற்றது என்ன? மற்றும் நாம் இழந்தது என்ன என்பதை தன்னுணர்வின்பால் உணர்ந்தவர்களின் அனுபவ வார்தைகளால் இந்த பகுதியானது தொடங்கப்படுகிறது. 

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். இன்றைய சூழ்நிலைகளில் தனிக்குடும்பங்களாக வாழும் பல கோடி குடும்பங்களில் நிகழும் பெற்றோர், பிள்ளைகளின் உறவுச் சங்கிலிக்கிடையே ஏற்படும் விரிசல்களுக்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம் இந்த தொடர் பதிவு பகுதியானது அமையும்.

   மனஅழுத்தம், மனசோர்வு என்பது எதனால் ஏற்படுகிறது என்பதையும், அதனை அழிக்கும் அருமையான உற்சாக மருந்து என்ன என்பதையும் இத்தொடரில் விவரிக்கப்படும்.

  வளர் இளம் பருவத்தினர் சந்திக்கும் சிக்கல்களையும், தீர்வுகளையும் எடுத்துணர்த்தும். மேலும் மாணவர்களுக்கான தேர்வுகால பயத்தை போக்கவும், ஞாபக மறதி போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடவும் அறிய வாய்ப்பை தெரியப்படுத்தவும் இந்த தொடர் உங்களுக்கு பயன்படும்.


இந்த தொடர் பதிவின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்த ஓவ்வொருவரும் தங்களது வாழ்வில் தவறவிட்ட தருணங்களை திரும்பி கொன்டுவர ஆசைப்டுவார்கள், மேலும் கிடைத்திருக்கும் நாட்களில் தங்களை தாங்களே புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இப்படி ஓவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே அட!! இது நானே தானா..? என்று ஆச்சரியப்பட்டு போவார்கள் என உறுதியளிக்கிறேன்.

    மொத்ததில் பிள்ளைகளின் மன இருக்கத்தை பெற்றோரும், பெற்றோர்களின் மன நிலைகளை பிள்ளைகளும் புரிந்துகொண்டு பரஸ்பரம் அன்பு பாராட்டும் ஒரு இன்பமான் குடும்ப சூல்நிலைகளை உருவாக்க இந்த தொடர் பதிவானது பணியாற்றும் என நம்புகிறேன்.

உங்களின் கருத்துக்களையும், ஆதரவினையும் பின்னூட்டம் இடுவதன் மூலமாக இன்னும் சிறப்பாக இந்த தொடர் பதிவினை அமைக்க எனக்குதவும் என எதிர்பார்கிறேன்.


நன்றி!!

உற்சாக கருத்துகளோடு

செள. அருணேஸ்வரன்.
25.05.2012 வெள்ளி

1 comment: