ஆக்சுளி, ''சோ'' வை எப்படி வெளியேத்தரதுனா...?

என்னதான் பிரச்சனைனே தெரியலீங்க., எவ்வளவோ முயற்சி செஞ்சாலும் இந்த '' '' ''சோ '' வை மறந்துடலாம்னு பார்த்த முடியவே மாட்டிங்குதுங்க.. இதனால என்னை எத்தனை பேர் கேலி செய்யறாங்க தெரியுங்களா..? எப்படிங்க இந்த பழக்கத்தை விடறது..?

       ஆக்சுளி என்ன பிரச்சனைன., ஓப்பான சொல்லிடறேங்க.. ( ஆன, இது கம்பனி சீக்ரெட் ''சோ'', யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்க... )

    நாம தினம் தினம் எவ்வளவோ மொக்கை போடுறோம்,, அதுல அடிக்கடி நாம பேசும் போது நமக்கே தெரியாம ஆக்சுளா நாம சில வார்த்தைகளை பேசுவோம். அதாங்க 'சோ', 'அதாவது', 'இப்ப பாத்திங்கன்ன', போன்ற வசனங்களை அடிக்கை உபயோகப்படுத்துவோம்.  இது சில சமயங்களில் ஏன் பல சமயங்கலில் எதிரில் கேட்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்..
பக்குவமான பேச்சாளர்கள் கூட தங்களுக்கென்றே சில பிரத்யேக வர்த்தகளால் மேடைகளில் அவசஸ்தை படுவதை நாம் பார்க்கிறோம் தானே.. ஆக்சுளா நான் என்ன சொல்ல வரேன்னா.., இப்படி நாமக்கே தெரியாம நாம சில வார்தைகளை அடிக்கடி உபயோகப் படுத்துவதை குறைப்பது அல்லது நிறுத்துவதற்கான தீர்வு என்ன...? அப்படிங்கறதுதாங்க..?

அட இது ஒரு விசயமாப்ப..?

    ஆமாங்க நாமெல்லாம் யாருங்க தொழில் முனைவோர்... அதாங்க பிசினெஸ் மேக்கனைட்டு.. நாம எப்போதாவதல்ல எப்பவவுமே மீட்டிங் போட்டே ஆகனுமுங்க..   ஆக்சுவளா..,  மார்க்கெட்டிங் வேலை பார்க்கரவங்கள கேட்டு பாருங்க மாச கடைசில அவங்க சீனியருங்க மீட்டிங்க போட்டு பன்னற அட்டூளியங்கள் இருக்கே.... ம்ம் அய்யய்யய்யோ... மார்க்கெட் ரேசியோவ உயர்த்த காய்ச்சி எடுத்துருவாங்க.. அப்படி, மீட்டிங்குங்கற பேருல மூனு மணி நேரம் தெனற தெனற பேசுவாங்க பாருங்க பேச்சு...

ஏன் நம்ம எம்.எல்.எம் பார்ட்டிங்க..? ( ஓசில டீ வாங்கி கொடுத்ததும் பின்னாடியே வந்தில்ல அனுபவி மவனேனு )  சும்மா பேசியே காதை புண் ஆக்கிடுவாங்க...

பேசுனவன் புழைச்சுப்பான். கேட்டவன் கதி..?

அவனும் பேசனும்ல...,

ஆமா,   ஆக்சுளி நான்இத பத்தி பேச வரலியே...

ம்ம்..

நாம பேசும் போது இடையில பேசர தேவை இல்லாத சொற்களை நிப்பாட்டறதற்க்கு என்ன வழி..?


  • அதுதான் தேவையில்லாத சொல் ஆச்சே அதைய ஏன் பேசனும்..? அப்படின்னு மனசுல பதிவு பன்னிக்கனும்
  • முதல்ல என்ன பேசப்போறோம் என்பதை தீர்மானித்து பேசறது நல்லது
  • ஆக்சுளா, நாம பேசும் போது ஒருதறம் அதை ரெக்கார்டு பன்னி வைச்சுட்டு திரும்ம அதை போட்டு கேட்டு பார்த்து எந்தெந்த இடத்தில நாம எந்த வார்த்தையை எதற்காக பேசறோம்னு பார்த்து அதை சரி பன்னிக்கலாம் (அப்பத்தானே கேக்குறவன் பாடு என்னன்னு புரியும் )
  • மனசுல கான்பிடென் வேனும் மச்சி.. ம்ம்ம் தன்னம்பிக்கையோட பேசுங்க எந்த இடத்திலேயும் மிஸ் ஆகாது
  • எதை பேசறோம்ங்கரத தெளிவா புரிஞ்சு பேசுங்க.. பொது மேடையோ அல்லது டீக்கடை பெஞ்ச்சோ வார்த்தைகளின் ஆழம் அதை வாசிப்பதை பொருத்தே புலனாக்கம் அடைகின்றது என்பதை புரிந்து செயல்படுங்கள்
  • அடிக்கடி நான் இப்பெல்லாம் 'அந்த'  வார்த்தையை பேசரதில்லையே அப்படின்னு உங்களுக்கு நீங்களே சொல்லி பழகிக்கங்க.. மனசுக்கு புரிய வைச்சாச்சுனா அப்பறம் கவலையை விட்டடலாம்..
  • எல்லாத்தையும் காட்டிலும் முதல்ல நிறையா மேடை பேச்சோ அல்லது மத்தவங்க பேசும் போதோ கூர்ந்து கவனிச்சு பழகுங்க. எப்பவுமே நாம எந்த விசயத்தையுமே கவனிச்சுட்டு வந்தோம்னா அதுல பிரச்சனை வராது
  • ஆக்சுளா நாம மத்தவங்க பேசும் போது காதுகளை கூர்மையாக வைத்து கவனிக்க ஆரம்பிச்சோம்னா அந்த பேச்சு நம்ம மனசுல பதியும்.' சோ' அடிக்கடி டீவி யோ அல்லது பொது மேடையோ நல்ல அறிஞர்களின் வார்த்தைகளை கேளுங்கள்  
  • உங்களுக்கு மிகவும் பிடிச்ச தலைப்பில் நீங்களே ஒரு பத்து நிமிடம் கண்ணாடி முன்னாடி நின்னு பேசி பாருங்க.. ( வரலாறு முக்கியம் அமைச்சரே )
ஆக்சுளா.......  எனக்கொரு பிரச்சனைங்க யாரவது வழி சொல்லுங்க....?
Read more ...

வர்த்தக தொடர்பாடல் ( BUSINESS COMMUNICATIONS )


  • வர்த்தக தொடர்பாடல் ( BUSINESS COMMUNICATIONS )
    பொதுவாக தொழில் முனைவோருக்கான அடிப்படை தொழில் கட்டமைப்பு குறித்தான தகவல்களில் Business Communications எனப்படும் வர்த்தக தொடர்பாடல் திறன் ஆனது மிகவும் இன்றியமையாத பண்பாக அமைகிறது. இது குறித்தான விளிப்புனர்வானது நம்மில் பலருக்கும் அலட்சிய போக்கான மனப்பாங்காகவே இருக்கிறது. MBA மற்றும் வணிகம் தொடர்பான படிப்பினை கொண்டோருக்கு Business Communications ஆனது ஒரு பாடமாகவே அமைக்க பெற்றுள்ளது. நாம் சந்தைப்படுத்தும் ( Market ) பொருளுக்கு உண்டான மதிப்பினை நுகர்வோர் மற்றும் சந்தையாளர்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான மூல வேர் ஆனது நீங்கள் எத்தகைய திறனை வர்த்தக தொடர்பாடலில் கொண்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே தான் (Business Communication) குறித்தான தேடலின் தகவல்களானது உங்கள் பார்வைக்கு பதியப்படுகிறது.


  • வர்த்தக தொடர்பாடல் (Business Communication) எனப்படுவன..,
தொழற்கூடம் அல்லது அலுவலக தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான வர்த்தக உரையாடல் அல்லது ஊடகத்தின் வழியாக தெளிவுபடுத்தும் முறைக்கே வர்த்த்க தொடர்பாடல் (Business Communication) என்று பெயர்.


ஒரு நிறுவனத்தில் தனிப்பட்ட கருத்துக்களையோ அல்லது குழுசேர் கருத்துக்களையோ திறன்பட முறைபடுத்தப்பட்ட ஊடக வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய செயல்பாடானது மட்டுமே நிர்வாக வளர்ச்சி மற்றும் வெற்றியை முழுமையாக தீர்மானிக்கிக்கிறது.

முறைபடுத்தப்பட்ட தகவல் தொடர்பியலானது சாதக பாதகங்களை தெரிவுபடுத்தப்பட்டு அதற்கான தொடர்பியல் ஊடகத்தினை தேர்வு செய்கிறது.

வர்த்தக தொடர்பிற்கான உறுப்புகளாவன.,

  • அனுப்புனர்
  • பெறுனர்
  • செய்தி
  • மற்றும் ஊடகப் பொருள்
இவற்றையே கொண்டுள்ளன..,
இதில் அனுப்புனர் மற்றும் பெறுனர்கள் தங்களுடைய தகவல் பரிமாற்றாங்களை தேவைபடும் செய்தியின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி தேவையான ஊடகமாக வாய்மொழியாகவோ, கடிதமாகவோ அல்லது தொலை தொடர்பு சாதனங்களான தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்கின்றனர்.

இங்கே உடகப் பொருள் என்பது செய்தியினை கொண்டு சேர்க்கும் கருவியாகும்

தகவல் தொடர்பியலானது ஒரு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு இடையிலேயோ அல்லது மற்ற ஒரு நிறுவனத்திற்கு இடையிலேயேவோ  இருக்கிறது.

ஒரு நேர்த்தியான வர்த்தக தொடர்பியலானது பின்வரும் காரணிகளை கொண்டு அமையப்பெற்றிருக்க வேண்டியது அவசியம்.



  • தெளிவான நோக்கம்

எதற்கான தொடர்பியல் தேவைப்படுகிறது என்பதை முழுமையாக திட்டமிட வேண்டும். திட்டமிட்ட பின் (under writing)
Read more ...

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்..?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ..?
பாரினில் இனிமை வேறினியார்க்கோ..?

என்ற எம் பாட்டானின் தாகம் தீர்க்க முடியாமல் சிதறும் எம் இளம் தலைமுறையினை கண்டெழுந்த விளைவால் இந்த பதிவுவானது உங்கள் பார்வைக்கு இடப்படுகிறது...


வாணிபம் என்ற கொள்கையை கொண்டு, வந்தோரெல்லாம் ஆட்சி செய்திடவா எமது வந்தே மாதரம் பிறந்தது..?

கட்சிக்கொடிகளையும், சாதிக்கொடிகளையும் கையில் ஏந்திடும் வல்லமைகொண்ட எமது சகோக்கள் ஏன் தம் திறன் குறித்த சந்தேகம் கொள்கின்றனர்.?

வழி நடத்த ஆள் இல்லையே.., எம் வழியில் நடக்க ஆள் இல்லையே..,

எபோதும் இந்த இரு குறைகளையும் வார்த்தைகளாக்கியே வாழ்ந்து பழகி கழித்திடும் நாட்களில் ஏன் வரும் காலம் நிறம் மாற வண்ணம் பூச மறுத்தொதிங்கி போகின்றோம்..?

எபோதும் ஜப்பானையும்,, சைனாவையும் உதாரணங்களாக்கி பார்க்கிறோமே என்றெம்மை உதாரணமாக்க போகின்றோம்..?



படித்ததெல்லாம் பணம் பன்னுவதெற்கென்றால்..., இங்கு படிபோரெல்லாம் பணம் கொண்டவரா..?

பல்லமும் மேடும் சாலைக்கிருக்கட்டும், நாம் வாழ சாதிக்கு எதற்கு..?

தீக்கனலும் தம் தலை நிமிர்ந்திடவே ஆசைகொள்ளும்.. திடம் கொண்ட எம் இளைஞர்..?

தஞ்சையையும் , மதுரையையும் காலத்தால் வரலாறுகளாக்க முடியும்.. வாழ்ந்த மனிதர்களின் சுவடிற்கு நாம் தானே உற்தி சேர்க்க வேன்டும்..?


தமிழோ ஆங்கிலமோ தமிழாங்கிலமோ எதேனும் கற்றுக்கொள்.. இறுதியில் இறப்பது நீயாயினும் இருப்பது உன் உறவல்லவா..?
கற்பதை தானே கற்பிக்க முடியும்..?


தொலைக்காட்சிகளில் கழியும் விழாக்கால நிமிடங்களை என்றெண்ணி பார்க்கப்பபோகிறோம்..?

குழந்தையாய், குழந்தைகளுக்காய்,, என வேறுபட்ட கால சூழ்நிலைகளை சந்திக்கப்போவதென்னவோ உண்மைதான்.. இருக்கின்ற காலம் தனையும் செலவிட வேண்டா.., இருபதில் ஏதும் செலவிடலாமே...? எண்ணத்தை, கொண்ட தின்னத்தை,,, ஏதேனையும்...

ஆசைகளை அழிக்க முடியவில்லை குறைக்க கூடவா முடியவில்லை..?

இலச்சங்களில் கனவு,,  சேர முடியாவிட்டால் சோர்வு..

லஞ்சமும் வஞ்சமும் கண்களாகவும்..
சோம்பலும் ஆசையும் காதுகளாகவும்..,
பொய்மையை வாய் மொழியாகவும் கொண்ட காந்தி சொன்ன குரங்குகளாய் நாட்டினை பாவித்திருக்கிறோம்.


தேவை,,,,  சுதந்திர விழா அல்ல போராட்டமே...


விளித்தெழு இளைஞனே நாளைய சுதந்திர தினமாகட்டும் உண்மையானதாக இருக்கட்டும்


( ..............இன்னைக்கு மட்டுமாவது )


Read more ...

டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 3

                            வலை பதிவுகளின் வாயிலாகா டேலி பற்றின கருத்துக்களை தமிழ் மொழியில் தேடி கழித்த பின் சிறு துளி தாகம் தீர்க்கவே இந்த முயற்சி..

வனிகம், வலை பதிவு செய்யும் நண்பர்கள் தவறாமல் தகவல்களை உள்ளிட பின்னூட்டம் மூலமாக உதவுங்கள்..

டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 3

உண்மைய சொல்லனும்னா இதுதாங்க முதல் பகுதிங்க..
எபடியோ ரெண்டு பதிவுகளில் உங்களை வரவெச்சுட்டேன்.,,

டேலியோட எஸ்டிடி எல்லாம் நமக்கெதுக்குன்னு முந்தைய பதிவுகளில் திட்டி இருந்த நல்ல உள்ளங்களுக்கு மதிப்பு கொடுத்து இந்த பதிவுலயாவது கொஞ்சம் உள்ளே கை பிடித்து அழைத்து செல்ல முயல்கிறேன்...

 எப்படியோ டேலிய நம்ம கம்யூட்டர்ல இன்ஸ்டால் செஞ்சுட்டோம்ல.. இனி வேலைய பார்போம்...


  • டேலி 9 ( Tally ERP 9 )


டேலி பதிப்பை விண்டேஸ் ஸ்டார்ட் மெனு வழியாக ஓபன் செய்து கொள்ளுங்கள்.

Start ----> Programs ----> Tally ERP 9


டேலி முகப்பு பக்கம் தோன்றும் இதனை கேட் வே ஆப் டேலி (Gateway of Tally ) என்பர்.

http://www.PaisaLive.com/register.asp?3951109-5534411

கேட் வே ஆப் டேலியானது (Gateway of Tally ) பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் வலது மர்றும் இடதுபுறமாக பிரிக்கப்பட்டிருக்கின்ற இரு பகுதிகளில் தான் நமக்கு விருப்ப உள்ளீடுகளை செய்யபோகிறோம்..

கேட் வே ஆப் டேலியின் (Gateway of Tally )  இடதுபுறம் உள்ள பகுதியில் நமது கம்பெனியின் தொடக்க விவரங்களை பார்வையிடுகிறோம்.. முதலில் நமது கம்பெனியின் தொடக்க விவரங்களை உள்ளிட வேண்டுமல்லவா..? அதற்கு தான் கேட் வே ஆப் டேலியின் (Gateway of Tally ) வலது புறமாக உள்ள கம்பெனி (Company Info. ) இன்போ மெனுவை பயன் படுத்தப்போகிறோம் ..


படத்தின் மீது கிளிக் செய்து அளவை பெரிதாக்கி பார்த்து கொள்ளுங்கள்



    கம்பெனி இன்போ மெனுவில் (Company Info. ) உள்ள கிரியேட் கம்பெனியை கிளிக் செய்வதின் மூலமாக கம்பெனி கிரியேசன் (Company Creation )உள்ளீடு பட்டையை பெறலாம். இதில் உங்களுடைய கம்பெனியின் விவரங்களை கொடுத்துக்கொள்ளுங்கள்.


படத்தின் மீது கிளிக் செய்து அளவை பெரிதாக்கி பார்த்து கொள்ளுங்கள்

    ( Company Creation ) கம்பெனி கிரியேசன் பட்டையில் பட்டையில் கெட்கபடும் தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக என்டர் கீயை உபயோபடுத்தி கொடுங்கள் இறுதியாக என்டர் கீயை சொடுக்கும் போது எளும் குட்டி பெட்டியில் எஸ் - ஐ சொடுக்கி உங்களுடைய கம்பெனனி கிரியேசன் வேலையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.

    இபோது உங்களுடைய கேட் வே ஆப் டேலி பக்கமானது இடது புற பட்டையில் உங்கள் கம்பெனி பற்றின விவரங்களை தெரிவித்து உன்களை கம்பீரப்படுத்துமே...?

     ம்ம்ம்.. எப்படியோ கிரியேட் பன்னிட்டோம்.., அது சரிங்க ஏதவது விபரங்களை மிஸ் பன்னிருந்தா ..? அல்லது தவறாக கொடுத்துவிட்டிருந்தால் அதனை சரிபடுத்த வேண்டுமல்லவா..? அதற்காக.,,


    உங்களது கீபோர்டில் உள்ள F3 கீயை அழுத்துங்கள் (அல்லது) கேட் வே ஆப் டேலியின் வலது மூலையில் உள்ள கம்பெனி இன்போ என்பதை சொடுக்கி வரும் மெனுவில் உள்ள ஆல்டர் என்பதை சொடுக்கி தங்களது கம்பெனி கிரியேசன் பட்டையில் தேவையான தவல்களை உள்ளிடவோ அல்லது மாற்றமோ செய்துகொள்ளுங்கள்..


    குறிப்பு : 
  • கம்பெனி கிரியேசன் பட்டையில் தேவை என்றால் பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளலாம்.. 
  • " ESC  கீ " உபயோகப் படுத்தி முன்தைய மெனுவிற்கு செல்லலாம்


    கம்பெனி இன்போ வில் அமைந்துள்ள மெனுக்களின் பயன் குறித்த விபரங்களை தெரிவுபடுத்திக்கொள்ளுங்கள்..

  • Select Company

Allows you to Select or load a company.
  • Connect Company

Allows you to Connect Company on Tally.NET
  • Disconnect Company

Allows you to Disconnect Company from Tally.NET
  • Shut Company

Allows you to shut a company.
  • Create Company

Allows you to create a Company.
  • Alter

Allows you to alter a company.
  • Security Control

Allows you to create Security Levels and users & passwords.
  • Change TallyVault

Allows you to secure the data by providing a TallyVault password.
  • Split Company Data

Allows you to split company data across multiple period
  • Backup

Allows you to take a backup of the company data.
  • Restore

Allows you to restore a data backup.


    டேலி பற்றின சந்தேகம் இருந்தா தயங்காம கேளுங்க.., யாருகிட்டயாவது கேட்டு பதில் சொல்லுறேன்..

    அடுத்த பதிவை படிக்கும் முன் உங்களது கம்பெனியின் கணக்கு பதிவியளுக்கான விவரங்களை முன்னறே மனதினில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..

வெற்றிகரமான வியாபார காந்தங்களே...!

      தொழிலில் நேர்மை வேனும்... கல்லாவுல காசு சேர்க்கும் போது கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்கனும்னு.. அண்ணன் மமுட்டி சொன்னதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கங்க... நாம ஒவ்வொரும் செய்யும் சிறிய தவறு தான் இன்னைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் நமது இந்தியாவின் மதிப்பை இழக்க வைக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்..

http://www.PaisaLive.com/register.asp?3951109-5534411

     மொதல்ல தனி மனிதனாக நம்மைத் திருத்திக்கொண்டு பிறகு மற்றவரை குறை கூறுவோம்..

இந்த இனிய பொன் சுதந்திர வாரத்தில் விடியளை எதிர்நோக்கி காத்திருக்கும்
உங்கள் அன்பன்....

Read more ...

சக்க போடு போடு ராஜா.. உன் காட்டுள மழை பெய்யுது..

" பெருசா யோசிச்சா தான் சாதிக்க முடியும் " நீ கண்டிபா சாதிப்பே.. பெருசா யோசி பீமா... சுட்டி டிவி ஜக்கி சான் பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போ ஜூலி பீமா கிட்டே இததான் சொன்னா.. உடனே கிளிக் ஆச்சு நாமும் டிரை பன்னித் தான் பார்ப்போமே.. அப்டினு தான் கொஞ்ம் நடைய மாத்தலாம்னு இந்த பதிவு...


  தொழில் எதுவாயினும் செய்யும் தனிதன்மை தானே வெற்றியை தீர்மானிக்கிறது..?

ம்ம்.. சரிங்க.,,,,

        என்னக்கா வூட்டுல இவ்லோ பெரிய கூட்டம்..?

   எங்கூட்டுக்காரரோட தம்பி பையன் அருணு எவனோ கூறு கெட்டவன கூட்டிட்டு வந்து சோப்பு விக்கெரேன் சீப்பு விக்குரெனுட்டு அக்கப்போரு பன்னிட்டிருக்கன்டி.. நானே விபரம் தெரியாமத் தான் பார்த்திட்டு இருக்கேன்ற இவ வேற...

( மொத்தமாக ஆறு பிளாஸ்டிக் சேரு. அதுல ஐந்துபேரு.. அப்படியே திண்ணையில வெத்தலைய கொத்துனபடி ரெண்டு பெருசுங்க சகிதமா இருக்குற இந்த சுச்சுவேசன் சூலூரை தாண்டி ஒரு பாப்பம்பட்டி கிராமமும்னு வைச்சுக்குவேமே..)



    ஏம்ப்பா அருணு எங்க பெரிப்பா ஊர்ல நிறையா பேர தெரியும்னு டெமோ காட்டரதுக்கு என்னைய கூட்டிடு வந்தே பச்ச தண்ணியாவது கண்ணுல காட்டுப்பா. (...இவருதாங்க மாசம் அறுபதாயிரதுக்குமேல சம்பாதிக்குற சீனியர்  MLM பிஸினஸ் மேனுங்க.. பேரு சத்ய மூர்த்தி )


    பொருங்க சார்.. முதல்ல நீங்க புராடெக்ட்ட பத்தி எதையாவது ஒலரி எனக்கு கீழ எவனையாது ஜாய்ன் பன்னி விடுங்க அப்பரம போகும் போது கவனிக்கறேன்..

அடப்போபா.. நானும் நாலு மணி நேரமா கட்டம் எல்லாம் போட்டு காட்டுரேன் இருக்கிற நாலு பேரும் அவங்க அவங்க ஜோலிய தானே பாக்குராங்க..

   அதெல்லாம் எனக்கு தெரியாது என்னை சேர சொல்லும் போது என்ன சொன்னிங்க நீ சேர்ந்தா மட்டும் போதும் உனக்கு கீழ ஆட்களை நானே போட்டுக்கரேன்னிங்க இப்ப என்னடான்னா எனையவஏ புடிக்க சொல்லுரிங்க.., அப்பவே இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னேன்.. கேக்கல.., அனுபவிங்க.., இல்லைன நான் கட்டுன காசயாது திருபி கொடுங்க..

அட நீ வேற..,

ஏங்க எல்லோரும் இங்க கவனிங்க..,

அம்மா சலவைக்கு போட்டதெல்ல கொண்டாந்திருக்கேன்.. ( இது டோபி கோபி )

வாடா வாடா.. காலைலயே தரேன்னியேடா.. ஏ லேட்டு....

என்னம்மா பன்றது., பொன்டட்டிக்கு உடம்பு சரில்ல அதானுங்க...   இதென்னங்மா யாரு அந்த வாத்தியாரு வட்டா வட்டமா போட்டு காட்டிட்டு இருக்காரு..

அவரு சோப்பு விக்கரவன்டா கோபி...

அம்மா எனக்கு சலவை பன்றதுக்கு கிடைக்குமாம்மா..?

அவன்கிட்டயே கேளு..

சாரே... இந்தா சாரே... எனுங்கோ வாத்தியாரே...

வாத்தியாரா ..?  சொல்லுங்க...,

எனக்கு சோப்பு வேனுமுங்க... நீங்க விக்கரிங்கலாமா எனுங்க வாத்தியாரு தொழில்ல வருமானம் போதலிங்களா..?

உங்க பேரு என்னங்க..

கோபிங்க சாமி..

மிஸ்டர் கோபி.., நீங்க தப்பா நினைச்சுட்டிருக்கீங்க.. நாங்க தொழில் வாய்பு மூலமா லட்சக்கணகுல பணம் சம்பாதிக்க வாய்பை ஏற்படுத்த வந்திருக்கோ.. இது வெறும் சோபு விக்கிற கம்பெனி அல்ல.. ஏன் நீங்க கூட மாசம் லட்சத்துக்கும் மேல சம்பாதிக்களாம்..,

அட டே இன்சூரன்சு கம்பனியா..? பொலப்பு கெட்டவங்கய்ய .. எம் பொலப்ப வெற கெடுக்கப்பாக்குறீங்களா..?

நோ.. நோ.. நாங்க அன்றாட யூஸ் பன்னுற பொருட்கள் மூலமா வருமானம் வர வெபோம்... உங்க செலவையே வருமானமா ஆக்கிடுவோம்..

ஆமா கிளிச்சிங்க... ஏன்ய உங்களுக்கு வேற வேலையே கிடைக்கிலயா..
ஏன்சாமி எம் பொலப்புல மண்ணல்லி போட பாக்குரிங்க.. இருக்குரத விட்டுட்டு பறக்கறதய புடிக்குறதூ.. ஆள விடுங்க...

இல்லை கோபி...

அட போங்க சாமி.. என் கழுதைய விட மோசம நானு வேலை பாக்குறேன் சல்லி காசு கூட பாக்க முடியல.. லச்சமாம் கோடியாம்...

நான் கூட பேங்க்ல பத்தாயிரம் சம்பளத்தில இருந்தேன். இப்ப பாருங்க மாசம் அறுபதாயிரதுக்கு மேல சம்பாதிக்கிறேன்..

அட நிஜமாங்களா...?

............

............
............
............
............


கண்டிபா எல்லாமே சாத்தியம் தாங்க.. என் பெரு கோபி நான் கூட ரென்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சலவை தொழி தாங்க செஞ்சிட்டு இருந்தேன்...

இப்ப......



( காலம் மாறலாம், கொண்ட காட்சிகள் மாறுமா..?)








Read more ...

டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 2

அக்கவுண்டிங் சாப்ட்வேர்களில் டேலியின் பங்கானது எத்தகையது என்பதை இனி வரும் பகுதிகளில் முழுமையாக தெரிந்துகொள்வோம். அதற்கு முன் டேலி (TALLY) கத்துக்கலாமா என்றதுமே ஆவலுடன் தளத்திற்கு வந்து பொக்கிசமாக பின்னூட்டமும் அளித்து என்னை உற்சாகப் படுத்திய உள்ளங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பகுதியில் எனக்கு தெரிந்த வரையில் முழுமையாக விவரிக்கிறேன்.. தவறான கருத்துக்களாக இருப்பின் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக கருத்துக்களை பறிமாறிக்கொள்வதின் மூலமாக சிறந்த இடுக்கையினை நாம் தர முடியும்.. சரி சார் விசயத்துக்கு போவோம்..

ஆரம்ப கட்ட டேலி சாப்ட்வேர் பற்றின எண்ணமானது, மிகுந்த கீ போர்டு பங்சனாகவே இருந்த காரணத்தினால் டேலி கத்துக்கொள்ளும் ஆர்வமானது ஆடிட்டிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் தொடர்பான பணி வாய்ப்பில் இருப்போரும் பணி தேடுவோருமே டேலி கற்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். பிறகு டேலியானது தனது அசூர வளர்சியில் சாதரணமானவர்களும் ஒரு கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதற்கு ஒப்பாக டேலி கற்றுக்கொள்ளும் படி டேலி (TALLY) தனது ஆளுமையை காட்டத்தொடங்கி விட்டது..




டேலி (TALLY) சாப்ட்வேரின் சிறப்பம்சங்கள் :-


  • டேலி கையாளுவதற்கு எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது
  • அக்கவுண்டு ஸ்டேட்மென்ட் பிரிண்ட் செய்வது சுலபம்
  • ஈ மெயில் மூலம் பறிமாற்றம் செய்யமுடியும்
  • டிரையல் பாலன்ஸ் மற்றும் பிராபிட் & லாஸ் 
  • பில்லில் கம்பெனி லோகோ மற்றும் விபரங்களை பதிவு செய்யலம்
  • TAX தொடர்பான திட்ட அறிக்கைகளை எளிய முறையில் பதிதல் முதலான பல கூறுகளை உள்ளடக்கி செயல்படுகிறது..
டேலி பதிப்புகள் விபரம் (TALLY VERSIONS) 

  • டேலி 4.5  ( TALLY 4.5 )
அக்கவுண்ட்ஸ் தொடர்பான பதிபுகள் மட்டுமே இதில் இட முடியும். மேலும் 4.5 ஆனது டாஸ் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியதால் கீபோர்டு கட்டளைகளை உள்ளடக்கியதாக இருந்தது..

  • டேலி 5.4 ( TALLY 5.4 )
4.5 ன் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவமே 5.4 ஆகும். இது graphic interface version ஆக அமைக்கபட்டதுடிதன் மூலம் தனது சாம்ராஜ்ஜியத்தை பரப்ப தொடங்கியது.

  • டேலி 6.3 ( TALLY 6.3 ) 

அடுத்த பதிபான 6.3 முற்றிலும் விண்டோஸ் ஆபரேட்டிங்கை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. இதில் வேகமாக அச்சிட்டு பெறும் வகையிலாக அமையபெற்றது மேலும் VAT மெருகூட்டப்பட்டு வெளிவந்தது.


  • டேலி 7.2  ( TALLY 7.2 ) 

டேலி 7.2 கூடுதல் வசதிகளுடன் வேகமாக இயங்க்கும் வண்ணம் அமைக்கபெற்றது.


  • டேலி 8.1  ( TALLY 8.1 ) 

புதிய தரவுக் கட்டமைப்பை உள்ளடக்கியதாக டேலி 8.1 வெலிவந்ததி இது POS மற்றும் ( Payroll )  ஊதிய விபரபட்டியல் சேர்க்கப்பட்ல்டிருந்தது. இது போதுமான வரவேற்பை பெற முடியாததற்கான காரணம் தடையற்ற சேவையை தர இயலாமல் போனதே ஆகும். 


  • டேலி 9   ( TALLY 9 ) 

டேலி அரக்கன் தனது அனைத்து சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுக்குள் கொண்டு  தனது புதிய மற்றும் சிறப்பான பதிப்பாக டேலி 9 (  al so Tally ERP ) வெளிவந்தது. தனது அனைத்து பதிபுகளையும் இதன் மூலமாக நிறைவடையச் செய்தது.. விற்பனையாளர்கள், சம்பளபட்டியல், FBT, TDS, e-TDS  தாக்கல் வசதிகள் மற்றும் என்னிலடங்கா பல வசிதிகளை தனக்குள் உள்ளடக்கியிருந்தது. இது போதுமான ஆதரவை பெற்று மேலும் மெருகூட்டப்பட்டு Tally ERP ஆக வரவேற்க்கப்படுகிறது....


டேலி சாப்ட்வேர் :



  1. சிங்கில் யூசர் ( Single User )
  2. மல்ட்டி யூசர் ( Multi user )
குறு தொழில் மற்றும் சிறிய அளவிலான வியாபார பரிமாற்றங்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் சிங்கில் யூசர் பேக்கையும் பெரிய மற்றும் அதிகப்படியான கணக்கு பதிவியலில் ஈடுபடுவோரும் மல்ட்டி யூசர் பேக்கையும் உபயோகப்படுத்துகின்றனர்.


டேலி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் முறை :

தேவையான வகையிலான டேலி சாப்ட்வேரை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவும். ( எப்படியும் நாம டிரையல் வெர்சனை தானே இன்ஸ்டால் பன்ன போறோம்ன்றவங்களுக்கு பிரச்சனை இல்லை மத்தவங்க http://www.tallysolutions.com என்ற தளத்திற்கு சென்று வாங்கிக்கொள்ளவும். ) 


Installing Tally
சிடி டிரைவ் அல்லது போல்டரை ஓபன் செய்து
  1. கிளிக் INSTALL.EXE from the CD

அல்லது
  1. Click START from Windows
  2. Select RUN
  3. TYPE <CD drive>:\INSTALL
  4. Press ENTER
இபோது Tally 9 Setup Wizard is தெரியும்

கீழ்கன்டவாரு செயல்படவும்



1. Click Next to continue

2. The Installation wizard displays the License Agreement



3. Read the license agreement before you proceed. Click I Agree to continue. Click I Decline to stop the set-up or click Back to go to the previous screen



4. In the Installation screen, you may accept the suggested directories. Else, click Change Application Directory or Change Data Directory or Change Configuration Directory orChange Language Directory to change the respective directory paths. Use Tab or the mouse to change the path in any of the directories
Quote:
Application Directory

The Tally program files reside in this directory.


Data Directory

The Tally data resides in this directory.

The default directory where data is stored is C:\Tally\Data. To change click on Change Data Directory button and enter the new directory.

When Tally is installed in a directory with an earlier version, it detects and retains the data configuration path of the previous installation.


Configuration Directory

Tally configuration files reside in this directory.

You can specify the path of the directory where the configuration files should be saved. It is usually the same path as the Application Directory.


Language Directory

Tally Language files (.dct) reside in this directory.

You can specify the path of the directory where the Language files will be maintained. It is usually the same path as that of the Application Directory.

---------------------------------------------------------------------------------------------------------------------------

Note: If you are a Multi-License User, select the Run Tally License Server at Windows Startup check box
5. Click Install Operating System Language Support to enable Language Support

6. Select your Country name in Country Selection

7. Select the Initial Startup Language from the list. When you start Tally for the first time, Tally will appear in the language selected as the Initial Startup Language



8. Click Install

The installation progress status is displayed as shown below.



9. Insert Windows CD to install language or Browse for the i386 folder in your system
Quote:
Note: You will be prompted to install the i386 language support folder only if it is not available in your system
10. Click OK to install Language Support

11. Click Finish to complete Setup





அவ்வளவு தாங்க இப்ப நீங்கள் உங்களது கணிணியில் டேலி மென் பொருளை முழுமையாக இயக்க முடியும்



எபடியோ இன்ஸ்டால் பன்னிட்டோம்ல...  அப்டின்னு காலர தூக்கி விட்டுட்டுக்கோங்க.. அப்படியே கம்யூட்டரை சட் டவுன் பன்னிட்டு சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.... ம்ம்ம்ம்




Read more ...

டேலி (TALLY) கத்துக்கலாமா..?

  ஒவ்வொரு தொழில் முனைவேருக்குமான முக்கிய தகுதிகளில் அக்கவுண்ட்ஸ் கீப்பிங் எனப்படும் கணக்கு பதிவியலின் சிறப்பம்சங்களை ஒரளவேனும் தெரிந்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

    பொதுவாக பெரிய நிறுவனங்கள் தனது கணக்கு பரிவர்த்தனைகளை தனி டிபார்ட்மென்ட் கொண்டு செம்மையாக செய்துவிடுகின்றன.. ஆனால் சிறு தொழில் நடத்தும் வியாபர நண்பர்கள் சில சமயங்களில் தனது வியாபார பரிவர்த்தனைகளை சரியாக நிர்வகிக்காத காரணங்களாலேயே தனது வெற்றி வாய்பினை தவறவிடுக்கின்றனர். அத்தகைய சூழ்நிலைகளில் அடிப்படை கணிணி அறிவு கொண்டிருந்தாலே டேலி ( Tally) எனப்படும் அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேர் துணைகொண்டு தனது வியாபர பரிவர்த்தனைகளை தாங்களே மிகவும் எளிய முறையில் கையாளலாம். எனவேதான் அக்கவுண்ட்ஸ் கீப்பிங் பற்றிய முழுமையான தகவல்களுக்காக இந்த பதிவிடப்படுகிறது., பொதுவாக எனக்கும் அக்கவுண்ட்ஸ்க்கும் துளியும் ஒத்துபோகாது.. இருப்பினும் உங்களுக்காக நானும் பழகப்போறேன்.. என்ன பழகலாமா....?


  • டேலி  (TALLY )
டேலியானது வியாபர பரிவர்த்தனைகளை முழுமையாக கையடக்கக்கூடிய குறு / பெறு வணிக நிறுவனங்களுக்கான கணிணி வழி கணக்கு பதிவியலின் பயன்பாட்டு சேவையே ஆகும்.  (அதாங்க இது ஒரு அக்கவுண்டிங் சாப்ட்வேர்.) டேலி மென்பொருளை வடிவமைத்தவர்கள் இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனமாகும். கிட்டத்தட்ட 94 நாடுகளில் டேலி மென்பொருளானது உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமே நாம் டேலி பற்றின பெருமைகளை நன்குணரமுடிகிறது. பொதுவாக இதன் எளிமையான உருவாக்க முறையினாலேயே பெரும்பாலன ஆதரவை டேலி பெற்றுள்ளது. ஆரம்பகட்டத்தில் டேலி மென்பொருளானது கீபோர்டு மட்டுமே உபயோகப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அதன் அசூர வளர்ச்சியின் காரணாமாக பல பல புது முன்னேற்றங்களை கண்டு இபோது தனது புது பாரிமானத்தில் மிளிர்கிறது.. 

   சரி டேலி பழகும் முன் அக்கவுண்ட்ஸ் பத்தி முதல்ல கொஞ்சம் தெரிஞ்சுக்களாமா..?

கணக்கு பதிவியல் (Accounting) :
     பொருளை வாங்குதல், விற்றல் மற்றும் நிதி நிலை தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரு வித பக்குப்பாய்விற்குட்படுத்தப்பட்ட முழுமையான தீர்வுக்கு கணக்கு பதிவியல் என்று பெயர் (....க்கும் தெரியாக்கும்)
சரி, அத்தகைய கணக்கு பதிவியல் தொடர்பான நமக்கு தேவையான சிறிய ரூல்ஸ் என்ன தெரியுமா..?

  • Debit ............. > the Reciver
  • Credit .............>  the Giver


டெபிட்டார் (Debtor) எனப்படுபவர் பெறுபவராகவும், கிரடிட்டார் (Creditor) எனப்படுபவர் கொடுப்பராகவும் கருதபடுகிறார்.

முதலில் முழுமையான கணக்கு பரிவர்த்தனைகளை தொடங்கும் முன் ஜர்னல் என்ட்ரி எனப்படும் தொடக்க குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.. இன்னாருக்கு இன்னா பொருளை வித்தேன் வாங்குனேன்.. இதெல்லாம் தாங்க..

பிறகு.,

லெட்ஜர் கிரியேட்டிங்
வவுச்சர் கிரியேட்டிங்
பாலன்ஸ் சீட்
பிராபிட் & லாஷ் எல்லாம் பர்த்துக்கலாம்..



கணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்


  • a/c - account - கணக்கு
  • B/S - Balance Sheet - ஐந்தொகை
  • b/d - brought down - கீழ் கொண்டு வரப்பட்டது(மீதி)
  • c/f - carried forward - முன் கொண்டு செல்லப்பட்டது(மீதி)
  • Dr - debit - பற்று
  • Cr - credit - செலவு
  • G/L - General Ledger - பொது பேரேடு
  • P&L - Profit & Loss வருமான செலவீன கணக்கு
  • TB - Trial Balance - பரீட்சை மீதி


சரிங்க தூங்க போய்டாதிங்க பொறுமையா ஒவ்வொரு பதிவிலும் தெரிஞ்ச வரைக்கும் சொல்லரேன். தெரிஞ்சத சொல்லுங்க...
Read more ...

இலச்(சிய)சங்களை எளிதாக அடையலாம்...


பல நூறு கோடி ரூபாய்களை எளிதாக சம்பாதிக்க எளிதான வழி என்னவென்று தெரியுமா..?

தேடி தேடி அழுத்தே போய்விட்டது என்று புலம்பல்களை கேட்டுக்கொண்டே இருந்தால் போதுமா..?

இதோ இலச்சங்கள் உங்கள் கைகளில புரளப்போகிறது..
ஆம், இனி நீங்களும் கோடீஸ்வரர் தான்..

இருங்க அவசரப்ப படாதிங்க முதலில் ஒரு வெற்றிக் குறி சொல்லிட்டு ஆரம்பிப்போம்..

என்ன ரெடியா..?
ம்,,
நான் பிஸினெஸ் பன்னப் போறேன்..
அதுல நிறைய சம்பாதிக்கப் போறேன்..

ஓகே.. இனி விசயத்துக்கு வருவோம்..

என் நண்பர் ஒருவர் என்னை பார்க்க நேற்று இரவு வந்திருந்தார்.. ( ஆபிஸ் மூடிய பிறகு வந்திருக்கலாம், தபிச்சிருப்பேன்,,, ம்ம்ம்ம் ). அருண் எனக்கு ஒரு உதவி செய், எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு ஒரு வழி சொல்லு என்றார். விசயம் என்ன என்றேன்.

காலேஜ் முடிச்சு இரண்டு வருசம் ஆச்சு, இன்னும் என்த வேலையும் செட் ஆகல, நானும் எத்தனையோ தொழில் மற்றும் வேலைக்கு போய் பார்துட்டேன், ஆனா எனக்கு எதுமே சரியா அமையல, என்த வேலையும் எனக்கு முழுமையான ஆதாயத்தை தர மாட்டிங்குது, எவ்லவோ முயற்சிக்கு பின் இப்பதான் ஒரு தொழில் செட் ஆயிருக்கு.. இதுல நான் எப்டியும் ஜெயிச்சு காட்டிருவேன்.. பல லச்சங்களை ஒரிரு வருடங்களில் சம்பாதிக்கப் போறேன்.. என்றார்.

சரிப்பா நல்ல விசயம் தானே..? நான் என்ன உனக்கு உதவனும், என்ன குழப்பம் உனக்கு..?

என்மேல் எனக்கு நிறைய தன்னப்பிக்கை எனக்கிருக்கு.. அது போலவே நான் இப்ப தேர்ந்தெடுத்திருக்கிற பிஸினஸ் மேலயும் எனக்கு நம்பிக்கை நிறைய இருக்கு.. நான் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைக்காரணிகள் அனைத்தையுமே நான் செஞ்சாச்சு,, ஆன எனது நெருங்கிய உறவினர் ஒருவர் என்னை திடிரென்று அழைத்திருந்தார். அவர் மிகவும் பிரபலமான தொழில் அதிபர் ஆவார், அவர் தனது கம்பெனியை என்னை கவனித்துக்கொள்ள சொல்கிறார். எனக்கு முழு அதிகாரமும் அவர் தனது நிர்வாகத்தில் கொடுத்து விடுவதாகவும், ஒரிரு வருடங்களில் தனியாகவே ஒரு கம்பெனியை உனக்காக வைத்து தருகிறேன் நீயே கவனித்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார். இபோது எனக்கு மிகப்பெரிய குழபம் என்னவென்றால், நான் எனது உறவினரிடமே செல்லட்டுமா.. அல்லது எனது சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதா.. என்றே ஆகும் என்றார்.

சரியான முடிவு என்ன என்பதை அறிய முடியவில்லை,, இரண்டுமே எனக்கான சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. என்ன செய்ய என்றார்.

சரி முதலில் குழப்பத்திற்கான காரணம் என்ன ..?
1.) சொந்த தொழில்
2.) சொந்தகாரர் தொழில்


1.) சுய தொழில் வாய்ப்பு :-


  • தொழியில் போதிய அனுபவம் இருக்காது,
  • ஏதேனும் தவறு நிகழ்வதாயின் முழு பொறுபையும் தானே சுமந்தாக வேண்டும்,
  • முதலீடு பற்றிய கவனம் மிக அவசியம்,
  • பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்,
  • கூடுதல் வேலைபழுவை சந்திக்க நேரிடும்,
  • உழைப்பிற்கான முழு ஆதாயத்தை பெற போதுமான பொறுமை மிக அவசியம்,
  • எத்தகைய கால சந்தர்ப்பத்திலும் பின்வாங்க கூடாது,
  • உற்பத்தி பொருளுக்கனா சந்தை படுத்துதலையும், அதற்கான விற்பனை முறையையும் சரியாக கையாள வேண்டும்,
  • தனக்கான களத்தினை அமைப்பதில் கவனத்துடனும் பாதுகாப்பான வழிமுறை அல்லது மாற்றுத் திட்டத்தையும் உடன் வைத்திறுத்தல் அவசியம் ஆகும்..
ஆக, இத்தகைய காரணிகளினை முழுமையாக அலோசித்துக்கொள்//.

சரி இரண்டாவது வாய்ப்பானது

2.) வேலை வாய்பு

  • முதலீடு பற்றிய அச்சம் தேவையில்லை
  • தேவையான அனுபவத்தை கற்பதற்கான நேரம் கிடைக்கும்
  • சிக்கல்களில் ஆலோசனைகளை பெற வழி உண்டு
  •  வருமானத்தை அடைவதிலான சிரமங்கள் பங்கு போட்டுக்கொள்ளலாம்
  • நமது நிர்வாகத்திறன் மட்டுமே நமக்கு சொந்தம்
  • எதிர்காலத்தில் நாம் வெளியேற்ற பட நேரிடலாம்
  • நம்பகத்தன்மையற்றதாகவே வாழ்வியல் நடைமுறை இருக்க கூடும்....
உங்களது பிறச்சனை என்னவென்றால், சரியான பணி வாய்ப்பாக இரண்டுமே இருக்கிறது. இதில் சிறந்த தொழில் எது என்பதை தீர்மானிக்க தேவையில்லை.. உங்களுக்கான களமானது உங்கள் கையிலேயே இருக்கிறது. 

" வாய்ப்பானது யாருக்கும் எளிதில் வருவதில்லை, அப்படிப்பட்ட வாய்பு வரும் போது அதை பயன்படுத்திக்கொள்வதில் தவறு நேர்ந்துவிடக்கூடாது "

எத்தகைய தொழிலையும் நாம் நினைத்தால் சிறப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும்.. உதாரனமாக வேலையே இல்லை தொழில் எதுவும் தெரியாது என்று புலம்பிய ஒருவன் ஒரு டிபார்ட்மென்ட் ஷ்டோருக்கு சென்றான், மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த அவன் சில நாட்களிலேயே அங்கு வினோதம் ஒன்றை கண்டான். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தினம் தினம் விற்று விடுவதையும்,  இன்ன பிற துணி வகைகளும் விற்பனையில் வெகுவாகவும் ஆவதை கண்டான். ஆனால் நுலைவாயிலில் போடப்படும் மேட் என்னும் கால் மிதிகளை ஒரு சிலர் மட்டுமே வாங்குவதையும் கண்டான்.
மேலாளரிடம் காரணம் கேட்டதற்கு இங்கு வருபவர்களின் நோக்கம் மளிகை மற்றும் அவர்களுக்கான துணி மற்றும் வாசனை திரவிங்கள் போன்றவற்றை வாங்கும் நோக்கத்துடனே வருகிறார்கள், இதைப் போன்ற கால்மிதி மட்டுமே வாங்க வேண்டும் என்ற என்னத்துடன் யாரும் வருவதில்லை, வந்த போது கண்ணில் பட்டால் மட்டுமே இது போன்ற சில பொருள்களையும் சேர்த்து வாங்க்லுகின்றனர் எனவே தான் எளிதில் விற்பனையாகத இது போன்ற பொருட்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை என்றார்.

அந்த மாதம் சம்பளம் வாங்கிய அவன், மொத்த தொகைக்கும் அங்கேயே மளிவான விலையில் மேலாளரிடம் பேசி அந்த கால் மிதிகள் தொகைக்கான அளவில் வாங்கினான்.. பிறகு வீதி வீதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்த கால்மிதிகளை விற்பனை செய்தான்.   கால்மிதியை மட்டுமே வாங்க வேண்டும் என்று டிபார்ட்மென்ட் ஷ்டோருக்கு செல்லாத கூட்டம், வீட்டிற்கே வந்ததும் அதை வாங்க தவறவில்லை,, எனவே மொத்த காய் மிதியையும் எளிதாக விற்றான். அதில் சொற்ப இலாபம் அடைந்த அவன் வந்த வருமானதை மேலும் முதலீடு ஆக்கினான்.. தற்போது அவன் ஒரு சிறிய தொழிற்சாலையில் சில பேரை வேலைக்கு வைத்துக்கொண்டு தனது வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளான்..

   நம் பார்வையி தான் அனைத்துமே இருக்கிறது.. நீ உனது உறவினரிடம் சென்று வேலை செய்தாலும் நீயே சொந்தமாக தொழில் செய்தாலும் அதில் உனக்கான தனித்தன்மையை ஏற்படுத்து, என்னைபொறுத்த வரையில் நீ தேர்ந்தெடுத்த தொழிலையே நீ செய்வது மிகவும் உனக்குள்ளான தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடும், இரண்டுமே சிறந்தது என்றாலும் முதலாவாதாக இருப்பதையே நீ செய்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றேன்.

நண்பரும் சரி என்றார்;

சரி விஷயத்திற்கு வருவோம்..,  முதலில் சொன்ன அந்த கோடிஸ்வரனாக ஆக என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா..?


  • எதாவது ஒரு கட்டத்தில் தெளிவாக ஒரு முடிவு எடுங்கள்
  • அதற்கு செயல் வடிவம் கொடுங்கள்


 அவ்வளவு தாங்க, நீங்களும் கோடிஸ்வரர் தானே..

" கேள்விக்குறி (?)+  கேள்விக்குறி (?)  =  கேள்விக்குறி (?)
வேள்விக்குறி (?)  + கமா (,) = ஆச்சரியக்குறி (!) "



நல்லதோ,  கெட்டதோ யாராவது கருத்து சொல்லுங்கப்பா..

நன்றி!

Read more ...

சாதனை நாயகர்கள்


வியாபார உலகில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் அனைவருமே மனதினில் எபோதும் வைத்திருந்த உறுதி யாதெனில் விடா முயற்சியே ஆகும்.

எத்தகைய சூழ்நிலையிலும் தாங்கள் எடுத்துக்கொண்ட எண்ணப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல்
வெற்றி பெறும் வரை சமூகத்திலும், சக நணபர்களிடமும் கூட எத்தனையோ அவப்பெயர்களை தாங்கிக்கொண்டு சாதித்துகாட்டியவர்களே இன்றைய சாதனை நாயகர்கள் ஆவார்கள்..

நம்மில் எத்தனையோ பேர் தன்னம்பிக்கை புத்தகங்களையும், சி.டி. களையும் தேடிச் சென்று வாங்கி ஆர்வமுடன் படிப்பதை பார்க்கின்றோம்.

" சரித்திரத்தை படிப்பவர்கள் யாவரும் சரித்திரம் படைப்பதில்லை ஆனால் சரித்திரம் படைத்தவர்கள் யாவருமே சரித்திரம் படித்தவர்களாவரே."

பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன, படித்து விட்டு வேலை இல்லை என்போரையும், படிக்காததால் வேலை இல்லை என்போரையும் கண்டுகொண்டே தானே இருக்கின்றோம்?

தன்னம்பிக்கையை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தேடல் என்பதை எப்போதும் மறவாமல் இருக்க வேண்டும். அனைவருக்குமே தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக ஜப்பானின் சுசிகியையும், ஆப்ரஹாம் லிங்கனையுமே தேடிப்படிப்பதில் தவறேதும் இல்லை.. ஆனால் நமது நெருங்கிய நண்பனின் அண்ணனையும், தூரத்து உறவினரானவரையும், ஏன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மனிதரையும் கண்டுக்கொள்ளாமலே இருக்கின்றோம்..?

ஆமாம் நாம் பெரும்பாலும் கையை கண்களுக்கு எதிரே மிக அருகில் பிடித்துக்கொண்டு காட்சியினை தேடிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை.

தினம் தினம் போராட்டங்களை சந்திதுக்கொண்டு நம் சக இளைஞர்களை பார்க்கின்ற போதே நமக்கான வழித்தடத்தினை நாம் அறிந்துகொள்ளலாம். எனக்கு தெறிந்த நண்பர் ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை செய்துவந்தார். மிக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவரை இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனது அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் கடன் பெற்று வாழ்க்கையோட்டிக்கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன் எனது அலுவலகத்திரற்கு வந்திருன்த அவரை கண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது டிரைவர் வேலையை செய்து கொண்டே பகுதி நேரமாக ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் முகவராக சேர்ந்து இரண்டு வருடங்களாக பலரையும் சந்திதித்து நிதானமாக தனது பணியினை செய்து வந்திருக்கிறார். இன்று என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு நட்சத்திர ஹோட்டலில் ட்ரீட் கொடுக்கும் அளவிற்கு தனது வளர்ச்சியை கண்டிருக்கிறார். நண்பரிடம் அவரின் வளர்ச்சிக்கான காரணம் கேட்டேன்..

எத்தனையோ இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன அவற்றுள் எந்த வித வேறுபாடும் பெரியளவில் இல்லை. அவற்றின் மதிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் தனித்தன்மையிலேயே அவற்றின் மதிப்பானது உயருகிறது. நான் முதலில் முகவராக சேர்ந்ததுமே என் நெருங்கிய நண்பர்களிடம் சென்றேன் அவர்கள் என்னை கண்டதுமே ஓட ஆரப்பித்தனர் காரணம் அவர்களை பாலிசி போட கேட்டதால், நாளடைவில் எனக்கே வெருப்பாகி விட்டது இருந்த வேலையும் கூட தள்ளாட்டம் கண்டது ஆனாலும் என்னிடம் தொழில் செய்யவோ மூலதனம் இல்லை எனவே எனக்கான வாசல்படி இதில் தான் உள்ளது " தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்..?" அதனால் மீண்டும் போராட துணிந்தேன் எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட எனது விசிடிங்கார்டை கொடுத்து விடுவேன். பஸ்சில் போகும் போதும், டீ சாப்பிடும் போது பக்கத்தில் இருப்பவர்களிடம் இப்படி எந்த சந்தர்ப்பத்தையும் நான் எனக்கான வழித்தடமாக மாற்றிக்கொள்ள தயங்கியதில்லை எத்தனையோ அவமானங்கள், கிண்டல்களை சந்திதேன் விளைவு இன்று கை நிறைய வருமானம் பார்க்கிறேன். என்னை சந்திக்க மறுத்த நண்பர்கள் கூட இப்போது அவர்களாகவே என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசுகின்றனர். இதற்காக நான் செயவிட்டது எனது நேரத்தையும் விடாமுயற்சியையும் மட்டுமே ஆகும். என்றார்.

ஆம்,, இது போலவே ஆம்வே நிறுவனத்தில் சேரும் படி என்னை அறிவுருத்திய நண்பரும்குட தனது இலச்சியங்களை இலச்சங்களாக்க பட்ட பட்டினை விளக்கியுள்ளார்..

இன்னும் எத்தனையோ சக நண்பர்ககள் தங்களது வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் அது எத்தகைய தொழிலாக இருந்தாலும் அவர்கள் தன்னையும் தன் தொழிலையும் நம்பிக்கையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மைப்பாட்டை அறியலாம்.

ஆம்வே தவறானது, இன்சூரன் ஏஜன்ட் ஏமாற்று பேர்வலி என்று வசைபாடும் கூட்டத்திற்கு நடுவே இவர்களும் தனது வெற்றியை பதிய வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்..?


தயக்கத்தை விட்டொழியுங்கள்...
தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்...
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் முழுமையாக ஈடுபடுங்கள்...

வெற்றி என்பது எளிதில் கிடக்காது என்பதை உணருங்கள்....
Read more ...

வெற்றி என்பது தொட்டு விடும் தூரத்தில் தான்...

    இலக்கை அறிந்தவனும்...
    விளக்கை ஏந்தியவனும்...
    இருளுக்கு பயப்பட தேவை இல்லை..


தனது இலட்சியங்களை நிர்னயித்து அதனை சென்றடயும் பாதையை தேடிக் கண்டுபிடித்து சரியான வழிமுறயில் செல்லும் போது நமக்கென்று நிர்னயிக்கப்பட்ட அந்த வெற்றியானது நிச்சயம் நமது வசம் வந்தடையும் என்பது நிர்சனமான உண்மையாகும்.


   எதையுமே முயற்சி செய்யாமல் வீணாக காலத்தை கடத்திவிட்டு எல்லமே பொய் என்பதெல்லாம் முட்டாள்களின் வார்த்தைகளாகும்.


   திட்டமிட்டு செய்யும் எந்த ஒரு செயலும் வீணாவதில்லை.
இங்கே தவறு நேறுவதுதாவது சரியான அனுகுமுறையை கண்டிராமல் இருப்பதாலேயே நேறுகிறது


   நாம் அன்றாடும் பார்க்கும் சக மனிதர்களின் வெற்றியையே நமது மனமாவது காணாமல் இருக்கிறது இதில் தன்னுடைய வெற்றியினை அடையும் வழியினை காண்பது என்பது எங்கனம் நடக்கக்கூடும்..


  அளவுக்கு அதிகமாக கனவுகாணுங்கள் அப்போது மட்டுமே உங்களுடைய வெற்றியை நீங்கள் அதிகமாக நெருங்க முடியும். ஆனால் காணும் கனவை அடைய அதைவிட அதிகமாக நீங்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவதுதான் மாபெரும் தடையாக இருக்கிறது.


   இன்றைய இளைஞர்களின் மாபெரும் சக்தியானது அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத வன்னம் அறியாமை இருளில் மூழ்கி இருப்பதே அவர்களின் தன்நம்பிக்கையை நிலைகுலைய செய்கிறது.


மாத சம்பளமே எனக்கு திருப்தியாக இருக்கிறது அல்லது என்னுடைய சம்பாத்தியமானது எனக்கு போதும் என்கின்றவர்கள் எத்தனை பேர்.../ எதாவது  ஒரு காரணத்தை வலியுருத்தி எல்லோருமே ஒரு தேடலை கொண்டிருக்கிறோம். எதிலுமே நமது முழு திருப்தி அல்லது நிறைவு என்பதை நாம் அடைவதில்லை..


  அளவுக்கு அதிகமாக ஆசை படுங்கள் அப்போது தான் ஒரு அளவுக்காவது அடைய முடியும் என்கின்ற ஒரு வாதம் ஒரு பக்கம், ஆசையை விட்டொளியுங்கள் என்பது ஒரு பக்கம், இதில் எந்த கருத்தை
நாம் எடுத்துக்கொள்கிறோம்../


வெற்றி என்பது ஒரு மாபெரும் மலை போன்றது அதை அடைய வியர்வை மட்டும் போதாது கூறிய கோடாரி போன்றதான அறிவினை துணையாக உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.  முழு மலையையும் அடைவது என்பது எளிதானதன்று..


சிறுதொழில் செய்யும் வியாபாரி ஒருவர் தன்னுடைய தொழிலில் திருப்தியுடன் இருக்கிறார்.
பல்லாயிரம் தொழிலாளர்களை ஆளுமை செய்யும் வணிகர் அழைந்துகொண்டே இருக்கிறார்.
இதில் எவர் மகிழ்ச்சியானர் என்பதை அறிய முடியுமா...


   எவன் ஒருவன் தன்னுடைய செயலில் பின்வாங்காமல் சரியான படி அதை தொடர்கின்றானோ அவன் சாதிப்பது நிச்சயம். எதையுமே தொடங்கும் முன்பு பலரிடம் ஆலோசனை கேட்கலாம் தவறில்லை.. தொடங்கிய பின்பு அதை வெற்றி கொல்வதை மட்டுமே மனமானது எப்போதும் சிந்திக்க செய்ய வேண்டும். இடையில் ஏற்படும் சிறு தோல்விகளால் மனம் சோர்ந்து
போகும்போது அதனை ஊக்கப்படுத்தும் பொறுப்பானது மிகவும் அவசியம் ஆகும்.



பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
Read more ...

ஷேர் மார்க்கெட் - அடிப்படை 1

பிளாக் எழுத தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே மிகவும் அதிக அளவில் ஆதரவு தெரிவித்த மற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கும் தொடர்ந்து இந்த தளம் வளர உறுதுணையாய் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து வரும் இந்தியாவில் நமது பொருளாதாரத்தை நிர்னயிப்பதில் ஷேர்மார்கெட் எனும் பெருங்கடலே முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த பெருங்கடலில் பல திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருந்தாலும் நமது நோக்கமானது வாசகர்கள் அனைவரும் ஷேர் மார்க்கெட் தொடர்பான சில அடிப்படை அறிவினை பெற வேண்டும் என்பது தான்.

இந்த பதிவானது அதற்கான அடிப்படை அச்சாரமே ஆகும்.

சரி விசயத்திற்கு போவோமா..........

ஷேர் ரேட் இன்னைக்கு ரொம்ப உயர்ந்திருக்கே ...
அடக்கடவுளே இன்னைக்கு இவ்ளோ ஷேர் இறங்கிருச்சே....


இது மாதிரியான வசனங்களை அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.../

என்னதாங்க அப்படி அதுல இருக்கு...

தெரிஞ்சுக்கலாம் வாங்க சார், அதுக்குதானே நாங்க இருக்கோம்..

ஷேர் மார்க்கெட் .


     பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமான உலகளவிய நடைமுறையினையே ஷேர் மார்க்கெட் என்கின்றோம்.


  பொதுவாக , அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்ற அல்லது தொடங்கப்பட இருக்கின்ற ஸ்தாபனத்தின் முதலீட்டிற்கான மதிப்பில் நாமும் லாப நோக்கில் பங்கு கொள்ளும் செயல்முறையே ஆகும்.

ஷேர் பரிவர்த்தனை Share Trading நடைபெறும் முறைகளாவன,
  • டிரேடிங் அக்கவுண்ட்
  • டிமேட் அக்கவுண்ட்

  • டிரேடிங் அக்கவுண்ட்
      டிரேடிங் அக்கவுண்ட் என்பது பங்குகளை வாங்க, விற்பதற்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிலையாகும். இதில் உங்களுக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளுகம் பங்குகளின் ஏற்ற இறக்கங்களை மையமாக கொண்டு இயங்குகிறது. அதாவது மிகவும் நம்பிக்கையான ஒரு நிறுவனத்தின சில பங்குகளை நீங்கள் வாங்க்/விற்க மேற்கொள்ளும் செயல்முறையினை குறிக்கிறது.

  • டிமேட் அக்கவுண்ட்
      இது உங்களது ஷேர் அக்கவுண்டிற்கான மூலாதாரன அக்கவுண்ட் ஆகும், இதனை மையமாக கொண்டே உங்களது ஷேர் ஆனது இயங்குகிறது. அதாவது உங்களின் தனிப்பட்ட பங்குகளை சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை ஆகும். இது உங்களது வங்கி கணக்கிற்கான செயல்முறைகளை போன்றது.

மேலும் ஷேர் மார்கெட் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்..

நன்றி 



    பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
    Get cash from your website. Sign up as affiliate
    Read more ...

    சுய வேலை வாய்ப்பு - பகுதி 1

                சுய வேலை வாய்ப்பு எனும் தலைப்பின் கீழ் சுயமாக முன்னேறத் துடிக்கும் எம் இளைஞர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும்படி கருத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம்.


      இன்றைய சிந்தனைகள் உங்கள் பார்வைக்காக...


       முதலில் சுய வேலை வாய்ப்பு என்றதுமே ஆர்வமாக விஜயம் செய்தமைக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.


    சரி விசயத்திற்கு போவோம்..

       சுயமாக வேலை செய்ய நினைப்பவர்கள் முதலில் நினைப்பது வேலை அல்லது தொழிலை தொடங்கிய உடனே எதிர்பார்கின்ற வருவாயை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான்..

       உங்களில் எத்தனை பேர் சுயமாய் வேலை செய்பவர்கள்.../

    முதலில் ஒன்றை மனதில் கொள்ளுங்கள்

    • எடுத்தவுடனே வரவினை எதிர்பார்பது
    • எளிய முறையிலேயே சம்பாதிக்களாம் என்கின்ற எண்ணம்
    • அதிக அளவில் வருவாயை எதிர்பார்ப்பது
    • சிந்தணைகளை சிதற விடுவது
            போன்ற காரணங்களே உங்களை சோர்ந்து போகச் செய்கிறது.

                       வெற்றி என்பது எளிதானதல்ல
         ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி திட்டமிட்டு செயல்படுத்துகிறோமோ அதன் அடிப்படையிலேயே நமக்கான வெற்றி தீர்மானம் செய்யப்படுகிறது.

    சரி சுயமாக வருவாயை பெற எண்ணியதுமே சில விசயங்களை தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்


    • உங்களது குடும்ப சூழ்நிலை 
    • நண்பர்கள் வட்டாரம்
    • முதலீடு அல்லது பணிக்கான வழி
    • தேவைப்படும் காரணிகளின் மூலக்கூறுகள்
    • தெளிவான அனுகுமுறை
    • சூழ்நிலைகளை கையாளும் திறமை
    • தன்னம்பிக்கை'
    • விடாமுயற்ச்சி
    • தலைமைப்பண்பு
    எப்படிப்பட்ட பொறுப்புகள் உங்களுக்காக இருக்கிறது என்பதை புரிந்து செயல்படுங்கள்..
      திறமைகளை நாம் தான் வளர்த்துக்கொள்ள முடியும்.

      சுயமாக வேலை செய்ய தொடங்கும் முன் நமக்கு நாமே முதலாளி என்று எண்ணாமல் நாம் தான் தொழிலாளி அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்துள்ளன என்பதை மனதினில் கொண்டு செயல்படுங்கள்.
      பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
      <
      Read more ...

      பணம் விரும்பும் மனம்...

               மாதம் ரூ.30000 நிச்சயமாக சம்பாதிக்க முடியும். இணையத்தின் வாயிலாக,,
      நீங்கள் செய்ய வேண்டியது வெறும் கிளிக் மட்டும் தான்.. இந்த மாதிரியான விளம்பரங்கள் கண்ணில் பட்டதும் உடனே கிளிக்கி உள்ளே போய் என்ன என்று பார்க்கிற இந்த பாலா போன மனசு பற்றி தாங்க இந்த பதிவுல எழுதப் போறேன்..

           என்னங்க தொழில்முனைவோருக்கான சிறந்த குறிப்பேடா இருக்கத் தான் இந்த தளம்னு சொல்லிட்டு இதென்ன தலைப்பு சம்பந்தமே இல்லாமனு கேக்குறீங்களா... 

         சரிதாங்க, நான் அறிந்த வரையில் இன்றய தேதியில் சிறந்த தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு முதலில், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை நாம் சம்பாதிக்க வேண்டியது பணம் மட்டுமல்ல என்கின்ற வகையில் கொஞ்சம் மனிதர்களையும் தான் என்கின்ற எனது கருத்தினை பதிவு செய்யவே இந்த பதிவு.. 

      பணம்...

         ஆரம்ப காலங்களில் பண்ட மற்று முறையில் வணிகம் நடந்தது,, பிறகு உப்பையும், சிப்பியையும் உபயோகத்தில் கொண்டு வந்தனர்.  பிறகு செப்பு காசு, நாணயம்,  என்று தனது ராஜ்ஜியத்தை தொடங்கி ரூபாய் நோட்டுக்களில்
      கைகளில் புரண்டு இப்போது மனிதனை ஒரு சிறிய அட்டையிலே அடக்கி வைத்த அரக்கனே பணம் என்று போற்றப்படுகிறான்...

        எல்லவற்றையுமே நாமாகவே செய்துவிட்டு மற்றவை மேலே பழி சொல்லும் சாதாரன மனித பிறவிதானே நாம்..

      ஏன் மாறத்தொடங்கினோம்../ 
      ஏன் அடிமை போலே வாழ்கிறோம்.../
      சராசரி மனிதன் தன் தேவைகளுக்கு பயன்பட எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்.../
      எதற்காக இந்த ஓட்டம்...../

      என்றாவது நினைத்து பார்க்கிறோமா../ நாம் இன்று சிறந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று../ சொல்ல முடியுமா.../

      எத்தகைய மனிதனும் ஓடிக்கொண்டே இருக்கிறான் தேடல் பலவாயினும் முடிவு பணம் மட்டும் தனே.../

      கொசுக்கடியில் கடைக்கு வெளியில் போர்வைக்கு பதில் சாக்கினை போர்த்திக்கொண்டு தூங்கும் மனிதர்கள் மறைந்து விட்டனரா.../ 

      ஏன் இந்த ஏகதிபத்தியம்.. உழைக்க தயாரக இரு.. உயர்வு நிச்சயம் என்பதை ஏன் என் இளைஞர் தம் இதயத்தில் ஏற்பதில்லை....

      எதையும் எளிதாக அடைய வேண்டும்.. முடியுமா.../

      முதலில் ஆட்டு மந்தைக்கூட்டத்தில் மிதிபட்டு, அடி பட்டு வாழும் மனப்பாங்கினை ஒழித்துக் கட்டுங்கள். 

            பணம் சம்பாதிக்க இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஊறுதி மட்டுமே உன்னுடன் இருக்க வேண்டுமல்லவா...

      தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் யாவருக்கும் உள்ள ஒற்றுமை பணம் செய்யும் நோக்கத்தில் தங்களது இனிமையான நேரங்களை தவற விட்டுவிடுவதுதான்..

      நீங்களும் பணத்தை தேடுவரா... ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

      பணம் மட்டும் வாழ்க்கையில் நிறைவை தந்துவிடாது..
      மனிதர்களையும் நேசிக்கத் தொடங்குங்கள்....
        http://www.BigExtraCash.com/aft/310a7d43.html
      Read more ...

      விளம்பரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்..

                 தொழில் முனையும் பலரும் தங்களுக்கான சந்தையினை தேர்ந்தெடுப்பதிலும் அதனை முறையாக சந்தைப்படுத்துதலிலுமே தங்களது முழு வெற்றியினை தீர்மானம் செய்ய முடியும். அத்தகைய சந்தைப்படுத்துதல் (Marketting) எனும் விளம்பர உலகம் பற்றி முழுமையாக தெரிந்து செயல்படுவது அவசியமாகும்.

           பொதுவாக நமக்கான சந்தையை தீர்மானம் செய்த பிறகு எத்தகைய முறையில் அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்தே ஒரு நல்ல விளம்பரமாவது அமைகிறது. முதலில் நாம் தீர்மானிக்க வேண்டியது

      ஒரு நல்ல விளம்பரமாவது,

      • என்ன பொருள்
      • எத்தைகைய வாடிக்கையாளர்
      • எந்த காலநிலை 
      • வெளிப்படுத்தும் விதம்
      • சென்றடையும் விதம்
      போன்ற மூலக்கூறுகளின் அடிப்படையிலே அமைகிறது


      • என்ன பொருள்
            எத்தைகய பொருளை நாம் சந்தை படுத்துகிறோம் என்பதை மனதினில் கொண்டே நமது விளம்பரம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் விற்பனை செய்யும் பொருளுக்கான மார்க்கெட் வேல்யூ ஆனது எத்தகைய நிலையில் உள்ளது, என்பதை கொண்டே நமது பொருளை விறபனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
           பொதுவாக இன்சூரன்ஸ் முகவர்கள் மற்றும் பிற எம்.எல்.எம் பிஸினஸ் செய்பவர்களுக்கு இந்த விதியானது சிறந்த முறையில் பொருந்தும், ஏனெனில் அவர்களது சந்தைப்படுத்தும் திறனானது மிகவும் உற்று நோக்க கூடிய ஒன்று. எத்தகைய பொருளை அவர்கள் விற்பனை செய்ய எண்ணுகிறார்களோ அதனை பற்றிய முழுமையான அறிவை அவர்கள் கொண்டிருப்பார்கள். அவர்களின் விற்பனையில் எத்தகைய வாடிக்கையாளர்களையும் தங்களின் பொருள் பற்றிய முழுமையான அறிவின் மூலம் வாங்கச் செய்திடும் வல்லமை பொருந்தியவர்கள்..

        பொருள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் செய்யப்படும் விளம்பரமாவது மக்களை சென்றடையாது.

       உதாரணமாக நீங்கள் ஒரு கைபேசியை சந்தை படுத்த விரும்பினால் அதன் தன்மைகளை மேலும் அதன் செயல்பாடுகள் குறித்தான விபரங்களை வாடிக்கையாளர்களிடம் முறையாக எடுத்து செல்லும் படியாக விளம்பரத்தினை தயார் செய்ய வேண்டும்.

          கேமரா, புளூடூத், mp3, டபுல் சிம் வசதி போன்ற முக்கிய மேன்மைகளை அடங்கிய கைபேசியானால் அதனை தெளிவாக மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உங்களது விளம்பரமானது அமையப்பெற வேண்டும்.

      பார்க்க,,,,,
            தங்களது உதவி எந்த நேரமும் வடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் கிடைக்கும் என்பதனை மேற்கண்ட விளம்பரத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


      • எத்தைகைய வாடிக்கையாளர்
             பொருள் பற்றிய போதிய அறிவு மட்டும் போதாது அதை வாங்க்கூடிய வாடிக்களையாளர்கள் பற்றின கண்ணேட்டமாவது மிகவும் அவசியமாகும்.  அதாவது குழந்தைகளுக்கான பேபி புட், அல்லது நேப்கின்களுக்கான விளம்பரத்தினை கல்லூரி மாணவர்களுக்க சொல்ல வேண்டும்..../

         இது போல ஒரு சில அடிப்படை கட்டமைப்பு பற்றிய அறிவினை தெளிவாக புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

      உதாரணத்திற்கு ஒரு பெண்களுக்கான பேசியல் கிரீம் பற்றிய விளம்பரம்
      தந்தை மேக்கப் மேனாக பணி புரிவார். அவரை மரியாதை குறைவாக நடிகை நடத்துவதை காணும் அவரது மகள் தன்னையும் நடிகையாக்க ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் கிரீம் மட்டுமே போதும் என்றும் அவளே சிறந்த அழகுடன் அவர்டு வாங்குவதாக வெளியிடப்பட்ட விளம்பர படமானது முற்றிலும் பெண்களுக்கானது ஆகும்.

        இதில் மிகவும் சுவாரசியமான விசயம், பெண்களுக்கே உரிதான சில பொறாமை குணங்களும் மற்றும் அவர்களின் பாச உணர்ச்சியினையும் கூட விளம்பரத்தில் காண்கிறோம். இது பொருள் மேல் இனம்புரியாத கவர்ச்சி மட்டுமல்லாது அதனை முற்றிலும் உணர்வு பூர்வமாக அனுகும் ஆலுமையை அந்த விளம்பரமானது கொண்டிருக்கிறது.

         ஒரு நல்ல விலம்பரமானது தங்களது வாடிக்கையாளர்களின் குணாதியசயங்களுடன் தன்னை சிறந்த நண்பனாக இருக்கும்படி அமையப் பெற வேண்டும் என்பதனை இதன் வாயிலாக உணர முடிகிறதல்லவா......

      மேலும் உங்களுக்காக axe விளம்பரத்தையும் இணைத்துள்ளேன்..
      இது ஆண்களை டார்கெட் பண்ணி எடுக்கப்பட்டது.







      • எந்த காலநிலை 
      எந்த கால நிலை என்பது ஒன்றுமில்லை..

           உப்பு விற்க போனேன் மழை வந்தது
          மாவு விற்க போனேன் காற்றடித்தது

      என்ற வரிகளில் தெரிந்துகொள்ளலாம்....

           தெளிவாக சொல்லுங்கள் என்கிறீர்களா....
      அட என்னங்க நம்ம அரசியல் தலைவர்கள் எப்படி சரியாக தேர்தல் நேரத்தில் மட்டும் தெளிவாக மக்கள் கண்களுக்கு தெரிகிறார்களோ அதுதாங்க சிறந்த விளம்பரம்..

       எடுத்துகாட்டாக வெயில் காலங்களில் ஏசி பற்றிய விளம்பரத்தினை அதிக அளவில் காணலாம்..

          பொதுவாக எந்த ஒரு விளம்பரமும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக மக்களை சென்றடைந்தால் தான் வெற்றி அடையும்...



      • வெளிப்படுத்தும் விதம்
      இது கமர்சியலா அது எப்படி இருக்குங்கறத பொருத்து இருக்கு.. விளம்பரத்தினை மேலும் மெருகூற்றும் எக்ஸ்ட்ரா பிரசன்டேசன் தான் வெளிப்படுத்தும் விதமாகும்.

        ஒரு சிறிய கருவை வைத்துக்கொண்டு அதை பதிய வைக்க மேற்கொள்ளப்படும் உத்திகளில் மக்கள் கண்களுக்கு அழகு பட கான்பிக்கப்பட வேண்டுமல்லவா...


      பொதுவாக மக்கள் ரசனைக்கேற்ற வகையில் கற்பனை செய்யப்படும் விளம்பரங்களே அதிக அளவில் தங்களது வேலைகளை திறம்பட செய்கின்றன்..


      சரி சார்...  அப்படியே பதிவு புடிச்சிருந்தா பக்கத்தில் உள்ள விளம்பரங்களை  எல்லாம் கிளிக் செய்யுங்களேன்..
      எனக்கு தெரியும் ஏன்னா...
      நண்பேன்டா......

        
      Read more ...

      வருமானத்திற்கு வழி செய்வோம்..


      ணையத்தின் வாயிலாக வருமானம் ஈட்டலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.. எவ்வாறாக வருமானத்தை பெறுவது என்பதை குறித்தே அனைவரின் கேள்வியுமாகும்.. எனது இந்த கேள்வியின் பயனாக வருமானததை பெறுக்கும் இணைய தளங்களினை பற்றிய விபரங்களை உங்களுக்காக ...

      பொதுவாக பணம் சம்பதிப்பது என்பது நமது திறமையின அடிப்படையிலேயே அமையும். எளிதாக சம்பாதிக்களாம் என்கிற மனப்பாங்கினை முதலில் மாற்றுங்கள்.. உண்மையான உழைப்பு இல்லாமல் எதுவும் நீடிக்காது இதுவே உண்மையும் ஆகும்.

      வீண் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தையும் கூடவே நம்பிக்கையும் இழக்காதீர்.......

      சரி விசயத்திற்கு வருவோம்,,,

      நாம் எதிர்பார்க்கும் அளவிளான பணத்தை ஈட்டுவதர்க்கு இணையத்தில் பல வேலைகள் உண்டு.. அத்தகைய இணையத்தளம் பற்றி அறியும் முன் குறைந்த அளவிலான வருவாயை ஈட்டித்தரும் இணைய தளங்கள் பற்றி இங்கே காண்போம்..

      பொதுவாக வாச் ஏட் கெட் மணி என்பன போன்ற விளம்பரங்களை இணையத்தில் உலாவும் போது நீங்கள் கண்டிருக்க கூடும். அது போன்ற வகையில் அமையப்பெற்ற ஒரு தளம் தான் கீழ் கண்டது..

      இதில் நீங்கள் பயனர் கணக்கை இலவசமாக தொடங்கலாம்.. உங்கள் கணக்கு ஆரப்பிக்கப்பட்டவுடன் உங்களுக்கான ஆர்ட்டிக்கல்ஸ் எனப்படும் வலைப்பதிப்புகள் விரியும்.

      வலைப்பதிவுகளை படிப்பதின் மூலமாக நீங்கள் வருமானத்தை ஈட்டலாம்..
      ஆமாங்க இந்த தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் அக்கவுண்டை தொடங்கியதும் உங்களுக்கு பிடித்தமான விசயங்கள் பற்றின கேட்டகிரி லிஸ்ட்டில் உள்ள மெனுவில் செலக்ட் செய்துகொள்ளுங்கள்.. சுமார் ஐப்பது வகையான தொடர்புகளை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம்.. பிறகு ஆர்ட்டிகல் பகுதியில் உள்ளவற்றை படித்து அதற்கான மதிப்பினை கீழ் இருக்கும் ஸ்டார் ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக தீர்மானித்து விட்டு பிறகு வலைபதிப்பை மூடிவிடலாம்.. இப்போது உங்கள் அக்கவுண்டில் அதற்கான தொகை ஏறி இருப்பதை காணலாம்..
      மினிமம் 50 டாலர் ஆனதும் உங்கள் பே பால் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்....

      தளத்திற்கு செல்ல கீழ் கண்ட பேனரை கிளிக் செய்யுங்கள்

      quality="high"
      type="application/x-shockwave-flash"
      WMODE="transparent"
      width="728"
      height="90"
      pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
      allowScriptAccess="always" />

      மேலும் ரெப்பரல்ஸ் எனப்படும் நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்கள் மூலமாகவும் உங்களது வருமானத்தை இதில் ஈட்ட முடியும்..

      நீங்கள் அறிமுகப்படுத்தும் நபருக்காக நீங்கள் தளா 5 டாலர் பெறுவீர்கள்..
      எனவே ஐப்பது டாலர் என்பதை வெறும் பத்து நபர்களை அறிமுகப்படுத்தவதன் மூலமாக சம்பாதிக்களாம்....

      முயற்ச்சி செய்யுங்கள்...

      முடியாதது முயலாதது மட்டுமே...

      முற்றிலும் இலவசமான இந்த தளத்தில் நீங்கள் வருமானத்தை பெறுக்க வாழ்கத்துக்களுடன் ஒரு முக்கியமான விசயம் எந்த ஒரு இணைய வேளைகளையும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுத்துங்கள்.. வெற்றி என்பது நமது கையில் மட்டும் தான் இருக்கிறது.. வெறுமனே இருந்து விட்டு ஏமாற்றுகிறார்கள் என்பது சோம்பேரியின் வாதமே ஆகும்.. தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.....

      Read more ...