சவுண்டு சர்வீஸ் தொடங்கலாம் சவுகரியமா சம்பாதிக்களாம்..

இன்றைய நவீன உலகத்தில் DVD மற்றும் Home Theatre சேல்ஸ் & சர்வீஸ் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திகாட்டிட தன்னுடைய அனுபவங்களையும் வெற்றிப் பாதையையும் உங்களுடன் சேர்த்து பயனிக்க நண்பர் R.வீரா அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.


வணக்கம்ங்க..

      என்னுடை 13 வது வயதில் முதன்முதல்லாக  ஒரு சர்வீஸ் சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கத்துக்க தொடங்கினேன். எனக்கு 20 வயது ஆகும் போது சொந்தமாக நானே ஒரு சவுண்ட் சர்வீஸ் சென்டர் தொடங்கினேன். அன்னையில் இருந்து என்னைய என் தொழில் பத்திரமா பார்த்துகுதுங்க.. 

    எத்தனையோ எலக்ட்ரானிக் துறை பத்தின  இன்ஜினீரிங் படிப்பெல்லாம் இப்ப வந்துருச்சுங்க. எம் பையன கூட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் சம்பந்தமான படிப்பையே படிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன். அவனும் இதில் மிக ஆர்வமாக இருக்கிறான். படிக்கும் நேரம் போக மீதி நேரங்களில் அவன் என்னுடன் கடக்கு வந்து ஆர்வமா பார்த்துட்டு இருக்கான். சொல்ல போனா கூடிய சீக்கரமே எனக்கு எதிரா ஒரு கைடை புடிச்சு உட்கார்ந்துடுவான் போல  இருக்கு...

சிறிய புன்னகையுடன் தனது தொழில் ஆலோசனைகளை பகிர்கிறார்..

உங்கள் ஏரியாவில் சுமார் 10*16 அளவிலான ஒரு சிறிய கடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..

பொதுவா DVD மற்றும் Home Theatre  சேல்ஸ் பாத்திங்கன ரொம்ப நல்லவே போகுதுங்க.
கடைக்கு தேவையான அட்வான்ஸ் தொகை போக, கொஞ்சம் இன்டீரியர் மற்றும் செல்ப் ரேக் அமைக்க செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு சிறந்த கற்பனையாளர்னா குறைந்த செலவில் மிக சிறப்பா உங்களது கடையினை நீங்க அமைத்து கொள்ளலாம்.

இன்டீரியர் மற்றும் பெயின்டிங் வேலையை முடிச்சதும். சரக்கு எடுக்க நீங்க வேறு எங்கும் தேடாதிங்க. அனைத்து மாவட்டங்களிலுமே பெரிய DVD மற்றும் Home Theatre  நிறுவங்கள் அங்கீகரிக்கப் பட்ட விற்பனை நிலையங்களை அமைத்துள்ளன. எனவே அங்கு சென்று உங்களது கடையினது விசிடிங் கார்டை கொடுத்து மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி வைத்து கொள்ளலாம். சென்னை, பெங்கலூர் மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களில் இன்னும் குறைந்த விலையில் DVD மற்றும் Home Theatre பொருட்கள் மற்றும் அதற்கான சர்வீஸ் பொருட்களை வாங்கிகலாம். முதல் முறை மட்டும் நீங்கள் நேரடியாக சென்று உங்களது DVD மற்றும் Home Theatre  சாதங்களை மொத்த விலையில் வாங்கிகொள்ளுங்கள். பிறகு தேவைப்படும் சமயங்களில் தொலைபேசி வாயிலாக தெரிவித்தால் போதும் அங்கீகரிக்கப் பட்ட விற்பனை நிலையங்களில் இருந்தே விற்பனை பிரதிநிதிகள் உங்களை தொடர்புகொண்டு உங்களது கடைக்கே வந்து சப்ளை செய்து விடுவார்கள். இதில் மேலும் சிறப்பு என்ன வென்றால் ஒரிரு பறிமாற்றங்களை நாம் சரியாக செய்துவிடுவோமேயானால் அவர்கள் நம்மை ஊக்குவிக்கும் முறையில் நாம் தரும் பணத்தின் மதிப்பை காட்டிலும் அதிக மதிப்பில் சாதங்களை இறக்கிவிடுவார்கள். நாம் விற்பனை செய்து வரும் லாபத்தில் மீதி தொகையை திருப்பி தந்துவிடலாம்.

      உதாரணமாக நாம் ஒரு பத்தாயிரம் செலுத்தி ஆர்டர் போடுவோமேயானால்   கம்பெனி சுமார் 30 ஆயிரம் வரையிலான பொருட்களை கூட நமக்கு இறக்கிவிட்டு போஇவிடும். பிறகு நாம் விற்பனையை செய்து மீதி தொகைகளை எளிய தவனைகளில் செலுத்திவிடலாம். நாம் நாணயமாக நடக்கும் பட்சத்தில் கம்பனிகள் நமக்கு மேலும் மேலும் பல ஊக்கங்களை அளிக்க தயாராக இருக்கின்றன.

சரி பொருட்களினை வாங்கி வச்சுடோம். அதை விற்பனை செய்ய வேண்டுமில்லையா..?

   முதலில் உங்களது வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு நிறைய விளம்பரங்களை செய்யுங்கள். தெரிந்தவர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களது பொருளுக்கான சந்தையினை ஏற்படுத்துங்கள். நாளடைவில் வியாபாரம் செழிப்படைய தொடங்கி விடும். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த முதலில் அவர்களது தேவையை புரிந்து கொண்டு DVD மற்றும் Home Theatre  போன்றவற்றின் தரத்தையும் அதற்கு கம்பனி தரும் சர்வீஸ் வாராண்டி பற்றின த்கவல்களையும் அளியுங்கள். விலையையை கூட்டியோ குறைத்தோ  சொல்லி விக்காதீர்கள். இரண்டுமே நம்பிக்கையை கெடுத்துவிடும். பொருக்கான தரத்தை பொருத்தே வாடிக்கையாளர்கள் திறும்பவும் வருவார்கள் எனவே குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற லோக்கல் சாதனங்களை சிபாரிசு செய்வதை குறைத்து கொள்ளுங்கள்..

இவ்வாறாக நடந்தால் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாக உங்கள் கடைக்கு வருவது நிச்சயம்

பெரும்பாலும் இது போன்ற DVD மற்றும் Home Theatre  சர்வீஸ் சென்டர்கள் விற்பனையில் மட்டுமல்ல் சர்வீஸ் செய்து கொடுப்பதிலேயே தனது லாப விகிதத்தை பெருக்குகின்றன..

நான் உங்களகு பரிந்துரை செய்ய விரும்புவது, நீங்கள் நம்பிக்கையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உங்களில் பொருட்களை வாங்கி செய்பவர்கள் தங்களது DVD மற்றும் Home Theatre  சாதனங்களை ரிப்பெயரிங் சர்வீஸ் காக உங்களிடமே கொண்டு வருவார்கள். அப்படி வரும் போது உங்களுக்கு சர்வீஸ் செய்ய தெரியும் பட்சத்தில் நீங்களே சர்வீஸ் செய்து கொடுங்கள். இல்லையென்றால் கவலை பட தேவை இல்லை.. சர்வீஸ் மட்டுமே செய்து கொடுப்பவர்கள் எப்படும் உங்களது கடைக்கு வாடிக்கையாளராகவோ அல்லது நண்பர்களாகவோ அனுகுவார்கள். அவர்களிடம் தொடர்ந்து நீங்கள் சர்வீஸ் செய்து உங்கள் வாடிககையாளரிடம் கொடுக்கலாம். மேலும் ஸ்பேர்ஸ் வாங்கி போட்டு சர்வீஸ் செய்யும் போது மிகுந்த லாபத்தை பார்க்கலாம்.

பொதுவாக எனது கடைக்கு வந்து சர்வீஸ் செய்யும் சர்வீஸ் மேன்கள் நிச்சயமாக ஒரு நாளைக்கு 500 ரூ. வரை சம்பாதிக்கின்றனர். அப்படியென்றால் பார்த்துகொள்ளுங்கள்.

பொதுவாக 20% லிருந்து 40%  உங்களது இலாபமானது அமையும்.

ஒரு நாலைக்கு இரண்டு DVD மற்றும் Home Theatre  விற்றாலே போது மாதம் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை சம்பாதிக்களாம். அதுபோக சர்வீஸ் விகிதத்தில் பார்த்தால் எப்படியும் தினமும் ரூ.300 உறுதியாக வரும்.

சுமார் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை இருந்தாலே போதும்.
உங்களது தொழில் கன்னியமாக நடக்கும் பட்சத்தில் உங்களது வெற்றியானது தீர்மானிக்க படும்.

எப்படியும் தொழில் தொடங்கிய ஒரிரு மாதங்கள் சற்றே சருக்கல்கள் வருவது சகஜம், அதற்கு பயந்து தளர்ந்து விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உங்களது பாக்கெட்டை நிரப்புவார்கள்.

முயலுங்கள்.. வெற்றி நிச்சயம்... வளருங்கள்..

வாழ்த்துகளுடன்..
R.வீரா

நன்றி!!


2 comments:

  1. nalla pathivu sir.ithu pool vera thozlil patri thereviungal.vaalthukaludan en ootum ungalukku.nandri.nalla pathivu sir.ithu pool vera thozlil patri thereviungal.vaalthukaludan en ootum ungalukku.nandri.

    ReplyDelete
  2. நிச்சயமாக.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete