வெற்றி என்பது தொட்டு விடும் தூரத்தில் தான்...

    இலக்கை அறிந்தவனும்...
    விளக்கை ஏந்தியவனும்...
    இருளுக்கு பயப்பட தேவை இல்லை..


தனது இலட்சியங்களை நிர்னயித்து அதனை சென்றடயும் பாதையை தேடிக் கண்டுபிடித்து சரியான வழிமுறயில் செல்லும் போது நமக்கென்று நிர்னயிக்கப்பட்ட அந்த வெற்றியானது நிச்சயம் நமது வசம் வந்தடையும் என்பது நிர்சனமான உண்மையாகும்.


   எதையுமே முயற்சி செய்யாமல் வீணாக காலத்தை கடத்திவிட்டு எல்லமே பொய் என்பதெல்லாம் முட்டாள்களின் வார்த்தைகளாகும்.


   திட்டமிட்டு செய்யும் எந்த ஒரு செயலும் வீணாவதில்லை.
இங்கே தவறு நேறுவதுதாவது சரியான அனுகுமுறையை கண்டிராமல் இருப்பதாலேயே நேறுகிறது


   நாம் அன்றாடும் பார்க்கும் சக மனிதர்களின் வெற்றியையே நமது மனமாவது காணாமல் இருக்கிறது இதில் தன்னுடைய வெற்றியினை அடையும் வழியினை காண்பது என்பது எங்கனம் நடக்கக்கூடும்..


  அளவுக்கு அதிகமாக கனவுகாணுங்கள் அப்போது மட்டுமே உங்களுடைய வெற்றியை நீங்கள் அதிகமாக நெருங்க முடியும். ஆனால் காணும் கனவை அடைய அதைவிட அதிகமாக நீங்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவதுதான் மாபெரும் தடையாக இருக்கிறது.


   இன்றைய இளைஞர்களின் மாபெரும் சக்தியானது அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத வன்னம் அறியாமை இருளில் மூழ்கி இருப்பதே அவர்களின் தன்நம்பிக்கையை நிலைகுலைய செய்கிறது.


மாத சம்பளமே எனக்கு திருப்தியாக இருக்கிறது அல்லது என்னுடைய சம்பாத்தியமானது எனக்கு போதும் என்கின்றவர்கள் எத்தனை பேர்.../ எதாவது  ஒரு காரணத்தை வலியுருத்தி எல்லோருமே ஒரு தேடலை கொண்டிருக்கிறோம். எதிலுமே நமது முழு திருப்தி அல்லது நிறைவு என்பதை நாம் அடைவதில்லை..


  அளவுக்கு அதிகமாக ஆசை படுங்கள் அப்போது தான் ஒரு அளவுக்காவது அடைய முடியும் என்கின்ற ஒரு வாதம் ஒரு பக்கம், ஆசையை விட்டொளியுங்கள் என்பது ஒரு பக்கம், இதில் எந்த கருத்தை
நாம் எடுத்துக்கொள்கிறோம்../


வெற்றி என்பது ஒரு மாபெரும் மலை போன்றது அதை அடைய வியர்வை மட்டும் போதாது கூறிய கோடாரி போன்றதான அறிவினை துணையாக உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.  முழு மலையையும் அடைவது என்பது எளிதானதன்று..


சிறுதொழில் செய்யும் வியாபாரி ஒருவர் தன்னுடைய தொழிலில் திருப்தியுடன் இருக்கிறார்.
பல்லாயிரம் தொழிலாளர்களை ஆளுமை செய்யும் வணிகர் அழைந்துகொண்டே இருக்கிறார்.
இதில் எவர் மகிழ்ச்சியானர் என்பதை அறிய முடியுமா...


   எவன் ஒருவன் தன்னுடைய செயலில் பின்வாங்காமல் சரியான படி அதை தொடர்கின்றானோ அவன் சாதிப்பது நிச்சயம். எதையுமே தொடங்கும் முன்பு பலரிடம் ஆலோசனை கேட்கலாம் தவறில்லை.. தொடங்கிய பின்பு அதை வெற்றி கொல்வதை மட்டுமே மனமானது எப்போதும் சிந்திக்க செய்ய வேண்டும். இடையில் ஏற்படும் சிறு தோல்விகளால் மனம் சோர்ந்து
போகும்போது அதனை ஊக்கப்படுத்தும் பொறுப்பானது மிகவும் அவசியம் ஆகும்.



பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்

1 comment: