பகுத்தறிவு பிறந்தது..!! பேஸ்புக் நிலைத்தகவல் பதிவிற்காக பிளாக்கரில்...

பகுத்தறிவு என்ற பெயரில் எந்த ஒரு மதத்தின் சமயநெறிகளையும் முற்றிலுமாக உடைத்தெறிய வைப்பதில் எந்த ஒரு "வெங்காயமும்" விளையப்போவது இல்லை.. மாறாக அனைத்து மதத்தையும் இணைத்திட மானூட கட்டமைப்பை வலிமைப்படுத்த முயற்சியுங்கள் " பகுத்தறிவு சிங்கங்களே!!" 

இந்து சமயமோ அல்லது மற்ற இதற மத நல்லிணக்கங்களோ மனிதர்களது வாழ்வியலை நெறிபடுத்த தோன்றிய மகத்தான விசயங்களே என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.. 

கடவுள் மறுப்புக் கொள்கைகளில் நீங்கள் வேறூன்றி இருப்பதால் மட்டும் பகுத்தறிவு பயன்தந்துவிடாது.. அனைத்து விழாக்களையும் கொண்டாட பழகுங்கள்.. வேண்டுமானால் அதில் கட்டுப்பாடுகளை நவீனம் கருதி புகுத்திக்கொள்ளுங்கள்...

விழாக்கள் கொண்டாடுவதற்கே!!!

என்ற, எனது நிலைத்தகவலை தொடர்ந்து நண்பர் ஒருவருடனான விவாதமானது பின்வறுமாறு தொடர்ந்தது.,

//எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்பதை ஏற்பதற்க்கில்லை எனினும், விழா கொண்டாடுங்கள் விழா கொண்டாடுங்கள் என்று தோழர் குறிப்பிடுகிறார் ஊர்கூடி இழுக்கும் தேரைக்கூட சாதி பார்த்து இழுக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் சமூகத்தில் கொண்டாடுங்கள் விழாக்களை, 

ஊருக்குள் ஒரு அய்யனார் சேரிக்கு ஒரு அய்யனார் என்று தனித்தனி விழாக் கொண்டாடுங்கள்,

குலத்துக்கு ஒரு சாமி, சாதிக்கு ஒரு கோவில் எல்லோரும் விழா கொண்டாடுங்கள்,

ஊரும் சேரியும் தனித்தனியாய் இருக்கட்டும் என்ற ஒப்பற்ற நெறியை சொல்லியதை விழாவா கொண்டாடுங்கள்,

பகுத்தறிவாளர்களே கண்ணை மூடிக்கொள்ளுங்கள் நாங்கள் விழாக்கொண்டாட வேண்டும்.

நிச்சயம் என் குல தெய்வத்தை எல்லோரும் வணங்கி அருள் பெறட்டும் என்கிற என்னம் இருப்பின் அது தவறில்லை, அது சாதியின் அடையாளம் இருப்பின் அது தவறில்லையா??, நீங்கள் தென்மாவட்டங்களில் பார்த்தீர்களேயானால் சுடலை மாடன் மேல் சாதியினருக்கு என்று ஒருவர் தலித்துகளுக்கு என்று ஒருவர் இது முரண்பாடில்லையா? இது ஓட்டுமொத்த கொண்டாட்டங்களுக்கும் ஒற்றுமைக்கும் வழிகோலுமா??, தேர் பிரச்சனை இல்லவே இல்லை என்கிறீர்களா? ///



Thozhirkalam Arunesh   : சாதியை ஒழிக்க சொல்வதில் தவறில்லை தோழரே,,, சரி விடுங்க உங்க பேச்சுக்கே வைச்சுப்போம்... ஜாதி இருக்கறதால தான் ஒரு சில மாவட்டங்களில் சண்ட நடக்குதுன்னு சொல்றீங்க..

சரி ஜாதிய அழிச்சிடலாம். ஆமா பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அப்டி என்ன சாதி ப்பிரச்சனை காரணமா அமைஞ்சு போச்சு,, அவிக என்ன சாதி,, நாம என்ன சாதி...? எதுக்கு சண்ட வளக்கனும்..?

உங்கள் பகுத்தறிவு கொள்கைகளில் சில, கண்மூடித்தனமான மூடப்பழக்கவழக்கங்களுக்கு ஒத்ததாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள்...

சாதியால் எந்த ஒரு தீங்கும் இல்லை,,,, அது அவர் அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப தானக உருவாக்கப்பட்ட ஒரு சாதாரணமான வார்த்தை அவ்வலவு தான்... சிறூபான்மையினர் ஒடுக்கப்படவில்லை,, அவர்களாகவே ஒடுங்கி இருக்கிறார்கள்,,. உங்கள் பகுத்தறிவால் அவர்களுடைய அறியாமையை போக்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்து சிந்திக்க வேண்டுமே தவிர சாதி அழிப்பு நோக்கி மட்டுமே சிந்திக்க கூடாது... 

கருவை விடுத்து உருவை அழிக்க விரும்பினால் கரப்பான் பூச்சியை கூட சீக்கிரமா கொல்ல முடியாது... என்பதை வழியுறுத்த விருப்பியே சாதிய மறுப்பு கொள்கைகளில் நிலைப்பாட்டை எடுத்தேன்...

///நண்பர் அவர்கள் இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் என்ன சாதி என்று கேள்வி எழுப்புகிறார், எந்த பிரச்சனையும் இல்லாமலா வருகிற வருமானத்தில் பாதியை ராணுவத்துக்கு ஒதுக்கி விட்டு மக்களை வாழ்வற்ற ஏழைகளாய் அலைவிட்டிருக்கிறார்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான மதப்பிரச்சனை இதனை உலகம் அறியும் நீங்களும் அறிவீர்கள், 

சாதியால் எந்த தீங்கும் இல்லை என்று எப்படி சொல்ல முடிகிறது உங்களால் தொழிலுக்கு ஏற்ப சாதி வகுத்தார் என்கிறீர்கள், இன்றைய சூழலில் சொல்லுங்கள் எல்லாத்தரப்பு மக்களும் ஓட்டுனாராக பணிபுரிகிறார்கள், தொழில் நுட்ப பிரிவில், ஆசிரியராக,இன்னமும் பல்வேறு பணிகளில் பணிபுரிகிறார்கள் இப்போது அவரவர் பணிபுரியும் வேலைக்கு ஏற்ப சாதி மாறிவிட்டதா அந்த சாதாராண சொல் எப்படி ஒரு மனிதனின் அடையாளமாய் மாறிப்போய்விட்டதே? ஏன் இன்னமும் மாறவில்லை அவரவர் தொழில்படி.

அறியாமையை போக்க வேண்டும் என்கிறீர்கள் எது அறியாமை அதைப்போக்கும் வழிதான் என்ன என்று தான் கூறுங்களேன்

கருவை விடுத்து உருவை ‍ எதுதான் கரு உங்கள் பார்வையில் விளக்குங்கள் நண்பரே.///

Thozhirkalam Arunesh // இரு நாடுகளுக்கும் இடையேயான மதப்பிரச்சனை இதனை உலகம் /// நிச்சயாம இல்லை,, மதம் காரணமல்ல... காரணம் தான் கரணம்... புரியவில்லையா..?

சில தலைவர்களின் ஆட்டுவிக்கும் சக்திக்கு கேடயாமாக இருப்பது தான் மதமும், சாதியும். மக்களின் ஒற்றுமையை தவறாக பயன்படுத்துகிற
ார்கள். அவர்களுக்கு தேவையான காரணம் அது மதமோ, சாதியாவோ இருந்துவிடுகிறது.

மதம் தான் காரணம் சண்டைக்கு என்றால் மற்ற இதர நாடுகள் நட்பு பாராட்டாமயா நம்முடன் இருக்கிறது? 

ஒன்றுபடாத கருத்துக்களை கொண்ட இரு தலைமைகளின் தனிப்பட்ட விரோதப்போக்கே, நாளடைவில் பெரிய அளவில் ஒரு புற்றுநோயைப்போல இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் பரவி விடுகிறது. 

இங்கே கருவாக நான் பாவித்தது, அந்த ஆதரவாளர்கள் உண்மையை புரிந்துகொண்டு ஏன்? எதற்கு? என்ற எந்தை எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். துரோகிகளை புறந்தள்ள வேண்டும்.. அதைவிடுத்து மக்கள் ஒன்றுபடவே கூடாது.. ஒன்றாக இருந்தால் தானே அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று ஒற்றுமையை குழைக்க "பகுத்தறிவையும்" பயன்படுத்தாதீர்கள்!!!!

மது ஒழிப்புக்கு தீர்வு மரத்தை வெட்டுவது இல்லை. அதன் தவறை புரிந்துகொள்ள வைப்பதே!!!

( மன்னிக்கவும்.. இங்கே சாதாரண மக்களுக்கு சான்டல்யனின் சிந்தனைகள் புரியாது என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் கடவுளை படைத்திருக்கிரார்கள். பெருந்தலைவரின் நல்ல அறிவுரைகளை ஏற்காத பாமரன் கூட விரத நாட்களில் "சாமி"க்கு பயந்து மது, மாமிசத்தை தொடாமல் இருப்பான். இதை ஆரோக்கியமான சிந்தனையில் புகுத்துவதை ஆதரியுங்கள்... நமது இலக்கியங்களும், இதிகாசங்களும் பொக்கிசங்கள்.. நீங்கள் சாதி சமய மறுப்புகளின் பேரில் அதையும் இழக்க போராடுகிறீர்கள் ? )

இன்னும் பேசலாம்.. என்னை அழைத்தமைக்கு நன்றி!! ஆரோக்கியான நம் நட்புடன் தொடர்வோம்.

No comments:

Post a Comment