சாதனை நாயகர்கள்


வியாபார உலகில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவருமே மனதினில் எபோதும் வைத்திருந்த உறுதி யாதெனில் விடா முயற்சியே ஆகும்.

எத்தகைய சூழ்நிலையிலும் தாங்கள் எடுத்துக்கொண்ட எண்ணப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல்
வெற்றி பெறும் வரை சமூகத்திலும், சக நணபர்களிடமும் கூட எத்தனையோ அவப்பெயர்களை தாங்கிக்கொண்டு சாதித்துகாட்டியவர்களே இன்றைய சாதனை நாயகர்கள் ஆவார்கள்..

நம்மில் எத்தனையோ பேர் தன்னம்பிக்கை புத்தகங்களையும், சி.டி. களையும் தேடிச் சென்று வாங்கி ஆர்வமுடன் படிப்பதை பார்க்கின்றோம்.

" சரித்திரத்தை படிப்பவர்கள் யாவரும் சரித்திரம் படைப்பதில்லை ஆனால் சரித்திரம் படைத்தவர்கள் யாவருமே சரித்திரம் படித்தவர்களாவரே."

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன, படித்து விட்டு வேலை இல்லை என்போரையும், படிக்காததால் வேலை இல்லை என்போரையும் கண்டுகொண்டே தானே இருக்கின்றோம்?

தன்னம்பிக்கையை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தேடல் என்பதை எப்போதும் மறவாமல் இருக்க வேண்டும். அனைவருக்குமே தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக ஜப்பானின் சுசிகியையும், ஆப்ரஹாம் லிங்கனையுமே தேடிப்படிப்பதில் தவறேதும் இல்லை.. ஆனால் நமது நெருங்கிய நண்பனின் அண்ணனையும், தூரத்து உறவினரானவரையும், ஏன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மனிதரையும் கண்டுக்கொள்ளாமலே இருக்கின்றோம்..?

ஆமாம் நாம் பெரும்பாலும் கையை கண்களுக்கு எதிரே மிக அருகில் பிடித்துக்கொண்டு காட்சியினை தேடிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை.

தினம் தினம் போராட்டங்களை சந்திதுக்கொண்டு நம் சக இளைஞர்களை பார்க்கின்ற போதே நமக்கான வழித்தடத்தினை நாம் அறிந்துகொள்ளலாம். எனக்கு தெறிந்த நண்பர் ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை செய்துவந்தார். மிக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவரை இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனது அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் கடன் பெற்று வாழ்க்கையோட்டிக்கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன் எனது அலுவலகத்திரற்கு வந்திருன்த அவரை கண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது டிரைவர் வேலையை செய்து கொண்டே பகுதி நேரமாக ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் முகவராக சேர்ந்து இரண்டு வருடங்களாக பலரையும் சந்திதித்து நிதானமாக தனது பணியினை செய்து வந்திருக்கிறார். இன்று என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு நட்சத்திர ஹோட்டலில் ட்ரீட் கொடுக்கும் அளவிற்கு தனது வளர்ச்சியை கண்டிருக்கிறார். நண்பரிடம் அவரின் வளர்ச்சிக்கான காரணம் கேட்டேன்..

எத்தனையோ இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன அவற்றுள் எந்த வித வேறுபாடும் பெரியளவில் இல்லை. அவற்றின் மதிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் தனித்தன்மையிலேயே அவற்றின் மதிப்பானது உயருகிறது. நான் முதலில் முகவராக சேர்ந்ததுமே என் நெருங்கிய நண்பர்களிடம் சென்றேன் அவர்கள் என்னை கண்டதுமே ஓட ஆரப்பித்தனர் காரணம் அவர்களை பாலிசி போட கேட்டதால், நாளடைவில் எனக்கே வெருப்பாகி விட்டது இருந்த வேலையும் கூட தள்ளாட்டம் கண்டது ஆனாலும் என்னிடம் தொழில் செய்யவோ மூலதனம் இல்லை எனவே எனக்கான வாசல்படி இதில் தான் உள்ளது " தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்..?" அதனால் மீண்டும் போராட துணிந்தேன் எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட எனது விசிடிங்கார்டை கொடுத்து விடுவேன். பஸ்சில் போகும் போதும், டீ சாப்பிடும் போது பக்கத்தில் இருப்பவர்களிடம் இப்படி எந்த சந்தர்ப்பத்தையும் நான் எனக்கான வழித்தடமாக மாற்றிக்கொள்ள தயங்கியதில்லை எத்தனையோ அவமானங்கள், கிண்டல்களை சந்திதேன் விளைவு இன்று கை நிறைய வருமானம் பார்க்கிறேன். என்னை சந்திக்க மறுத்த நண்பர்கள் கூட இப்போது அவர்களாகவே என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசுகின்றனர். இதற்காக நான் செயவிட்டது எனது நேரத்தையும் விடாமுயற்சியையும் மட்டுமே ஆகும். என்றார்.

ஆம்,, இது போலவே ஆம்வே நிறுவனத்தில் சேரும் படி என்னை அறிவுருத்திய நண்பரும்குட தனது இலச்சியங்களை இலச்சங்களாக்க பட்ட பட்டினை விளக்கியுள்ளார்..

இன்னும் எத்தனையோ சக நண்பர்ககள் தங்களது வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் அது எத்தகைய தொழிலாக இருந்தாலும் அவர்கள் தன்னையும் தன் தொழிலையும் நம்பிக்கையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மைப்பாட்டை அறியலாம்.

ஆம்வே தவறானது, இன்சூரன் ஏஜன்ட் ஏமாற்று பேர்வலி என்று வசைபாடும் கூட்டத்திற்கு நடுவே இவர்களும் தனது வெற்றியை பதிய வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்..?


தயக்கத்தை விட்டொழியுங்கள்...
தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்...
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் முழுமையாக ஈடுபடுங்கள்...

வெற்றி என்பது எளிதில் கிடக்காது என்பதை உணருங்கள்....

No comments:

Post a Comment