என்று மடியும் இந்த அடிமையின் மோகம்..?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ..?
பாரினில் இனிமை வேறினியார்க்கோ..?

என்ற எம் பாட்டானின் தாகம் தீர்க்க முடியாமல் சிதறும் எம் இளம் தலைமுறையினை கண்டெழுந்த விளைவால் இந்த பதிவுவானது உங்கள் பார்வைக்கு இடப்படுகிறது...


வாணிபம் என்ற கொள்கையை கொண்டு, வந்தோரெல்லாம் ஆட்சி செய்திடவா எமது வந்தே மாதரம் பிறந்தது..?

கட்சிக்கொடிகளையும், சாதிக்கொடிகளையும் கையில் ஏந்திடும் வல்லமைகொண்ட எமது சகோக்கள் ஏன் தம் திறன் குறித்த சந்தேகம் கொள்கின்றனர்.?

வழி நடத்த ஆள் இல்லையே.., எம் வழியில் நடக்க ஆள் இல்லையே..,

எபோதும் இந்த இரு குறைகளையும் வார்த்தைகளாக்கியே வாழ்ந்து பழகி கழித்திடும் நாட்களில் ஏன் வரும் காலம் நிறம் மாற வண்ணம் பூச மறுத்தொதிங்கி போகின்றோம்..?

எபோதும் ஜப்பானையும்,, சைனாவையும் உதாரணங்களாக்கி பார்க்கிறோமே என்றெம்மை உதாரணமாக்க போகின்றோம்..?



படித்ததெல்லாம் பணம் பன்னுவதெற்கென்றால்..., இங்கு படிபோரெல்லாம் பணம் கொண்டவரா..?

பல்லமும் மேடும் சாலைக்கிருக்கட்டும், நாம் வாழ சாதிக்கு எதற்கு..?

தீக்கனலும் தம் தலை நிமிர்ந்திடவே ஆசைகொள்ளும்.. திடம் கொண்ட எம் இளைஞர்..?

தஞ்சையையும் , மதுரையையும் காலத்தால் வரலாறுகளாக்க முடியும்.. வாழ்ந்த மனிதர்களின் சுவடிற்கு நாம் தானே உற்தி சேர்க்க வேன்டும்..?


தமிழோ ஆங்கிலமோ தமிழாங்கிலமோ எதேனும் கற்றுக்கொள்.. இறுதியில் இறப்பது நீயாயினும் இருப்பது உன் உறவல்லவா..?
கற்பதை தானே கற்பிக்க முடியும்..?


தொலைக்காட்சிகளில் கழியும் விழாக்கால நிமிடங்களை என்றெண்ணி பார்க்கப்பபோகிறோம்..?

குழந்தையாய், குழந்தைகளுக்காய்,, என வேறுபட்ட கால சூழ்நிலைகளை சந்திக்கப்போவதென்னவோ உண்மைதான்.. இருக்கின்ற காலம் தனையும் செலவிட வேண்டா.., இருபதில் ஏதும் செலவிடலாமே...? எண்ணத்தை, கொண்ட தின்னத்தை,,, ஏதேனையும்...

ஆசைகளை அழிக்க முடியவில்லை குறைக்க கூடவா முடியவில்லை..?

இலச்சங்களில் கனவு,,  சேர முடியாவிட்டால் சோர்வு..

லஞ்சமும் வஞ்சமும் கண்களாகவும்..
சோம்பலும் ஆசையும் காதுகளாகவும்..,
பொய்மையை வாய் மொழியாகவும் கொண்ட காந்தி சொன்ன குரங்குகளாய் நாட்டினை பாவித்திருக்கிறோம்.


தேவை,,,,  சுதந்திர விழா அல்ல போராட்டமே...


விளித்தெழு இளைஞனே நாளைய சுதந்திர தினமாகட்டும் உண்மையானதாக இருக்கட்டும்


( ..............இன்னைக்கு மட்டுமாவது )


No comments:

Post a Comment