வலைப்பதிவு தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் அல்லது புதிதாக துவங்கி இருந்தாலும் உங்கள் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் தரும் பின்னூட்டங்களை கொண்டே அவர்களை தொடர்பில் வைத்திருக்க முடியும்.
உங்கள் வாசகர்கள் உங்களிடம் தகவல்கள் பெற விரும்பினால் அல்லது உங்களை எளிதில் தொடர்பு கொள்ள உங்கள் வலைப்பக்கத்தில், இணையத்தளங்களை போல ( Contact US ) கான்டக்ட் அஸ் பக்கம் தனியாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா..?
குறிப்பு : பிளாக்கர் தளங்களை பயன்படுத்துவர்களுக்கு இப்பொழுது கான்டாக் அஸ் - கெட்ஜெட் தனியாகவே கிடைக்கிறது, இருப்பினும் இந்த முறையின் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் தள வாசகர்களின் கருத்துகளை பராமரிக்கவும் பயன்படுத்தவும் முடியும்.
www.drive.google.com மூலம் முதலில் உங்களுடைய கூகுள் மெயில் கணக்கை பயன்படுத்தி உள்நுழைந்து கொள்ளுங்கள். ( படம் 1.0 )
முதன் முதலாக உங்கள் டிரைவ் கணக்கில் நுழைந்ததும் கீழ்கண்டவாறு தோற்றமளிக்கும்.
கவனிக்க, : இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் தற்போதைய 2013 அப்டேட் ஆகும்.
கவனிக்க, : இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் தற்போதைய 2013 அப்டேட் ஆகும்.
![]() |
படம் 1.0 |
2. இடது புறம் காணப்படும் மெனுவை சொடுக்கி அதில் ஃபார்ம் என்பதை தேர்ந்தெடுங்கள் ( படம் 1.1 )
![]() |
படம் 1.1 |
3. இப்பொழுது உங்கள் பெயரிடப்படாத ஃபார்ம் தயாரிக்கும் பக்கம் தோன்றும். கூகுள் டிரைவ் சில வடிவமைப்புகளை உங்களுக்கு காண்பிக்கும். ( படம் 1.2 ) அவைகள் உங்கள் பக்கத்திற்கு பொருத்தமாக இருப்பின் அதில் ஒரு வடிவமைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், இல்லை என்றால் அதை புறக்கனித்துவிட்டு ஃபார்ம் கிரியேசன் பக்கத்திற்கு வாருங்கள்
![]() |
படம் 1.2 |
பிறகு உங்களுக்கு தெரியும் பக்கத்தில் கீழ் கண்டவாறு தேவையான தகவல்களை உள்ளிடுங்கள். ( படம் 1.3 )
Question Type : அம்புக்குறி மூலம் பல வகை தேர்வுகள் உங்களுக்கு கிடைக்கும், அதில்
டெக்ஸ்ட் என்பதை சொடுக்கிக் கொள்ளவும். ( பார்க்க படம் 1.4 ). பிறகு வரும்
4. பிறகு " Done " என்பதை சொடுக்கி அந்த கேள்வியை முடித்திவிட்டு மேலும் அடுத்த கேள்வி உருவாக்க கீழே உள்ள செலக்டேட் பாக்ஸ் மூலம் அடுத்த கேள்வியை உண்டாக்குங்கள். அதிலும் டெக்ஸ்ட் என்பதை தேர்ந்தெடுத்து,
கவனிக்க, நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு விதமான வேலையை உண்டாக்கிறது. உதாரணமாக ஒரு வார்த்தையில் பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு டெக்ஸ்ட் என்பதையும் , ஒரு பத்தியில் தேவைப்படும் பதிலுக்கு பாராகிராப் என்பதையும் தேர்வு செய்யுங்கள். மேலும் காணப்படும் சில ஆப்சன்களை சொடுக்கி அவைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக மூன்று டெக்ஸ் பாக்ஸ்களை உருவாக்கி முறையே 1. பெயர், 2.மின்னஞ்சல், 3.பொருள் என்றவாறு உள்ளீடு செய்துகொள்ளுங்கள்.
![]() |
படம் 1.4 |
5. அடுத்ததாக செலக்சன் பாக்சில் ( படம் 1.4 ) பாராகிராப் என்றும் தலைப்பில் "விபரம்" என்று கொடுத்து நான்காவது கேள்வியையும் கொடுத்து நிறைவு செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளும் சரியாக உள்ளதா என சோதித்து கொள்ளுங்கள். மாற்றம் இருப்பின், ஒவ்வொரு கேள்விக்கும் வலது புறம் அதை திருத்த, பிரதி செய்ய அல்லது நீக்கி விட இருக்கும் பட்டைகளை ( படம் 1.5 ) பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
![]() |
படம் 1.5 |
![]() |
படம் 1.6 |
6. இறுதியாக கீழே உள்ள send form என்பதை சொடுக்கி ( படம் 1.6 ) விரும்பினால் சமூக தளங்களில் சேர் செய்துகொள்ளுங்கள் அதற்கு முன்பாக நமக்கு முக்கியாக இதை வலைப்பூவில் பயன்படுத்த தேவையான HTML கோடை பெற Embed என்பதை சொடுக்கி வரும் குறும்பெட்டியில் உள்ள HTML நிரலியை பிரதியெடுத்துக்கொள்ளுங்கள். ( படம் 1.7 )
![]() |
படம் 1.7 |
![]() |
படம் 1.8 |
7. பிரதி எடுத்த HTML நிரலியை ( படம் 1.8 ), வலைப்பூவில் தேவையான இடுகையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாம் இப்பொழுது கான்டக் அஸ் ஃபார்ம் தயார் செய்துகொண்டிருப்பதால் அதை இடுகையில் பகிராமல், உங்கள் வலைப்பூ கணக்கில் நுழைந்து பக்க மெனு வழியாக புதிய பக்கத்தை துவங்கி அதில் HTML ஆப்சன் ( பார்க்க படம் 2.0 ) மூலமாக பிரதி எடுத்த கோடை இங்கே பதிந்துகொள்ளுங்கள். பிறகு வழக்கம் போல பப்ளிஸ் செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கிய பட்டியலில் உள்ள கேள்விகள் அனைத்தும் உங்கள் வலைப்பூவில் வெளியாகி இருக்கும். இனி உங்கள் வலை தளத்திற்கு தேவையான கான்டக் அஸ் ஃபார்ம் தயார்.
![]() |
படம் 2.0 ( பிளாக்கர் டேஸ்போர்டு வழியே உள்நுழைக ) |
கீழ்கண்டவாறான பக்கம் உங்கள் வலைப்பூவில் உருவாகி இருக்கும் சோதித்துக்கொள்ளுங்கள் ( படம் 2.1 )
![]() |
படம் 2.1 |
சரி, எல்லாமே சரியாக செய்துவிட்டோம் அல்லவா,,,,? நாம் உருவாக்கிய பக்கத்தில் யாராவது உள்ளீடு செய்தால் அதை எப்படி பார்ப்பது? கவலையே வேண்டாம் அவ்வாறு யாரெல்லாம் உள்ளீடு செஞ்சாலும் உங்கள் டிரைவ் பக்கத்தில் எக்செல் பார்மெட்டில் எளிதா பார்த்துக்கலாம். அதற்கு திரும்பவும் உங்கள் டிரைவில் உள்ள ஃபார்ம் அப்ளிகேசனை திறந்துகொள்ளுங்கள். ( படம் 3.0 )
படம் ல் உள்ளது போல மெனு பாரில் உள்ள Responses மெனுவை சொடுக்கி கீழ் வரும் பட்டியலில் Choose Response Destination ஐ தேர்வு செய்து அதில் New Spead Sheet என்பதை சொடுக்கி கிரியேட் பொத்தானை அழுத்தவும் ( படம் 3.1 ). இப்பொழுது கடைசி வேலையும் முடிந்து விட்டது.
இனி வழக்கம் போல உங்கள் வலைத்தளம் மூலம் உங்களை அனுகும் அனைத்து கேட்புகளையும், கூகுள் டிரைவில் ( படம் 4.0 )உருவாகி இருக்கும் Spread Sheet ஃபைல் மூலம் அறிந்துகொள்ளுங்கள் ( படம் 4.1 ).
![]() |
படம் 4.0 |
![]() |
படம் 4.1 |
பொதுவாக டெக்னிக்கல் பதிவுகளை எழுத தனி திறமை வேண்டும் என்பார்கள்.
இப்பொழுது நானும் உணர்கிறேன். இனி வரும் பதிவுகளில் இன்னும் எளிய முறையில் உங்களுக்கு புரியும்படி எழுத முயற்சிக்கின்றேன். தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
No comments:
Post a Comment