சக்க போடு போடு ராஜா.. உன் காட்டுள மழை பெய்யுது..

" பெருசா யோசிச்சா தான் சாதிக்க முடியும் " நீ கண்டிபா சாதிப்பே.. பெருசா யோசி பீமா... சுட்டி டிவி ஜக்கி சான் பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போ ஜூலி பீமா கிட்டே இததான் சொன்னா.. உடனே கிளிக் ஆச்சு நாமும் டிரை பன்னித் தான் பார்ப்போமே.. அப்டினு தான் கொஞ்ம் நடைய மாத்தலாம்னு இந்த பதிவு...


  தொழில் எதுவாயினும் செய்யும் தனிதன்மை தானே வெற்றியை தீர்மானிக்கிறது..?

ம்ம்.. சரிங்க.,,,,

        என்னக்கா வூட்டுல இவ்லோ பெரிய கூட்டம்..?

   எங்கூட்டுக்காரரோட தம்பி பையன் அருணு எவனோ கூறு கெட்டவன கூட்டிட்டு வந்து சோப்பு விக்கெரேன் சீப்பு விக்குரெனுட்டு அக்கப்போரு பன்னிட்டிருக்கன்டி.. நானே விபரம் தெரியாமத் தான் பார்த்திட்டு இருக்கேன்ற இவ வேற...

( மொத்தமாக ஆறு பிளாஸ்டிக் சேரு. அதுல ஐந்துபேரு.. அப்படியே திண்ணையில வெத்தலைய கொத்துனபடி ரெண்டு பெருசுங்க சகிதமா இருக்குற இந்த சுச்சுவேசன் சூலூரை தாண்டி ஒரு பாப்பம்பட்டி கிராமமும்னு வைச்சுக்குவேமே..)



    ஏம்ப்பா அருணு எங்க பெரிப்பா ஊர்ல நிறையா பேர தெரியும்னு டெமோ காட்டரதுக்கு என்னைய கூட்டிடு வந்தே பச்ச தண்ணியாவது கண்ணுல காட்டுப்பா. (...இவருதாங்க மாசம் அறுபதாயிரதுக்குமேல சம்பாதிக்குற சீனியர்  MLM பிஸினஸ் மேனுங்க.. பேரு சத்ய மூர்த்தி )


    பொருங்க சார்.. முதல்ல நீங்க புராடெக்ட்ட பத்தி எதையாவது ஒலரி எனக்கு கீழ எவனையாது ஜாய்ன் பன்னி விடுங்க அப்பரம போகும் போது கவனிக்கறேன்..

அடப்போபா.. நானும் நாலு மணி நேரமா கட்டம் எல்லாம் போட்டு காட்டுரேன் இருக்கிற நாலு பேரும் அவங்க அவங்க ஜோலிய தானே பாக்குராங்க..

   அதெல்லாம் எனக்கு தெரியாது என்னை சேர சொல்லும் போது என்ன சொன்னிங்க நீ சேர்ந்தா மட்டும் போதும் உனக்கு கீழ ஆட்களை நானே போட்டுக்கரேன்னிங்க இப்ப என்னடான்னா எனையவஏ புடிக்க சொல்லுரிங்க.., அப்பவே இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னேன்.. கேக்கல.., அனுபவிங்க.., இல்லைன நான் கட்டுன காசயாது திருபி கொடுங்க..

அட நீ வேற..,

ஏங்க எல்லோரும் இங்க கவனிங்க..,

அம்மா சலவைக்கு போட்டதெல்ல கொண்டாந்திருக்கேன்.. ( இது டோபி கோபி )

வாடா வாடா.. காலைலயே தரேன்னியேடா.. ஏ லேட்டு....

என்னம்மா பன்றது., பொன்டட்டிக்கு உடம்பு சரில்ல அதானுங்க...   இதென்னங்மா யாரு அந்த வாத்தியாரு வட்டா வட்டமா போட்டு காட்டிட்டு இருக்காரு..

அவரு சோப்பு விக்கரவன்டா கோபி...

அம்மா எனக்கு சலவை பன்றதுக்கு கிடைக்குமாம்மா..?

அவன்கிட்டயே கேளு..

சாரே... இந்தா சாரே... எனுங்கோ வாத்தியாரே...

வாத்தியாரா ..?  சொல்லுங்க...,

எனக்கு சோப்பு வேனுமுங்க... நீங்க விக்கரிங்கலாமா எனுங்க வாத்தியாரு தொழில்ல வருமானம் போதலிங்களா..?

உங்க பேரு என்னங்க..

கோபிங்க சாமி..

மிஸ்டர் கோபி.., நீங்க தப்பா நினைச்சுட்டிருக்கீங்க.. நாங்க தொழில் வாய்பு மூலமா லட்சக்கணகுல பணம் சம்பாதிக்க வாய்பை ஏற்படுத்த வந்திருக்கோ.. இது வெறும் சோபு விக்கிற கம்பெனி அல்ல.. ஏன் நீங்க கூட மாசம் லட்சத்துக்கும் மேல சம்பாதிக்களாம்..,

அட டே இன்சூரன்சு கம்பனியா..? பொலப்பு கெட்டவங்கய்ய .. எம் பொலப்ப வெற கெடுக்கப்பாக்குறீங்களா..?

நோ.. நோ.. நாங்க அன்றாட யூஸ் பன்னுற பொருட்கள் மூலமா வருமானம் வர வெபோம்... உங்க செலவையே வருமானமா ஆக்கிடுவோம்..

ஆமா கிளிச்சிங்க... ஏன்ய உங்களுக்கு வேற வேலையே கிடைக்கிலயா..
ஏன்சாமி எம் பொலப்புல மண்ணல்லி போட பாக்குரிங்க.. இருக்குரத விட்டுட்டு பறக்கறதய புடிக்குறதூ.. ஆள விடுங்க...

இல்லை கோபி...

அட போங்க சாமி.. என் கழுதைய விட மோசம நானு வேலை பாக்குறேன் சல்லி காசு கூட பாக்க முடியல.. லச்சமாம் கோடியாம்...

நான் கூட பேங்க்ல பத்தாயிரம் சம்பளத்தில இருந்தேன். இப்ப பாருங்க மாசம் அறுபதாயிரதுக்கு மேல சம்பாதிக்கிறேன்..

அட நிஜமாங்களா...?

............

............
............
............
............


கண்டிபா எல்லாமே சாத்தியம் தாங்க.. என் பெரு கோபி நான் கூட ரென்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சலவை தொழி தாங்க செஞ்சிட்டு இருந்தேன்...

இப்ப......



( காலம் மாறலாம், கொண்ட காட்சிகள் மாறுமா..?)








1 comment: