வலை பதிவுகளின் வாயிலாகா டேலி பற்றின கருத்துக்களை தமிழ் மொழியில் தேடி கழித்த பின் சிறு துளி தாகம் தீர்க்கவே இந்த முயற்சி..
வனிகம், வலை பதிவு செய்யும் நண்பர்கள் தவறாமல் தகவல்களை உள்ளிட பின்னூட்டம் மூலமாக உதவுங்கள்..
டேலி (TALLY) கத்துக்கலாமா..? பகுதி 3
உண்மைய சொல்லனும்னா இதுதாங்க முதல் பகுதிங்க..
எபடியோ ரெண்டு பதிவுகளில் உங்களை வரவெச்சுட்டேன்.,,
டேலியோட எஸ்டிடி எல்லாம் நமக்கெதுக்குன்னு முந்தைய பதிவுகளில் திட்டி இருந்த நல்ல உள்ளங்களுக்கு மதிப்பு கொடுத்து இந்த பதிவுலயாவது கொஞ்சம் உள்ளே கை பிடித்து அழைத்து செல்ல முயல்கிறேன்...
எப்படியோ டேலிய நம்ம கம்யூட்டர்ல இன்ஸ்டால் செஞ்சுட்டோம்ல.. இனி வேலைய பார்போம்...
- டேலி 9 ( Tally ERP 9 )
டேலி பதிப்பை விண்டேஸ் ஸ்டார்ட் மெனு வழியாக ஓபன் செய்து கொள்ளுங்கள்.
Start ----> Programs ----> Tally ERP 9
டேலி முகப்பு பக்கம் தோன்றும் இதனை கேட் வே ஆப் டேலி (Gateway of Tally ) என்பர்.
http://www.PaisaLive.com/register.asp?3951109-5534411
கேட் வே ஆப் டேலியானது (Gateway of Tally ) பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் வலது மர்றும் இடதுபுறமாக பிரிக்கப்பட்டிருக்கின்ற இரு பகுதிகளில் தான் நமக்கு விருப்ப உள்ளீடுகளை செய்யபோகிறோம்..
கேட் வே ஆப் டேலியின் (Gateway of Tally ) இடதுபுறம் உள்ள பகுதியில் நமது கம்பெனியின் தொடக்க விவரங்களை பார்வையிடுகிறோம்.. முதலில் நமது கம்பெனியின் தொடக்க விவரங்களை உள்ளிட வேண்டுமல்லவா..? அதற்கு தான் கேட் வே ஆப் டேலியின் (Gateway of Tally ) வலது புறமாக உள்ள கம்பெனி (Company Info. ) இன்போ மெனுவை பயன் படுத்தப்போகிறோம் ..
![]() |
படத்தின் மீது கிளிக் செய்து அளவை பெரிதாக்கி பார்த்து கொள்ளுங்கள் |
கம்பெனி இன்போ மெனுவில் (Company Info. ) உள்ள கிரியேட் கம்பெனியை கிளிக் செய்வதின் மூலமாக கம்பெனி கிரியேசன் (Company Creation )உள்ளீடு பட்டையை பெறலாம். இதில் உங்களுடைய கம்பெனியின் விவரங்களை கொடுத்துக்கொள்ளுங்கள்.
![]() |
படத்தின் மீது கிளிக் செய்து அளவை பெரிதாக்கி பார்த்து கொள்ளுங்கள் |
( Company Creation ) கம்பெனி கிரியேசன் பட்டையில் பட்டையில் கெட்கபடும் தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக என்டர் கீயை உபயோபடுத்தி கொடுங்கள் இறுதியாக என்டர் கீயை சொடுக்கும் போது எளும் குட்டி பெட்டியில் எஸ் - ஐ சொடுக்கி உங்களுடைய கம்பெனனி கிரியேசன் வேலையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
இபோது உங்களுடைய கேட் வே ஆப் டேலி பக்கமானது இடது புற பட்டையில் உங்கள் கம்பெனி பற்றின விவரங்களை தெரிவித்து உன்களை கம்பீரப்படுத்துமே...?
ம்ம்ம்.. எப்படியோ கிரியேட் பன்னிட்டோம்.., அது சரிங்க ஏதவது விபரங்களை மிஸ் பன்னிருந்தா ..? அல்லது தவறாக கொடுத்துவிட்டிருந்தால் அதனை சரிபடுத்த வேண்டுமல்லவா..? அதற்காக.,,
உங்களது கீபோர்டில் உள்ள F3 கீயை அழுத்துங்கள் (அல்லது) கேட் வே ஆப் டேலியின் வலது மூலையில் உள்ள கம்பெனி இன்போ என்பதை சொடுக்கி வரும் மெனுவில் உள்ள ஆல்டர் என்பதை சொடுக்கி தங்களது கம்பெனி கிரியேசன் பட்டையில் தேவையான தவல்களை உள்ளிடவோ அல்லது மாற்றமோ செய்துகொள்ளுங்கள்..
குறிப்பு :
- கம்பெனி கிரியேசன் பட்டையில் தேவை என்றால் பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளலாம்..
- " ESC கீ " உபயோகப் படுத்தி முன்தைய மெனுவிற்கு செல்லலாம்
கம்பெனி இன்போ வில் அமைந்துள்ள மெனுக்களின் பயன் குறித்த விபரங்களை தெரிவுபடுத்திக்கொள்ளுங்கள்..
- Select Company
Allows you to Select or load a company.
- Connect Company
Allows you to Connect Company on Tally.NET
- Disconnect Company
Allows you to Disconnect Company from Tally.NET
- Shut Company
Allows you to shut a company.
- Create Company
Allows you to create a Company.
- Alter
Allows you to alter a company.
- Security Control
Allows you to create Security Levels and users & passwords.
- Change TallyVault
Allows you to secure the data by providing a TallyVault password.
- Split Company Data
Allows you to split company data across multiple period
- Backup
Allows you to take a backup of the company data.
- Restore
Allows you to restore a data backup.
டேலி பற்றின சந்தேகம் இருந்தா தயங்காம கேளுங்க.., யாருகிட்டயாவது கேட்டு பதில் சொல்லுறேன்..
அடுத்த பதிவை படிக்கும் முன் உங்களது கம்பெனியின் கணக்கு பதிவியளுக்கான விவரங்களை முன்னறே மனதினில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..
வெற்றிகரமான வியாபார காந்தங்களே...!
தொழிலில் நேர்மை வேனும்... கல்லாவுல காசு சேர்க்கும் போது கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்கனும்னு.. அண்ணன் மமுட்டி சொன்னதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கங்க... நாம ஒவ்வொரும் செய்யும் சிறிய தவறு தான் இன்னைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் நமது இந்தியாவின் மதிப்பை இழக்க வைக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்..
http://www.PaisaLive.com/register.asp?3951109-5534411
மொதல்ல தனி மனிதனாக நம்மைத் திருத்திக்கொண்டு பிறகு மற்றவரை குறை கூறுவோம்..
இந்த இனிய பொன் சுதந்திர வாரத்தில் விடியளை எதிர்நோக்கி காத்திருக்கும்
உங்கள் அன்பன்....
miga aurumayaana thodar
ReplyDeleteஉங்கள் பதிவு பயன் தரும் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteடேலி பற்றிய புதிய வலைப்பூ tamiltally.blogspot.com
அமைத்துள்ளேன்.வருகையும் ,கருத்தையும் எதிர்நோக்கும்.