ஆக்சுளி, ''சோ'' வை எப்படி வெளியேத்தரதுனா...?

என்னதான் பிரச்சனைனே தெரியலீங்க., எவ்வளவோ முயற்சி செஞ்சாலும் இந்த '' '' ''சோ '' வை மறந்துடலாம்னு பார்த்த முடியவே மாட்டிங்குதுங்க.. இதனால என்னை எத்தனை பேர் கேலி செய்யறாங்க தெரியுங்களா..? எப்படிங்க இந்த பழக்கத்தை விடறது..?

       ஆக்சுளி என்ன பிரச்சனைன., ஓப்பான சொல்லிடறேங்க.. ( ஆன, இது கம்பனி சீக்ரெட் ''சோ'', யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்க... )

    நாம தினம் தினம் எவ்வளவோ மொக்கை போடுறோம்,, அதுல அடிக்கடி நாம பேசும் போது நமக்கே தெரியாம ஆக்சுளா நாம சில வார்த்தைகளை பேசுவோம். அதாங்க 'சோ', 'அதாவது', 'இப்ப பாத்திங்கன்ன', போன்ற வசனங்களை அடிக்கை உபயோகப்படுத்துவோம்.  இது சில சமயங்களில் ஏன் பல சமயங்கலில் எதிரில் கேட்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்..
பக்குவமான பேச்சாளர்கள் கூட தங்களுக்கென்றே சில பிரத்யேக வர்த்தகளால் மேடைகளில் அவசஸ்தை படுவதை நாம் பார்க்கிறோம் தானே.. ஆக்சுளா நான் என்ன சொல்ல வரேன்னா.., இப்படி நாமக்கே தெரியாம நாம சில வார்தைகளை அடிக்கடி உபயோகப் படுத்துவதை குறைப்பது அல்லது நிறுத்துவதற்கான தீர்வு என்ன...? அப்படிங்கறதுதாங்க..?

அட இது ஒரு விசயமாப்ப..?

    ஆமாங்க நாமெல்லாம் யாருங்க தொழில் முனைவோர்... அதாங்க பிசினெஸ் மேக்கனைட்டு.. நாம எப்போதாவதல்ல எப்பவவுமே மீட்டிங் போட்டே ஆகனுமுங்க..   ஆக்சுவளா..,  மார்க்கெட்டிங் வேலை பார்க்கரவங்கள கேட்டு பாருங்க மாச கடைசில அவங்க சீனியருங்க மீட்டிங்க போட்டு பன்னற அட்டூளியங்கள் இருக்கே.... ம்ம் அய்யய்யய்யோ... மார்க்கெட் ரேசியோவ உயர்த்த காய்ச்சி எடுத்துருவாங்க.. அப்படி, மீட்டிங்குங்கற பேருல மூனு மணி நேரம் தெனற தெனற பேசுவாங்க பாருங்க பேச்சு...

ஏன் நம்ம எம்.எல்.எம் பார்ட்டிங்க..? ( ஓசில டீ வாங்கி கொடுத்ததும் பின்னாடியே வந்தில்ல அனுபவி மவனேனு )  சும்மா பேசியே காதை புண் ஆக்கிடுவாங்க...

பேசுனவன் புழைச்சுப்பான். கேட்டவன் கதி..?

அவனும் பேசனும்ல...,

ஆமா,   ஆக்சுளி நான்இத பத்தி பேச வரலியே...

ம்ம்..

நாம பேசும் போது இடையில பேசர தேவை இல்லாத சொற்களை நிப்பாட்டறதற்க்கு என்ன வழி..?


  • அதுதான் தேவையில்லாத சொல் ஆச்சே அதைய ஏன் பேசனும்..? அப்படின்னு மனசுல பதிவு பன்னிக்கனும்
  • முதல்ல என்ன பேசப்போறோம் என்பதை தீர்மானித்து பேசறது நல்லது
  • ஆக்சுளா, நாம பேசும் போது ஒருதறம் அதை ரெக்கார்டு பன்னி வைச்சுட்டு திரும்ம அதை போட்டு கேட்டு பார்த்து எந்தெந்த இடத்தில நாம எந்த வார்த்தையை எதற்காக பேசறோம்னு பார்த்து அதை சரி பன்னிக்கலாம் (அப்பத்தானே கேக்குறவன் பாடு என்னன்னு புரியும் )
  • மனசுல கான்பிடென் வேனும் மச்சி.. ம்ம்ம் தன்னம்பிக்கையோட பேசுங்க எந்த இடத்திலேயும் மிஸ் ஆகாது
  • எதை பேசறோம்ங்கரத தெளிவா புரிஞ்சு பேசுங்க.. பொது மேடையோ அல்லது டீக்கடை பெஞ்ச்சோ வார்த்தைகளின் ஆழம் அதை வாசிப்பதை பொருத்தே புலனாக்கம் அடைகின்றது என்பதை புரிந்து செயல்படுங்கள்
  • அடிக்கடி நான் இப்பெல்லாம் 'அந்த'  வார்த்தையை பேசரதில்லையே அப்படின்னு உங்களுக்கு நீங்களே சொல்லி பழகிக்கங்க.. மனசுக்கு புரிய வைச்சாச்சுனா அப்பறம் கவலையை விட்டடலாம்..
  • எல்லாத்தையும் காட்டிலும் முதல்ல நிறையா மேடை பேச்சோ அல்லது மத்தவங்க பேசும் போதோ கூர்ந்து கவனிச்சு பழகுங்க. எப்பவுமே நாம எந்த விசயத்தையுமே கவனிச்சுட்டு வந்தோம்னா அதுல பிரச்சனை வராது
  • ஆக்சுளா நாம மத்தவங்க பேசும் போது காதுகளை கூர்மையாக வைத்து கவனிக்க ஆரம்பிச்சோம்னா அந்த பேச்சு நம்ம மனசுல பதியும்.' சோ' அடிக்கடி டீவி யோ அல்லது பொது மேடையோ நல்ல அறிஞர்களின் வார்த்தைகளை கேளுங்கள்  
  • உங்களுக்கு மிகவும் பிடிச்ச தலைப்பில் நீங்களே ஒரு பத்து நிமிடம் கண்ணாடி முன்னாடி நின்னு பேசி பாருங்க.. ( வரலாறு முக்கியம் அமைச்சரே )
ஆக்சுளா.......  எனக்கொரு பிரச்சனைங்க யாரவது வழி சொல்லுங்க....?

2 comments: