ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா ( மதுரை ஸ்பெஷல் )

ஜில்லுனு தொழில் செய்யலாம்... ஜிவ்வுனு காசு பார்க்கலாமா..?

ஜிகர்தண்டா இருக்கு//.

அடேயப்பா மதுரை அருவாளுக்கு மட்டும் அல்லங்க ஜிகர்தண்டாக்கும் பேர் போனதுங்க.. நம்ம ஊருலேயும் மதுரை மணத்தோடு ஜிகர்தண்ட தொழில் தொடங்க தோழர் சீனிவாசன் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்..

கடந்த 12 வருடங்களாக ஜிகர்தண்டா மற்றும் பாதாம் பால் தொழில் தொடங்கி நான் சந்தித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவாக மதுரை மாவட்டங்களில் மட்டுமே சுவை மிகுந்த ஜிகர்தண்டா தொழில் பரவலாக இருக்கிறது.. குறைந்த முதலீட்டில் அதிக வருவாயை தரக்கூடிய ஜிகர்தண்டா தொழிலை ஏனைய மாவட்டங்களிலும் சிறப்பாக தொடங்கி வெற்றிகரமான வருவாயை ஈட்ட என்னுடன் பயணிக்க உங்களையும் அழைக்கிறேன்..

மூலதனமாக கடின உழைப்புடன் கூடிய..,


  • 10x16 அளவிலான சுகாதாரமிக்க அறை
  • விறகு அடுப்பு ஒன்று
  • 30லி கொள்ளளவுள்ள ஒரு அலுமினிய பாத்திரம்
  • நன்னாரி சர்பத் 
  • ஐஸ்கிரீம் மேனுவல் மெசின்
  • 0.5HP அளவுள்ள மின் மோட்டார்
  • ஒரு வாகனம் ( TVS Excel ) 
  • குளிர்பதன பெட்டி மற்றும்
  • கடைக்கு தேவையான ஸ்டால் கூண்டு
ஆகமொத்தம் குறைந்த பட்சம் ரூ.50000 முதலீடு இருந்தால் போதும்.. 




ஜிகர்தண்டா செய்யும் முறை :

  • நன்கு காய்ச்சிய தூய்மையான பால்
  • நன்னாரி சர்பத்
  • கடல் பாசி
  • பாலாடை
  • வெண்ணிலா ஐஸ்கிரீம்
தேவையான பதத்தில் கலந்து கொடுத்தால் ஜில்லுனு ஜிகர்தண்டா ரெடி..

பால் காய்ச்சும் முறையானது., முந்தைய நாள் இரவிலேயே சுமார் 10லி பாலினை 5லி ஆகும்படி கொதிநிலையில் சுமார் 4 மணி நேரம் காய்ச்சவும். பிறகு தனல் வெப்பத்திலேயே இருக்கும் படி பாலை அமர்த்தி இரவு முழுவதும் வைத்து விடவும்.. 5லி பாலானது சுமார் 3லி அள்விற்கு பதமாகிவிடும். பிறகு விற்பனைக்கு கொண்டு செல்லும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்..
விற்பனை நிலையத்தில் வைத்து பாலுடன் நன்னாரி சர்பத், கடல் பாசி,  பாலாடை ஆகியவற்றை போதுமான அளவில் கலந்து மேலே வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து கொடுத்தால் போதும் சுவையான ஜில்லென்ற ஜிகர்தண்டா ரெடியாகிவிடும்...

குறிப்பு : ஐஸ்கிரிம் மெசின் வாங்க முடியாதவர்கள் அதனை கிலோ கணக்கில் ஆர்டர் செய்து ஐஸ்கிரீம் கடைகளில் வாங்கி வைத்து கொள்ளலாம்..
கடல் பாசியை சுமார் 5 மணி நேரமாவது முன்பே ஊரவைத்துக் கொள்ளவும்.

45% அளவில் நாம் செய்யும் முதலீடுக்கு ஏற்ப்ப இலாபம் பார்க்கலாம்.
சராசரியாக ஒரு டம்ளர் ஜிகர்தண்டாவை ரூ.15 க்கு விற்கலாம்.
நமக்கு ஒரு டம்ளருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

மேலும் ஜிகர்தண்டா தொழிலில் பார்ட்னராகவோ அல்லது தொழில் முறை தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள். முடிந்த வரை தங்களுக்கான ஆலோசனைகளை வழங்க ஆயத்தமாக உள்ளேன்..






தொடர்புக்கு :

83446 04862
அல்லது
maduraijigarthanda@gmail.com என்ற மின் அஞ்சலிலும் தொடர்பு கொள்ளுங்கள்

///////////////////////////////////////////
//////////////////////////////

நன்றி திரு.சீனிவாசன்


மேலும் சுவைக்க..,

......
....


அடி முட்டாள் பெண்ணே..!

உருவமும்..,
ஓசையும் கொண்ட
என் தமிழிடம்
உணர்வுகளை பங்கிட
என் உள்ளம்...



மேலும் ரசிக்க.. Click :  http://malaikkathalan.blogspot.com


Get cash from your website. Sign up as affiliate

2 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. unkal site nalla irukkku.. melum palavithamana business idea kodungka bos.. romba help a irukkum.. thank you..

    ReplyDelete