திருப்பூரில் டாலர் நகரம் - வாருங்கள் சகாக்களே!!

      மிகச்சிறந்த படைப்புகளை நாள்தோறும் நாம் வலைத்தளங்களில் படித்து வருகிறோம். அந்த வகையில் எனக்கு நல்ல குருவாகவும் அண்ணனாகவ்வும் இருந்து அவ்வப்போது தலையில் குட்டு வைத்து ஆலோசனைகளை இலவசமாக கொடுத்து வரும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்களின் முதலாவது மற்றும் திருப்பூரின் உண்மை முகத்தை எடுத்துச் சொல்லும்

" டாலர் நகர்" நூல் வெளியீட்டு விழா, 

ஜனவரி மாதம் 27 ஆம் தேதி, திருப்பூர், பல்லடம் ரோடு, டி.ஆர்.ஜி. ஹோட்டலில் நடக்க இருக்கிறது. (அன்று எனது பிறந்த நாளும் கூட,, அண்ணன் கிட்டே யாரும் சொல்லிடாதிங்க் அவருக்கும் தெரியாது : D)


      4தமிழ்மீடியாவில் அவர் எழுது வந்த  டாலர் நகரம் படைப்பை அவர்களே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.. 

காரணம் ஜோதிஜியின் எழுத்தாற்றல். 
    
   அவரிடம் பேசும் பொழுதே அவரின் ஆற்றலை கண்டு நிறைய வியந்திருக்கிறேன்.

நேரம் தவறாமை, துல்லியமான கணக்கீடு என்று மனுசர் எப்பப் பாரு கோடு போட்டு என்னை பெண்டு  எடுக்கிறார். ஆனால் அவரின் இந்த பண்பே என்னை மேலும் அவருடன் ஒட்ட வைத்து வருகிறது.

     டாலர் நகர் கைக்கு வந்ததுமே மூன்று நாள் லீவு போட்டு படித்துவிட முன்பதிவும் செய்துவிட்டேன். திருப்பூர்காரன் என்பதால் மட்டும் அல்ல, இந்த புத்தகத்தில் முதலாளிகள்,  தொழிலாளர்கள், வியாபார மாற்றங்கள் என்று பல்வேறு நிலைகளில் உள்ளவர்களின் மனநிலை பற்றியும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் தனது பார்வையில் ஒரு சேர்த்து வைக்க வேண்டிய பொக்கிசமாக தொகுத்து தந்திருக்கிறார். ஒரிரு பக்கங்களை புரட்ட தந்திருந்தார் அதில் கிடைத்த தகவல்களிலே இன்னும் எனது ஆச்சரியங்கள் அகலாமல் இருக்கிறது.

    அன்பு அண்ணனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் அனைவரையும்  வரவேற்கிறேன்.


3 comments:

  1. //டாலர் நகர் கைக்கு வந்ததுமே மூன்று நாள் லீவு போட்டு படித்துவிட முன்பதிவும் செய்துவிட்டேன். //

    இது நமது நிறுவனர் சீனிவாசன் அவர்களுக்கு தெரியுமா.. :-)

    ReplyDelete
    Replies
    1. ஏம்மா, நீ எப்ப பாரு வேட்டு வைக்குறதுலயே இருக்கியே,,,

      Delete
  2. அவரிடம் உரையாடிய பொழுது தான் ஒரு நிறுவனத்தில் மேலாளர் பதவியில் இருப்பதாய் அடக்கமாய் கூறினார். நான் சிறுவனாய் இருந்தாலும் என்னிடம் பழகிய உணர்வுடன் பேசினார்.

    சரி , நீங்க இவ்ளோ அழகா கவிதை எழுதுவீங்களா.... ரொம்ப நல்ல இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete