டேலி (TALLY) கத்துக்கலாமா..?

  ஒவ்வொரு தொழில் முனைவேருக்குமான முக்கிய தகுதிகளில் அக்கவுண்ட்ஸ் கீப்பிங் எனப்படும் கணக்கு பதிவியலின் சிறப்பம்சங்களை ஒரளவேனும் தெரிந்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

    பொதுவாக பெரிய நிறுவனங்கள் தனது கணக்கு பரிவர்த்தனைகளை தனி டிபார்ட்மென்ட் கொண்டு செம்மையாக செய்துவிடுகின்றன.. ஆனால் சிறு தொழில் நடத்தும் வியாபர நண்பர்கள் சில சமயங்களில் தனது வியாபார பரிவர்த்தனைகளை சரியாக நிர்வகிக்காத காரணங்களாலேயே தனது வெற்றி வாய்பினை தவறவிடுக்கின்றனர். அத்தகைய சூழ்நிலைகளில் அடிப்படை கணிணி அறிவு கொண்டிருந்தாலே டேலி ( Tally) எனப்படும் அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேர் துணைகொண்டு தனது வியாபர பரிவர்த்தனைகளை தாங்களே மிகவும் எளிய முறையில் கையாளலாம். எனவேதான் அக்கவுண்ட்ஸ் கீப்பிங் பற்றிய முழுமையான தகவல்களுக்காக இந்த பதிவிடப்படுகிறது., பொதுவாக எனக்கும் அக்கவுண்ட்ஸ்க்கும் துளியும் ஒத்துபோகாது.. இருப்பினும் உங்களுக்காக நானும் பழகப்போறேன்.. என்ன பழகலாமா....?


  • டேலி  (TALLY )
டேலியானது வியாபர பரிவர்த்தனைகளை முழுமையாக கையடக்கக்கூடிய குறு / பெறு வணிக நிறுவனங்களுக்கான கணிணி வழி கணக்கு பதிவியலின் பயன்பாட்டு சேவையே ஆகும்.  (அதாங்க இது ஒரு அக்கவுண்டிங் சாப்ட்வேர்.) டேலி மென்பொருளை வடிவமைத்தவர்கள் இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனமாகும். கிட்டத்தட்ட 94 நாடுகளில் டேலி மென்பொருளானது உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமே நாம் டேலி பற்றின பெருமைகளை நன்குணரமுடிகிறது. பொதுவாக இதன் எளிமையான உருவாக்க முறையினாலேயே பெரும்பாலன ஆதரவை டேலி பெற்றுள்ளது. ஆரம்பகட்டத்தில் டேலி மென்பொருளானது கீபோர்டு மட்டுமே உபயோகப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அதன் அசூர வளர்ச்சியின் காரணாமாக பல பல புது முன்னேற்றங்களை கண்டு இபோது தனது புது பாரிமானத்தில் மிளிர்கிறது.. 

   சரி டேலி பழகும் முன் அக்கவுண்ட்ஸ் பத்தி முதல்ல கொஞ்சம் தெரிஞ்சுக்களாமா..?

கணக்கு பதிவியல் (Accounting) :
     பொருளை வாங்குதல், விற்றல் மற்றும் நிதி நிலை தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரு வித பக்குப்பாய்விற்குட்படுத்தப்பட்ட முழுமையான தீர்வுக்கு கணக்கு பதிவியல் என்று பெயர் (....க்கும் தெரியாக்கும்)
சரி, அத்தகைய கணக்கு பதிவியல் தொடர்பான நமக்கு தேவையான சிறிய ரூல்ஸ் என்ன தெரியுமா..?

  • Debit ............. > the Reciver
  • Credit .............>  the Giver


டெபிட்டார் (Debtor) எனப்படுபவர் பெறுபவராகவும், கிரடிட்டார் (Creditor) எனப்படுபவர் கொடுப்பராகவும் கருதபடுகிறார்.

முதலில் முழுமையான கணக்கு பரிவர்த்தனைகளை தொடங்கும் முன் ஜர்னல் என்ட்ரி எனப்படும் தொடக்க குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.. இன்னாருக்கு இன்னா பொருளை வித்தேன் வாங்குனேன்.. இதெல்லாம் தாங்க..

பிறகு.,

லெட்ஜர் கிரியேட்டிங்
வவுச்சர் கிரியேட்டிங்
பாலன்ஸ் சீட்
பிராபிட் & லாஷ் எல்லாம் பர்த்துக்கலாம்..



கணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்


  • a/c - account - கணக்கு
  • B/S - Balance Sheet - ஐந்தொகை
  • b/d - brought down - கீழ் கொண்டு வரப்பட்டது(மீதி)
  • c/f - carried forward - முன் கொண்டு செல்லப்பட்டது(மீதி)
  • Dr - debit - பற்று
  • Cr - credit - செலவு
  • G/L - General Ledger - பொது பேரேடு
  • P&L - Profit & Loss வருமான செலவீன கணக்கு
  • TB - Trial Balance - பரீட்சை மீதி


சரிங்க தூங்க போய்டாதிங்க பொறுமையா ஒவ்வொரு பதிவிலும் தெரிஞ்ச வரைக்கும் சொல்லரேன். தெரிஞ்சத சொல்லுங்க...

6 comments:

  1. மிகவும் நன்று மற்றும் நன்றியும்.

    ஒரு முழுமையான உதாரணத்தை கொண்டு எங்களின் விரல் பிடித்து அழைத்து செல்லுங்கள் ...

    ReplyDelete
  2. வலைச்சரம் மூலம் அறிமுகித்து வைத்த “ஜ.ரா.ரமேஷ் பாபு”வுக்கும் நன்றி

    ReplyDelete
  3. பின்னூட்டம் அளித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.. எனக்கு மிகுந்த உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete